வாழ்வின் வளமான எதிர்காலமே!
வாழ்த்தி நமைப் பாடுமே!
வையம் எந்நாளும் இதை நாடுமே!
வண்ணம் நிறைவாகுமே!
எங்கும் எழிலார்ந்த இசைக்கோலமே!
இன்பத் தமிழ் பாடுமே!
என்றும் இனிதான சுவை கூடுமே!
எண்ணம் இசைவாகுமே!
முல்லை மலர் கோர்த்த முத்தாரமே!
மூங்கில் இசை பாடுமே!
முகிழும் எழிலார்ந்த கவிராகமே!
முகத்தில் உறவாடுமே!
தெள்ளு தமிழ்வந்து பண்பாடுமே!
தேனின் சுவையாகுமே!
தென்றல் அதுவாகத் தாலாட்டுமே!
தேகசுகம் கூட்டுமே!
கண்ணில் ஒளிவீசும் கலைஞானமே!
கன்னல் தமிழ் பேசுமே!
காணும் முகம் யாவும் உறவாகுமே!
காலம் நமைப் பாடுமே!
ஞாலம் எங்கெங்கும் நலம் மேவுமே!
நன்மை நமதாகுமே!
வாழும் புவிவாழ்வு வளமாகுமே!
வையம் நமைப் பாடுமே!

Leave a Reply