Category: கவிதைகள்


  • ஒன்று நமது பூமியே! ஒன்று நமது வாழ்க்கையே! ஒற்றுமையாய் வாழ்ந்திடில் உயர்வை நாமும் எய்தலாம்! நன்று நன்று நன்றென! நல்லவையே செய்திட! நானிலத்தின் மீதிலே! நாளும் நேரும் நன்மையே! இன்றிருப்பார் நாளையே! இல்லையென்ற போதிலே! இனியவையே நேர்ந்திட! இம்மை என்றும் இன்பமே! வென்றிடுவோம் சாதனை! வீணர்தம்மை வீழ்த்தியே! சென்று சேரும் இடமெலாம்! செய்திடுவோம் சாதனை! தேடல் என்றும் தொடர்ந்திட! நாடி ஓடும் தீமையே! நாடும் நாமும் நலம்பெற! நாற்றிசையும் பரவுவோம்! என்றுமில்லை சோகமே! எதிலுமில்லை தோல்வியே! ஏற்றிடுவோம்…

  • பூமியைப் போலே பொறுமை இருந்தால் பொங்கிடும் இன்பம் வாழ்க்கையிலே! சாமியே நமது பூமி என்றாகிட சஞ்சலம் இல்லை வாழ்க்கையிலே! உயிர்கள் வாழ்ந்திட உறைவிடமாகி உய்த்திட உதவிகள் புரிவதனாலே உன்னதமாக உலகோர் மனதில் உயர்ந்தே இலங்கும் பூமியிதே! மேனியை உழவால் மெதுவாய் நீவிட பெய்திடும் உணவை அமுத மழையென! நாணிடும் பெண்ணவள் நலமது பேணிட நானிலம் மீதினில் விளைந்திடும் நலமே! பூமியைத் தாயெனப் போற்றிடல் சுகமே! புரிந்தே வாழ்ந்திட பொங்கிடும் வளமே! நாமதன் பிள்ளை என்றிடும் போதில்! நனிமிகு…

  • பூமியில் வீழ்ந்திடும் வான்துளி போலே பொழிந்திடும் நன்மைகள் வையமிதில்! சேர்ந்திடும் நலமே! செழித்திடும்  வளமே! சீர்மிக மேவிடும் வாழ்வினிலே! நீரது சுழல! நிலமது குளிர! மேனியில் முகிழ்த்திடும் தாவரமே! தாவரம் அதுவே வரம் அதுவாக! தரணியில் எங்கும் செழுமையதே! உலகுயிர் உய்த்திட உயிர்வளி தந்து உயிர்நீரதுவும் உணவும் தந்து உவந்தே உறைந்திட உறைவிடமாகி உயிர்களைக்  காத்திடும் பூமிஇதே! குளிரும் பனியும் கொடுவெயிலும் கொட்டும் மழையும் புயலதுவும் வெட்டும் மின்னல் இடியதையும் கட்டுள் வைத்திடும் பூமிஇதே! இயற்கைப் பேரிடர் எதுவரினும்…

  • வானவெளி வீதியிலே நீந்திவரும் கோள்களுள்ளே! வாழும் உயிர் காத்திருக்கும் வளம் மிகு பூமிஇதே! கோடானு கோடியதாய்க் கோள்களும் இருந்திடவே!  வாடாது உயிர்காக்கும் வண்ணமிகு பூமிஇதே! பாடிவரும் தென்றலுமாய்ப் பசுமை வனங்களுமாய்  மாசில்லா மண்வளமாய் மாறாத பூமிஇதே! தன்மடியில் தவழ்ந்திருக்கும் தாவரமும் உயிரினமும்  தழைத்தே செழித்தடவே தந்துதவும் பூமிஇதே! அலைந்திடும் மறிகடலும் அரவணைக்கும் உயிர்களுமே அவனியில் நலம் நிறைய உயிர்த்திருக்கும் பூமிஇதே! அன்பே அருமருந்தாய் ஆன்றோர் திளைத்திருக்கும் அறியாமை இருளகற்றும் ஆன்மீக பூமிஇதே! பூமியதன் பொறையுடைமை புரியா மாந்தருமே  புரிந்திடும் இழிசெயலால் நெகிழ்ந்திடும் பூமிஇதே! அத்துணை உயிர்களுக்கும் அடித்தளமாய் இருந்து  ஆதாரமாய் விளங்கும் அன்னை இந்த பூமிஇதே! பூமியிதைக் காத்திடுதல் புவியினர் நம் கடமை! பூமியிதைப் பேணிடவே பொங்கிடும் இன்சுகமே!  புவனம் தனில் உறையும் பூதலத்து மக்களெல்லாம் போற்றிடவே பொழியும் புதுமை எங்கணுமே!

  • பச்சை வண்ண மரங்கள் என்னைப் பாடச் சொன்னது!-அங்கே பாடி வந்த பூங்குயில் தன் பாடல் மறந்தது! உச்சி வெயில் எந்தனுக்குத் தென்றலானது!-அங்கே ஓடும் நதி என் இசைக்குத் தாளமானது! வான் உயர்ந்த வரைகள் எங்கும் இன்னிசை ஒலிக்கும்!-நல்ல வண்டினங்கள் மெய்மறந்து என் கவி கேட்கும்! தேன்தமிழின்சுவையாக தெள்ளமுதாக!-என் செந்தமிழ்க் கவிதை இந்தச் செகத்தினில் பாயும்! ஆர்ப்பரிக்கும் கடல் அலையை அடக்கிடுவேன் நான்! ஆடிவரும் தென்றலுக்கு அடிபணிவேன் நான்! நாற்புறமும் நல்லவரை வணங்கிடுவேன் நான்! நல்ல மனம் அல்லோரை…

  • பூமியிதைத் தாயெனவே போற்றியே வாழ்ந்திருந்தோம்! பொல்லாத மனத்தவர்தான் பூமியிதை அழிக்கவந்தார்! உலகுயிர்க் காத்துமண்ணில் உவந்திடும் உயர்குணத்தால் உன்மத்தர் உளம்மாறி ஓர்ந்திடுவ  தெந்நாளோ! பொறுமை நிறைந்திலங்கி புவியினுக் கணிகலனாய் ஒருமை உணர்வோடே உதவிடும் தாயவளாம்! அகழ்ந்திடும் கொடியவர்தம் ஆணவம் தனைச் சகித்து இகழ்ந்திடும் கொடியரையும் ஏற்றிடும் தாயவளாம்! தாயவளின் சீதனங்கள் தரணியில் நிறைந்திருக்க நேயமுடன் வேண்டிடவே நேர்ந்திடும் நற்கதியே! அஞ்ஞானம் நிறைந்தவர்தம் ஆட்டுவிக்கும் வித்தையினை விஞ்ஞானம் வளர்த்துலகில் வென்றிடுவாள் பூமியன்னை! வாழும் அனைத்துயிரும் வளமுடனே வாழ்ந்திடவே வற்றாத நற்பயனை வழங்கி மகிழ்ந்திடுவாள்! காலம் மாறிடினும் கவலைகள் தீர்ந்திடவே களி பேருவகையுடன் கருணை புரிந்திடுவாள்! இன்னாத செய்தழியும் இழிமன மாந்தருக்கும் இனியவையே பயக்கும் எங்கள் அன்னை பூமியிதே! பூமியிதைப் போற்றிடவே புலர்ந்திடும் பொற்காலம்! சாமியிதைக் கைதொழவே சஞ்சலங்கள் தீர்ந்திடுமே!

  • ஆதவனை ஆதாரமாய்க்கொண்டு அண்டமிதில் அனைத்துயிர்க் காத்துநிற்கும் அன்னை பூமியிது! தீ, வளி, நிலம், நீர், வெளி என்னும் பூதமதால் திக்கெட்டும் உயிர்காத்துத் திகழ்ந்திடும் பூமியிது! ஐம்பெரும் பூதமதை அளவுடனே பேணி, அகிலமிதில் உயிர்கட்கு அன்னையுமாய் ஆகி, மொய்ம்புறம் தனில் எங்கும் முகிழ்த்திடும் தாவரத்தால், செய்திடும் நல்வரத்தால் சீர்மிகு பூமியிது! வானென்றும் நிலமென்றும் நதிஎன்றும் கடலென்றும் வண்டுலவும் சோலையதாய் வற்றாத நீரூற்றாய் தேனாய்ப் பாலாய்த் தீஞ்சுவைக் கனிகளுமாய்த் தேகமெங்கும் நிறைந்திலங்க தேவசுகம் தந்திடுவாள்! பூமியின் உயிர்களையே போதரவாய்த் தான் அனைத்துப் பொங்கிடும் நற்சுகத்தைப் பொழுதெல்லாம் தந்திடுவாள்! சாமியே அவளென்று சரணாகதி அடைய…

  • மரம்கொத்திப் பறவை எழுப்பிடும் ஓசை மனதுக்கு இதமாச்சு! மஞ்சள் மலர்கள் விரித்திடும் படுக்கை உடலுக்கு சுகமாச்சு! மழைவரும் முன்னே மயிலதன் ஆட்டம் கண்ணுக்கு விருந்தாச்சு! மழையதன் மகிமை மலர்ந்திடும் பசுமை மன்பதை வளமாச்சு! சிந்திய வியர்வை செம்மண்ணில் விழ தேசம் செழிப்பாச்சு! சிந்தனையில் நல் எண்ணம் தோன்றிட நேயம் பிறந்தாச்சு! வந்தனை செய்து வறியவர்க்குதவிட வையம் மகிழ்வாச்சு! வாழ்வினில் உண்மை நெறியதனைப் பேணிட வானம் வசமாச்சு! பொய்யது கலவா கவிதை புனைந்திட பூமியில் நிலையாச்சு! புன்னகையதுவே பொன்னகையாகிட…

  • மண்: மண்ணில் தோன்றிடும் யாதொரு உயிரும் மற்றொரு நாளில் மறைந்திடுமேயாம்! விண்ணில் வலம் வரும் ஞாயிறும் திங்களும் விதியதன் வழியே உலவிடுமேயாம்! நீர்: விசும்பின் மழைத்துளி வீழ்ந்திட மண்ணில் வியத்தகு விந்தை நிகழ்ந்திடும் ஆங்கே! பசும்புல் முதலாய்த் தாவரம் யாவும் பயத்திடும் நன்மை மண்ணுயிர்க்கெல்லாம்! காற்று: பூமியின் மேலே விரவிடும் காற்றே! புவி உயிர்க்கெல்லாம் உயிர்நாடி! போதரவாக நாம் அதைப் பேண புரிந்திடும் நன்மை பலகோடி! தீ: உயிர்களில் நிறைந்தே விளங்கிடும் தீயே! உயிர்களுக்கெல்லலாம் ஆதாரம்! உலகினில்…

  • பொன்னேர் கொண்டு பூமியை உழுதிட! பொழிந்திடும் பொன்னும் மணியதுவும்! தன்னிகரில்லாத் தகைமையினாலே தாயாய் நம்மைக் காத்திடுவாள்! வினை எதுமின்றி விதியதன் வழியே தினமும் பூமி சுழன்றிடுமே! நினைவது நன்றாய் நிகழ்ந்திட நன்மை! அனைவரும் நலமாய் வாழ்ந்திடுவோம்! உயிர்கள் பூமியில் உய்த்தே மகிழ்ந்திட! உதவிடுவாள் பெரும் வளமதையே! உணர்வாய் உயிராய்ப் பூமியியைப் பேணிட உவந்திடுவாள் நம் அன்னையதாய்! மண்ணுயிர் எல்லாம் மாட்சிமையுறவே மனமது குளிர்வாள் மண்மாதா! தன்னலம் கொண்டு தருக்கிடும் கொடியோர்! தன்மையைக் கண்டு நகைத்திடுவாள்! புவியதன் தோற்றம்…