Category: கவிதைகள்


  • மண்மீது மரம் நமக்கு வரமே அன்றோ!-அதை மனம் மாறி அழித்திடுதல் கொடுமை அன்றோ! கண் போலக் காப்பதுவே மரம் அல்லவோ!-அதைக் கணப்பொழுதில் குலைத்திடுதல் சாபமல்லவோ! (மண்மீது) காடுகளின் சேவையதும் மாறுவதுண்டோ!-அதன் கனிவான செயல் எதுவும் மீறுவதுண்டோ! மன்பதைக்கு ஆதாரம் இயற்கை அல்லவோ!-அதை மதிக்காமல் சிதைப்பதுமே பாவமல்லவோ! (மண்மீது) உயிர்க்காற்றை வழங்குவதில் பஞ்சமில்லையே! உயிர் நீரைத் தருவதிலும் வஞ்சமில்லையே! உவந்தளிக்கும் சேவைகளோ கொஞ்சமில்லையே! உளம் மாறி உருக்குலைக்க அஞ்சவில்லையே! (மண்மீது) கண் போல உயிர்களையே காத்திருந்தேன்!-பல கரம் கொண்டு…

  • மலையும் வனமும் சுனையும் நதியும் தோன்றியதெதற்காக! மண்ணில் வாழும் உயிர்கள் அவற்றின் மாட்சிமை அதற்காக! வானம் மேகம் ஆதவன் திங்கள் வையத்தில் எதற்காக! வாழும் உயிர்கள் வளம் பல பெற்று வாழ்ந்திட அதற்காக! நீர் வேண்டும்போது சுனை ஒன்று உண்டு! நிம்மதி வேண்ட மனம் ஒன்று உண்டு! உவப்பது வேண்ட உறவொன்று உண்டு! உள்ளம் அதிலே கருணை பொங்கிட உலகம் இதுவே நலமாகும்! உண்மை நெறியில் வாழ்ந்திட இங்கே உயர்வது வாழ்வில் நிலையாகும்! நெற்றி வியர்வை நிலத்தில்…

  • மரங்களோ பல வகை! ஒவ்வொன்றும் ஒரு வகை! மனங்களோ பல வகை! ஒவ்வொன்றும் ஒரு வகை! மரங்களெல்லாம் ஒன்றிணைந்து வனமும் ஆகலாம்! மனங்களெல்லாம் ஒன்றிணைய வையம் ஆகலாம்! வனமதுவே வாழ்வதற்குத் துணையும் செய்யலாம்! வையமதே வளம்பெறவே வாழ்த்துப்   பாடலாம்! தரணியிலே எவ்வுயிரும் தனித்து வாழ்தல் இல்லை! தனிமையிலே யாரெவரும் இனிமை காண்பதில்லை! இணைந்திடவே உயிர்கள்! இன்பமதே விளையும்! இசைந்திடவே மனங்கள்! இனிமையதே நிகழும்! மரங்களோ பல வகை! ஒவ்வொன்றும் ஒரு வகை! மனங்களோ பல வகை! ஒவ்வொன்றும்…

  • மண்ணுயிர் மகிழ்ந்தன மழையாலே! மணமது கமழ்ந்தது மலராலே! பொன்னுலகலர்ந்தது பொலிவாலே!-அங்கு பொங்கிடும் கதிரவன் ஒளியாலே!-(மண்ணுயிர்) காலையில் நான் ஒரு கனவு கண்டேன்!-அதைக் கண்களில் நிறுத்திடக் கனிவு கொண்டேன்! வாழையும் தென்னையும் வளர்ந்திருக்கும்!-அங்கே வயல்வெளியில் நெல் விளைந்திருக்கும்! சோலையில் மலர்கள் மலர்ந்திருக்க!-அதை சொர்க்கம் என்றே நான் நினைத்திருந்தேன்!-(மண்ணுயிர்) மூங்கில் குழலாய் இசைத்திருக்க!-அங்கே மொய்த்திடும் வண்டுகள் இசை கூட்ட! வேங்கை மரங்கள் மலர் சொரிய!-அந்த விந்தையில் எனை நான் மறந்துவிட்டேன்!-(மண்ணுயிர்)) ஏரி குளங்கள் நிறைந்திருக்க!-வயல் ஏர் உழும் உழவர் உழுதிருக்க!…

  • வண்ணம் நிறை மரம் வனப்பு மிஞ்சிடும்    மின்னிடும் சித்திரச் சோலையடி! தென்னாட்டில் எல்லோரும் தொழுது நிற்போம் நாளுமதே! மணக்கும் சந்தனம் மஞ்சள் கடம்புடன் மஞ்சனத்தியுமே கொஞ்சிக் குலவிட! மாநிலத்தோர் போற்றி நிற்கும் மாட்சிமை மிக்க சோலையடி! அகில் அயினி அழிஞ்சி என்று அரச மரமும் ஆத்துப் பூவரசும் அறிஞரெல்லாம் வாழ்த்தி நிற்கும் அழகு கொஞ்சும் சோலையடி! மண்ணை உழுது பொன் விளைக்கும் மானம் மிகு உழவரெல்லாம் மாமரமும் மகிழமதால் மனம் உவக்கும் சோலையடி! தென்றல் தவழும் தீங்கனி…

  • தவழும் தென்றல் காற்று!-அது தருமே ராகம் கோடி! ராகம் சங்கீதம் இசையாக-பூங் கவிதை உண்டாகுமே-பைந் தமிழைக் கொண்டாடுமே! அசையும் கொடியும் ஆடும் மரமும் அலையும் கடலும் வளையும் மூங்கில் எல்லாம் இன்பப் பண்பாடுதே!-புது இன்பம் அங்கே உண்டாகுதே! ஆற்றுநீரின் சலசலப்பை ஆழ்ந்து நோக்க இசைநயமே! ஆர்ப்பரிக்கும் அருவி நீரைக் கூர்ந்து நோக்க எழில் இசையே! சேற்றில் திரியும் பறவை குரலே சேர்த்து நிற்கும் ஏழிசையே! செம்மண் மீது மழை பொழிய சிந்தும் அங்கே இசை மழையே! இயக்கம்…

  • இதயமதில் ஒரு ராகம்! இசைத்திடுதே சுக ராகம்! இதயமதில் ஒரு ராகம்! இசைத்திடுதே சுக ராகம்! எங்கும் இயற்கை வளமது செழித்திட! இன்பமதிலே மக்கள் திளைத்திட! பொங்கும் மகிழ்வில் பூமியும் தழைத்திட! புன்னகையதுவே மலர்ந்திடுமே! மண்ணை மழையதும் உவந்தே அணைத்திட! மாட்சிமையதுவால் மக்களை இணைத்திட! மனமதில் மழையின் அருமை நினைத்திட! மங்கலமதுவும் பொங்கிடுமே! வாழை தென்னை கமுகென வளர்ந்திட! வையம் இனிதாய் பசுமையில் செழித்திட!  மேழிச்செல்வம் மேன்மை அடைந்திட! மேதினியில் நலம் நிறைந்திடுமே! இதயமதில் ஒரு ராகம்!…

  • அம்மாடி! மண்ணுக்குத் தாயின் மனசு! மங்கலம் பொங்கும் மனசு! மன்பதை காக்கும் வயசு! மக்களை ஈர்க்கும் அரசு! எண்ணிலா சுகங்களை வழங்கும்!-அதற்கு ஈடு இணை இல்லை உலகில்! கண்ணிலே மணியெனக் காக்கும்! கற்றவர் மனதை ஊக்கும்! பொன்னை அளிக்கும் தங்கச் சுரங்கம்! பூமியில் வேறு இல்லை அரங்கம்! மண்ணை மதித்து மக்கள் போற்ற மாட்சிமை தந்திலங்கும் மாதா! உணவு வழங்கி உயிர் காத்து உவந்து உயிர்களைத் தாங்கி நிற்கும் உன்னதம் நிறைந்த மண் அதனின் உத்தம குணத்தை…

  • புன்னை மரங்களுண்டு! பூம்பொழிலின் சாரலுண்டு! பொன்னெழில் பூத்ததுவே ஓவியமாய்!-அது பொழிந்திடுமே அழகினையே காவியமாய்! கருங்குயில் இசைத்திருக்கும் காவிரித்த காவிரியின் கரைகளில் தவழ்ந்திடுமே இசையமுதே!-அது காதினிலே சேர்த்திடுமே தேன் அமுதே! மாங்குயில் குடியிருக்கும் மாமரம் நிறை சோலை மஞ்சள் வான் அழகில் மயங்கியே மனமே இன்பமதால் மாறிடுமே! பொன் வண்டு இசை பாடி பூக்களில் தேன் குடிக்க பூமரம் நிறை பொன்னிக் கரையிலே பொங்கிடுமே உயிர்நீரே நுரையிலே! புன்னை மரங்களுண்டு! பூம்பொழிலின் சாரலுண்டு! பொன்னெழில் பூத்ததுவே ஓவியமாய்!-அது பொழிந்திடுமே…

  • வான் மீது வளைய வரும் வான் நிலவே!-உன் வரவினுக்காய்க் காத்திருந்தேன் வா நிலவே! தேனமுதைப் பொழிந்திருக்கும் வான் நிலவே!-மென் தென்றல் உந்தன் தோழியுடன் வா நிலவே! புவியினுக்குப் பொலிவினையே கூட்டிடுவாய்!-நனி கவிதை இன்பம் உள்ளத்திலே ஊட்டிடுவாய்! பொங்கிவரும் அலைகளையே காட்டிடுவாய்!-எங்கும் மங்காத ஒளி தீபம் ஏற்றிடுவாய்! தங்கம் நிகர் வண்ணமுடை வெண்ணிலவே!-நின் தண் எழிலில் மயங்கி நின்றேன் வெண்ணிலவே! தரணியிலே உயிர்களெல்லாம் வெண்ணிலவே!-நின் தண்மதியால் தழைக்குதிங்கே வெண்ணிலவே! பொன் எழிலைப் பூமியிலே பொன் நிலவே!-நீ பூசிடுவாய் ஆசையுடன்…