அணிலதுவும் மாம்பழத்தை ருசித்திடக் கண்டேனே! அழகான பூஞ்சிட்டு தேன்குடித்திடக் கண்டேனே! பூவிரித்த பாளையதும் பொலிந்திடக் கண்டேனே! பு ன்னைமரத் தோப்பினிலே பூங்குயில் கண்டேனே! நாகணவாய் நாட்டியமே ஆடிடக் கண்டேனே! நண்டதுவும் வளையில்சேற்றை அடைத்திடக் கண்டேனே! தேன் சிட்டு சிறகடித்துப் பறந்திடக் கண்டேனே! தெம்மாங்குப் பாட்டினிலே இசைநயம் கண்டேனே! மைனாக்கள் மையலுடன் மயங்கிடக் கண்டேனே! மஞ்சள் சிட்டு கொஞ்சலுடன் குலவிடக் கண்டேனே! மரக்கிளையில் தையல் சிட்டுப் பறவையைக் கண்டேனே! மனம் வருடும் இயற்கையதில் மயக்கம் கொண்டேனே! அணிலதுவும் மாம்பழத்தை…
காலை இளந்தென்றல் சொல்லும் சேதி என்னவோ! நான்கு திசையிலும் நாங்கள் பிரிந்ததென்ன! நாளை வரும் நல்ல நாள் என்று நானுமே வாடி இருப்பதென்ன!-(காலை) காலம் அது செய்த சோகமோ! இது துரோகமோ! கண்கள் பனிக்கின்ற நேரமோ! இது மாறுமோ! தேகம் அது செய்த வேள்வியோ! இது கேள்வியோ! மேகம் மழை தரக் கூடுமோ! இது நாடுமோ!-(காலை) பிரிவால் வாடிடும் பேதையர் எம் நெஞ்சைத் தேற்றிட! அறிவாலே அதும் ஆகுமோ! அல்லல் துயரதும் தீருமோ! பெற்று வளர்த்திட்ட பாசம்…
பகல் பிறந்ததும் இரவு சென்றதா! இரவு வந்ததும் பகல் மறைந்ததா! ஒளி பிறந்ததும் உருவம் வந்ததா! உருவம் வந்ததும் ஒளி பிறந்ததா! விதை முளைத்ததால் விருட்சம் வந்ததா! விருட்சம் வந்ததும் விதை முளைத்ததா! கேள்வி வந்ததும் பதில் கிடைத்ததா! பதில் கிடைத்ததும் கேள்வி வந்ததா! கல்வி கற்றபின் ஞானம் வந்ததா! ஞானம் வந்ததும் கல்வி வந்ததா! பண்பு வந்ததும் பணிவு வந்ததா! பணிவு வந்ததும் பண்பு வந்ததா! நிலவு வந்ததும் ஒளி பிறந்ததா! ஒளி பிறந்ததும் நிலவு…
தங்கம் உண்டு வைரம் உண்டு பூமியிலே! பொங்கும் வளம் எங்கும் அதன் மேனியிலே! கங்கையதும் காவிரியும் பாய்ந்திடுமே! கானகத்தில் வெண்ணிலவு காய்ந்திடுமே! வெய்யிலென்றும் மழையென்றும் அச்சமில்லையே!-எங்கும் வெற்றியன்றி வேறெதுவும் மிச்சமில்லையே! கைகளது துணை வரக் கவலையில்லை! கையறு நிலைக்கு என்றும் வேலையில்லை! கரும்பென்றும் வாழையென்றும் விளைந்திடுமே! கண்ணில் கருணை மழையென்றும் பொழிந்திடுமே! அரும்பிடும் மலர் மணம் கமழ்ந்திடுமே! அவனியில் நலமதும் திகழ்ந்திடுமே! விரும்பிடும் அனைத்துமே கிடைத்திடுமே! வேண்டிட இயற்கைப் படைத்திடுமே! உழைத்திட உயர்வதும் அடைந்திடவே உளம் உவப்பதனால்…
கண்கோடி வேண்டுமடி செல்லக்கிளியே! காவிரியை ரசித்திடவே செல்லக்கிளியே! காவிரித்த இருகரையும் செல்லக்கிளியே! கரை புரண்டு ஓடுதடி செல்லக்கிளியே! மண்ணுயிரைப் புறந்தருளும் மன்னுபுகழ்க் காவிரியே! மங்காத வாழ்வருளும் மாண்புடைய தாயவளே! மேற்கு மலைத் தொடரின் மேனி எழில் மேட்டினிலே மேகம் மழை பொழிய மேதினியில் தவழ்ந்திடுவாள்! தான் நடந்த பாதையெல்லாம் தன்னருள் செய்திடுவாள்! வான்மழையை முகந்து வந்து வளமதைத் திறம் புரிவாள்! பூதலத்து மக்களுக்குப் புதுவாழ்வு தர வேண்டி பொங்கி வந்து வளம் கொழிப்பாள்! பொன்மகளே காவேரி! கண்கோடி…
தென்றல் தவழ்ந்துவரும் தேனருவிக் கரையோரம்! தெம்மாங்கு பாடிவரும் தெற்குமலை அடிவாரம்! பொங்கிவரும் அருவியதும் புனைந்திடும் மணியாரம்! புல்லாங்குழல் இசையோ சேர்த்திடும் புதுராகம்! மழைமுகில் மரம்ஈர்க்க மழைஅதும் பொழிவாகும்! மழைநீர் வனம்தேக்க அருவிகள் உருவாகும்! மண்மீது நீர்பரவ மாநிலம் செழிப்பாகும்! மக்கள் மனம்குளிர மழையதும் உருவாகும்! காட்டில் மரம்செடிகள் கைகோர்த்து வாழுதம்மா! கருணை உள்ளமதை மண்ணுயிர் வாழ்த்துதம்மா! இயற்கை அன்னைஅவள் தாய்மையைப் போற்றிடுவோம்! எந்நாளும் இயற்கையதன் தலைமை ஏற்றிடுவோம்! பூமியில் மூன்றுபங்கு நீரால் நிறையுதம்மா! பொன்னேர் உழுதிடவே நெல்மணியும்…
வகைவகையாய் வளர்ந்திருக்க வளமுடனே மரமே! நகையதுவாய் விளங்கிநிற்கும் நாட்டினிற்கு வனமே! பெய்யும்மழையைப் பிடித்துவைத்துப் பெரும்பயனைத் தருமே! பேணிஅதைக் காத்துவிடில் பெருகிடும் நல்வளமே! மூன்றில்ஒரு பாகம்மண்ணில் முளைத்திட தாவரமே! மும்மாரி மண்மீது பொழிந்திட நல்வரமே! உயிர்களதன் உயிர்மூச்சாம் உயிர்வளியைத் தருமே! உயிர்கள்விடும் விடைக்காற்றை உயிர் மூச்சாய்ப் பெறுமே! மண்வளத்தைக் காப்பதனால் மன்பதையில் வளமே! மாறிடவே சூழலது மக்களுக்கு நலமே! வனம்உயிரைத் தான்சுமக்க வையமெங்கும் வளமே! வளம்பெருக மாட்சியுடன் வாழ்த்திடுமே ஜெகமே! பூவும்காயும் கனியும்தர பூமியிலே செழிப்பே! பூத்திடவே எங்கணுமே…
உயர்வான மரங்களையே உருவாக்கும் விதைகளையே ஊன்றிடவே மண்ணுக்குள் தோன்றிடுமே அதிசயமே! விதையதுவும் செடியாகி செடியதுவும் மரமாகி வியத்திடும் நன்மைகளைப் பயத்திடுமே நமக்கே! பூமலர்ந்து காயாகி காய்பழுத்துக் கனியாகி பூமியில் உயிர்களெல்லாம் புசித்திட உணவாகும்! முதிர்இலைச் சருகுகளும் முறிந்திடும் கிளைகளுமே மண்மீது வீழ்ந்திடவே மண்ணுயிர்க்கு உணவாகும்! வெய்யோனின் ஒளிக்கதிரை விரிதழையால் தான்தழுவி வியனுலகின் உயிர்களையே வேலியாய்க் காத்திடுமே! நஞ்சையே உணவாக்கி நாம்வாழ வளிஅருளி…
உலகுயிரெல்லாம் உயிர்த்திட அவர்க்கே உணவினைத் தந்திடும் தாவரமே! உணவதுமின்றி உயிர்வளியுடனே உய்த்திட உதவிடும் தாவரமே! பறவைகள் பூச்சிகள் பாம்புகள் விலங்குகள் பாரினில் வாழ்ந்திடும் பலப்பல நுண்ணுயிர் தேறிய மனிதரும் திகழ்ந்திட நலமாய் தேவைகள் அதுவே சேவை என்றாகிட உலகுயிர் முதலாய்த் தோன்றிய நீரும் உயிர்கள் உறைந்திட உவந்த நல்நிலமும் உலகினுக் களித்து உயிர்களைக் காத்திடும் உயரிய உயிரே தவரமாம்! தாவென்று எவரும் வேண்டுதலின்றி தந்திடும் வரமே தவரமாம்! தரணியில் வாழும் உயிர்கள் யாவையும் தனதாய்க் காத்திடும் தாவரமாம்!…
நீரின்றி அமையாது உலகென்றார் நெறிமுறையார்! நீரதுவே முதலுயிரின் இடமென்பார் அறிவியலார்! நீரதனின் அருமையினை அறிந்திலரே உலகியலார்! நீரதுவே உலகுயிரின் உயிர்த்துளியாம் அறிந்திடுவீர்! பூமியிதின் பெரும்பகுதி நீரதுவே ஆனாலும்! பூதலத்தார் இழிசெயலால் பொல்லாங்கு நேர்கிறதே! சாமியதைத் தான்வேண்டித் தவிக்கின்றார் நீருக்காய்! தந்துதவும் வான்மழையைப் பழிக்கின்றார் மாந்தருமே! உலகில் உய்த்திருக்கும் உயிர்கட்கு அமிழ்தமென! உயர்ந்தோர் தொழ விளங்கும் உயிர் நீர் மழையேயாம்! விசும்பின் துளியாக வியனுலகைக் காத்து இங்கே பசுமை நிறைத்திடுமே மாரியதன் கொடையதுவால்! மன்பதையில் மாட்சிமிகு காவியங்கள் தோன்றிடவே!…