Category: கவிதைகள்


  • எனக்கு ஒரு வரம் வேண்டும்! உன்னைச் சிதைக்க நினைக்கும் பித்தர்கள் உன் காலடியில் வந்து விழும் படியாய் அவர்தம் சிந்தையை மாற்றிடும் ஓர் அற்புத வரம் வேண்டும்! பிரபஞ்சத் தோற்றம் முதல் பிறர் வாழத் துணை நிற்கும் பெருமை மிகு குணமே பெண் உந்தன் பெற்றிமையாம்! உந்தன் பண்புகளை ஊரே அறிந்திருந்தும் உன்மத்தம் கொண்டோர்தாம் உனை அழிக்கப் பார்க்கின்றார்! கல்லாதார் செய்தவறை கற்றவர்கள் மறந்திடலாம்! பொல்லாதார் செய்தவறை பூமியினர் மறந்திடலாம்! இல்லாதார் செய்தவறை இம்மையிலே மறந்திடலாம்! கற்றவரே…

  • மழையதுவாய் மண் வீழ்ந்து வனமதிலே ஓய்வெடுத்து ஊற்றாய்ப் பெருக்கெடுத்து ஓடையாய் உருமாறி சலசலப்பாய்க் கானகத்தே சந்தக் கவிபாடி! மண்ணகத்தே உயிர்கட்கு மாமருந்தாய் விளங்கிநிற்கும் தண்ணீராய் ஓர் வடிவம்! தரணியதன் உயிர்நாடி! ஆறாய் நதியாய் அணைகளிலே கட்டுண்டு எரியென்றும் குளமென்றும் ஈரநிலம் கடந்து கடலதிலே சங்கமிக்கும் கருணை பொழி நீராய் உலகத்து முதல் உயிர்க்கு உயிர் கொடுத்த தண்ணீரே! உலகத்து உயிர்கட்கு உயிர்நீரே தண்ணீராம்! பூமியிலே மூன்று பங்கு நீராய் நிறைந்திடினும் புவியினர்க்கு உயிர் நீரோ போதாதே எந்நாளும்!…

  • ஓ இயற்கை அன்னையே! உன்னுடைய படைப்புக்களிலேயே உன்னதமான கானகத்தின் ஊடே நான் நடந்து செல்கையில் அங்கே ஓங்கி வளர்ந்த வேங்கை மரங்கள் என் மீது மஞ்சள் மலர் தூவி எனக்கு வரவேற்பிதழ் வாசித்தன! நீ நளினமாக நடந்து செல்கையில் தோன்றும் தென்றல் மூங்கிலிடை மோதி இசைமழை பொழிந்தது! மலர்நாடும் வண்டுகளின் ரீங்காரமும் மனம் கவர் புள்ளினங்களின் குரலோசையும் வாழ்த்துப்பாடின! வண்ண வண்ண மலர்களும் பல்லுருவில் மரங்களும் சல சலக்கும் சிற்றோடை சதிராடும் மந்திகளும் காண்போரைக் கண் மயக்கும்…

  • ஓ இயற்கை அன்னையே! உன்னைக் காண்பதற்காய் மலை முகடுகளிலும் மரங்கள் நிறை வனங்களிலும் புல் மொட்டை வெளிகளிலும் அலைந்து திரிந்திருந்தேன்! அப்புறம்தான் தெரிந்துகொண்டேன்! நீ இந்தப் பிரபஞ்சமெங்கும் வியாபித்திருக்கும் விஸ்வரூபினி என்று! வான் வெளியாய் மலைத் தொடராய் வளர்ந்து நிற்கும் காடுகளாய் வண்டினமாய்ப் புள்ளினமாய் வனம் திரியும் விலங்குகளாய் வண்ண மலர்ச் செறிவாய் வானவில்லின் பொன்நிறமாய் கத்தும் கடலலையாய்க் களித்து நிற்கும் மனிதர்களாய் காயாய்க் கனியாய் கனியிடைத் தீஞ்சுவையாய் மண்ணிலே நெல் மணியாய் மண்ணிடைவாழ் நுண்ணுயிராய் எங்கும்…

  • தமிழ்க் காவியம் செய்யும் வல்லமை தெய்வம் தந்த வரமல்லவோ! மனமேடையில் கவி நாடகம் நாளும் உந்தன் பேர்சொல்லவோ! தென்றல் காற்றிலே மலர்மெல்லிதழ் தேனின் சுவை தமிழல்லவோ! சிந்தும் புன்னகை கண்டு யாருமே சிந்தை மகிழ் சுகமல்லவோ! மழை மேகமே பொழி நீருமே மண்ணுக்கது இதமல்லவோ! மஞ்சள் வானிலே ஒளிர் ஆதவன் மண்ணுயிர்க்குத் துணையல்லவோ! வண்ண ஓவியம் கண்டு உள்ளமே அன்பில் கொஞ்சும்சுகம் நூறல்லவோ! எண்ணம் ஆயிரம் நெஞ்சில் ஓடுமே என்றும் இன்பம் தருமல்லவோ! வாழ்விலே உயர் சாதனை…

  • பறவைகளைப் பாருங்கள்! பாடம் என்ன கேளுங்கள்! வரவின்றி செலவுகள் செய்யும் லாவகத்தைக் காணுங்கள்! விடியலிலே விழித்திடுமே! ஓய்வின்றி உழைத்திடுமே! இரைதேடிப் பறந்திடுமே! இசைபாடிக் களித்திடுமே! மனிதரவர் துயரமதை மாற்றிடுமே பறவைகளே! இனியகீதம் தான்பாடி! இன்பமதைச் சேர்த்திடுமே! கூடுகட்டும் நுட்பமதோ! கோடிபெறும் மனிதருக்கே! ஏடுகளில் நாம்அறியா இரகசியங்கள் எத்தனையோ! பூச்சிகளைத் தான்உண்டு காத்திடுமே தாவரமே! பூக்களிலே மகரந்தம் சேர்ப்பதுவும் ஓர்வரமே! விதைகளதும் பரவிடவே வேண்டியதைச் செய்திடுமே! வியனுலகம் பயனுறவே வித்தகமே புரிந்திடுமே! பலஇனத்துப் பறவைகளும் பழகிடுமே உறவுகளாய்! பகைமைஏதும்…

  • வாழ்வின் வளமான எதிர்காலமே! வாழ்த்தி நமைப் பாடுமே! வையம் எந்நாளும் இதை நாடுமே! வண்ணம் நிறைவாகுமே! எங்கும் எழிலார்ந்த இசைக்கோலமே! இன்பத் தமிழ் பாடுமே! என்றும் இனிதான சுவை கூடுமே! எண்ணம் இசைவாகுமே! முல்லை மலர் கோர்த்த முத்தாரமே! மூங்கில் இசை பாடுமே! முகிழும் எழிலார்ந்த கவிராகமே! முகத்தில் உறவாடுமே! தெள்ளு தமிழ்வந்து பண்பாடுமே! தேனின் சுவையாகுமே! தென்றல் அதுவாகத் தாலாட்டுமே! தேகசுகம் கூட்டுமே! கண்ணில் ஒளிவீசும் கலைஞானமே! கன்னல் தமிழ் பேசுமே! காணும் முகம் யாவும்…

  • மனிதா! மனிதா! மாறிவிடு!-பிற மனிதரை மண்ணில் வாழ விடு! அறியா மாந்தர் செய்யும் தவறை அன்பால் நீயும் திருத்திவிடு! குறைகள் இல்லா மனிதர் யார்? குணமே நிறைந்த மனிதர் யார்? குணமும் குறையும் இருந்துவிட்டாலும் குணமே கூடிட வேண்டிடுவோம்! பூமியில் வாழும் மரங்களைப் பார்! பொறுமை அவற்றின் குணமதைப் பார்! பொசுக்கும் வெயிலில் நிழலாய் அமையும் புண்ணியம் யாரே செய்திடுவார்? மண்ணில் வீழ்ந்திடும் மழைத்துளியே மண்ணுயிர்க்கெல்லாம் ஆதாரம்! மழையது முறையாய் இல்லையென்றால் மண்ணுக்கு நேர்ந்திடும் சேதாரம்! மழையது…

  • ஐம்பெரும் பூதமதால் ஆனதே இந்த பூமி! ஐம்பெரும் பூதமதால் ஆனதே மனித மேனி! ஐம்பெரும் பூதமதைப் பேணிட அகிலமிதில் ஆர்த்திடும் இயற்கையதே அவனியின் உயிர்காத்து! வலிமை மிகக்கொண்டு வையமிதில் விளங்குவதால் வாழ்த்தி நின்றோம் பூதமென்றே ஐம்பெரும் சக்திகளை! நன்மை பல செய்து நாநிலத்தைக் காத்திடினும் தீமையதும் செய்ய சிந்தை கலங்கிடுவோம்! கண்ணுக்குப் புலனாகும் காரணத்தால் ஐந்தென்றோம் காணாத ஒருபூதம் ககனமிதில் உண்டேயாம்! மறைபொருளாய்த் தானிருந்து மகிமையோடிலங்குவதால் மண்ணுயிர்க்கு அது பயக்கும் மாட்சிமிகப் பெரிதேயாம்! அணு என்ற சொல்லாலே அழைத்திடவே சக்தியதை! அணுகிடவும் கவனமுடன் ஆர்ப்பரிக்கும் பெருந்திறத்தால்! முறையோடு கையாள முழுப்பயனும் தந்திடுமே! மூச்சாக உலகுயிர்க்கு நற்கதியும் வந்திடுமே! புவியெங்கும் அணுசக்திப் போற்றிப் பரவிடவே! புதுமை பல கண்டுப் பூரித்துப் போனோமே! கையாளும் முறையதனில் கவனம் சிதறிவிடின் காட்டிடுமே கோபமதைக் காத்திடுவோம் தீவிரமாய்!

  • பூமியில் வாழும் மானிடர் யாவரும் பிறப்பால் என்றும் ஓர்நிரைஆம்! பிரிவினை பேதமை உயர்ந்தவர் தாழ்ந்தவர் அறிவிலி மாந்தரின் இழிசெயலாம்! உடம்பால் உயிரால் ஒன்றேயாயினும் உன்மதம் கொண்ட ஒருசிலரின் மடமை அதுவால் மனிதம் மறந்து மதியினை இழந்தோர் வெகுபலரே! அறியா மாந்தர் செய்திடும் தவறை அவனியர் நாமே பொறுத்திடலாம்! அறிவினில் சிறந்து அனைத்தும் உணர்ந்த கெடுமதியாளரை என்ன செய்ய! பிறப்பது பூமியில் ஒருமுறையாம்! பிறவியில் மனிதரும் ஒருமுறையாம்! பிறவியும் நிலையா! யாக்கையும் நிலையா! பெற்றிமை அதையே அறிந்திலராம்! நேற்றைய…