மனிதா! மனிதா! மாறிவிடு!-பிற மனிதரை மண்ணில் வாழ விடு! அறியா மாந்தர் செய்யும் தவறை அன்பால் நீயும் திருத்திவிடு! குறைகள் இல்லா மனிதர் யார்? குணமே நிறைந்த மனிதர் யார்? குணமும் குறையும் இருந்துவிட்டாலும் குணமே கூடிட வேண்டிடுவோம்! பூமியில் வாழும் மரங்களைப் பார்! பொறுமை அவற்றின் குணமதைப் பார்! பொசுக்கும் வெயிலில் நிழலாய் அமையும் புண்ணியம் யாரே செய்திடுவார்? மண்ணில் வீழ்ந்திடும் மழைத்துளியே மண்ணுயிர்க்கெல்லாம் ஆதாரம்! மழையது முறையாய் இல்லையென்றால் மண்ணுக்கு நேர்ந்திடும் சேதாரம்! மழையது…
ஐம்பெரும் பூதமதால் ஆனதே இந்த பூமி! ஐம்பெரும் பூதமதால் ஆனதே மனித மேனி! ஐம்பெரும் பூதமதைப் பேணிட அகிலமிதில் ஆர்த்திடும் இயற்கையதே அவனியின் உயிர்காத்து! வலிமை மிகக்கொண்டு வையமிதில் விளங்குவதால் வாழ்த்தி நின்றோம் பூதமென்றே ஐம்பெரும் சக்திகளை! நன்மை பல செய்து நாநிலத்தைக் காத்திடினும் தீமையதும் செய்ய சிந்தை கலங்கிடுவோம்! கண்ணுக்குப் புலனாகும் காரணத்தால் ஐந்தென்றோம் காணாத ஒருபூதம் ககனமிதில் உண்டேயாம்! மறைபொருளாய்த் தானிருந்து மகிமையோடிலங்குவதால் மண்ணுயிர்க்கு அது பயக்கும் மாட்சிமிகப் பெரிதேயாம்! அணு என்ற சொல்லாலே அழைத்திடவே சக்தியதை! அணுகிடவும் கவனமுடன் ஆர்ப்பரிக்கும் பெருந்திறத்தால்! முறையோடு கையாள முழுப்பயனும் தந்திடுமே! மூச்சாக உலகுயிர்க்கு நற்கதியும் வந்திடுமே! புவியெங்கும் அணுசக்திப் போற்றிப் பரவிடவே! புதுமை பல கண்டுப் பூரித்துப் போனோமே! கையாளும் முறையதனில் கவனம் சிதறிவிடின் காட்டிடுமே கோபமதைக் காத்திடுவோம் தீவிரமாய்!
பூமியில் வாழும் மானிடர் யாவரும் பிறப்பால் என்றும் ஓர்நிரைஆம்! பிரிவினை பேதமை உயர்ந்தவர் தாழ்ந்தவர் அறிவிலி மாந்தரின் இழிசெயலாம்! உடம்பால் உயிரால் ஒன்றேயாயினும் உன்மதம் கொண்ட ஒருசிலரின் மடமை அதுவால் மனிதம் மறந்து மதியினை இழந்தோர் வெகுபலரே! அறியா மாந்தர் செய்திடும் தவறை அவனியர் நாமே பொறுத்திடலாம்! அறிவினில் சிறந்து அனைத்தும் உணர்ந்த கெடுமதியாளரை என்ன செய்ய! பிறப்பது பூமியில் ஒருமுறையாம்! பிறவியில் மனிதரும் ஒருமுறையாம்! பிறவியும் நிலையா! யாக்கையும் நிலையா! பெற்றிமை அதையே அறிந்திலராம்! நேற்றைய…
ஒன்று நமது பூமியே! ஒன்று நமது வாழ்க்கையே! ஒற்றுமையாய் வாழ்ந்திடில் உயர்வை நாமும் எய்தலாம்! நன்று நன்று நன்றென! நல்லவையே செய்திட! நானிலத்தின் மீதிலே! நாளும் நேரும் நன்மையே! இன்றிருப்பார் நாளையே! இல்லையென்ற போதிலே! இனியவையே நேர்ந்திட! இம்மை என்றும் இன்பமே! வென்றிடுவோம் சாதனை! வீணர்தம்மை வீழ்த்தியே! சென்று சேரும் இடமெலாம்! செய்திடுவோம் சாதனை! தேடல் என்றும் தொடர்ந்திட! நாடி ஓடும் தீமையே! நாடும் நாமும் நலம்பெற! நாற்றிசையும் பரவுவோம்! என்றுமில்லை சோகமே! எதிலுமில்லை தோல்வியே! ஏற்றிடுவோம்…
சுற்றும் பூமி சுற்றுவது அதனின் சூத்திரம் யார் அறிவார்! சூத்திரம் அதையே யாத்தவன் அவனின் சூட்சுமம் யார் அறிவார்! சூத்திரம் அதுவே பிறழாமல் சூட்சுமம் அதுவும் விலகாமல் சாத்திரப்படி அது நிகழ்ந்து வரும் நேர்த்தியை நாமே அறிவோமே! காலையில் எழுவதும் மாலையில் மறைவதும் கதிரவன் அவனின் செயலாமோ! வானில் உலவிடும் முழுமதி அதனின் ஒளியும் ஞாயிறு அதனாலே! ஞாயிறு போற்றிட ஞாலம் வளம்பெறும்! நாமே அதையே அறிவோமே! வாழ்ந்திடும் பூமியின் வளமதைக் குறைத்திடும் வக்கிரம் நாம்அதை அறியோமே!…
பூமியைப் போலே பொறுமை இருந்தால் பொங்கிடும் இன்பம் வாழ்க்கையிலே! சாமியே நமது பூமி என்றாகிட சஞ்சலம் இல்லை வாழ்க்கையிலே! உயிர்கள் வாழ்ந்திட உறைவிடமாகி உய்த்திட உதவிகள் புரிவதனாலே உன்னதமாக உலகோர் மனதில் உயர்ந்தே இலங்கும் பூமியிதே! மேனியை உழவால் மெதுவாய் நீவிட பெய்திடும் உணவை அமுத மழையென! நாணிடும் பெண்ணவள் நலமது பேணிட நானிலம் மீதினில் விளைந்திடும் நலமே! பூமியைத் தாயெனப் போற்றிடல் சுகமே! புரிந்தே வாழ்ந்திட பொங்கிடும் வளமே! நாமதன் பிள்ளை என்றிடும் போதில்! நனிமிகு…
பூமியில் வீழ்ந்திடும் வான்துளி போலே பொழிந்திடும் நன்மைகள் வையமிதில்! சேர்ந்திடும் நலமே! செழித்திடும் வளமே! சீர்மிக மேவிடும் வாழ்வினிலே! நீரது சுழல! நிலமது குளிர! மேனியில் முகிழ்த்திடும் தாவரமே! தாவரம் அதுவே வரம் அதுவாக! தரணியில் எங்கும் செழுமையதே! உலகுயிர் உய்த்திட உயிர்வளி தந்து உயிர்நீரதுவும் உணவும் தந்து உவந்தே உறைந்திட உறைவிடமாகி உயிர்களைக் காத்திடும் பூமிஇதே! குளிரும் பனியும் கொடுவெயிலும் கொட்டும் மழையும் புயலதுவும் வெட்டும் மின்னல் இடியதையும் கட்டுள் வைத்திடும் பூமிஇதே! இயற்கைப் பேரிடர் எதுவரினும்…
வானவெளி வீதியிலே நீந்திவரும் கோள்களுள்ளே! வாழும் உயிர் காத்திருக்கும் வளம் மிகு பூமிஇதே! கோடானு கோடியதாய்க் கோள்களும் இருந்திடவே! வாடாது உயிர்காக்கும் வண்ணமிகு பூமிஇதே! பாடிவரும் தென்றலுமாய்ப் பசுமை வனங்களுமாய் மாசில்லா மண்வளமாய் மாறாத பூமிஇதே! தன்மடியில் தவழ்ந்திருக்கும் தாவரமும் உயிரினமும் தழைத்தே செழித்தடவே தந்துதவும் பூமிஇதே! அலைந்திடும் மறிகடலும் அரவணைக்கும் உயிர்களுமே அவனியில் நலம் நிறைய உயிர்த்திருக்கும் பூமிஇதே! அன்பே அருமருந்தாய் ஆன்றோர் திளைத்திருக்கும் அறியாமை இருளகற்றும் ஆன்மீக பூமிஇதே! பூமியதன் பொறையுடைமை புரியா மாந்தருமே புரிந்திடும் இழிசெயலால் நெகிழ்ந்திடும் பூமிஇதே! அத்துணை உயிர்களுக்கும் அடித்தளமாய் இருந்து ஆதாரமாய் விளங்கும் அன்னை இந்த பூமிஇதே! பூமியிதைக் காத்திடுதல் புவியினர் நம் கடமை! பூமியிதைப் பேணிடவே பொங்கிடும் இன்சுகமே! புவனம் தனில் உறையும் பூதலத்து மக்களெல்லாம் போற்றிடவே பொழியும் புதுமை எங்கணுமே!
பச்சை வண்ண மரங்கள் என்னைப் பாடச் சொன்னது!-அங்கே பாடி வந்த பூங்குயில் தன் பாடல் மறந்தது! உச்சி வெயில் எந்தனுக்குத் தென்றலானது!-அங்கே ஓடும் நதி என் இசைக்குத் தாளமானது! வான் உயர்ந்த வரைகள் எங்கும் இன்னிசை ஒலிக்கும்!-நல்ல வண்டினங்கள் மெய்மறந்து என் கவி கேட்கும்! தேன்தமிழின்சுவையாக தெள்ளமுதாக!-என் செந்தமிழ்க் கவிதை இந்தச் செகத்தினில் பாயும்! ஆர்ப்பரிக்கும் கடல் அலையை அடக்கிடுவேன் நான்! ஆடிவரும் தென்றலுக்கு அடிபணிவேன் நான்! நாற்புறமும் நல்லவரை வணங்கிடுவேன் நான்! நல்ல மனம் அல்லோரை…
பூமியிதைத் தாயெனவே போற்றியே வாழ்ந்திருந்தோம்! பொல்லாத மனத்தவர்தான் பூமியிதை அழிக்கவந்தார்! உலகுயிர்க் காத்துமண்ணில் உவந்திடும் உயர்குணத்தால் உன்மத்தர் உளம்மாறி ஓர்ந்திடுவ தெந்நாளோ! பொறுமை நிறைந்திலங்கி புவியினுக் கணிகலனாய் ஒருமை உணர்வோடே உதவிடும் தாயவளாம்! அகழ்ந்திடும் கொடியவர்தம் ஆணவம் தனைச் சகித்து இகழ்ந்திடும் கொடியரையும் ஏற்றிடும் தாயவளாம்! தாயவளின் சீதனங்கள் தரணியில் நிறைந்திருக்க நேயமுடன் வேண்டிடவே நேர்ந்திடும் நற்கதியே! அஞ்ஞானம் நிறைந்தவர்தம் ஆட்டுவிக்கும் வித்தையினை விஞ்ஞானம் வளர்த்துலகில் வென்றிடுவாள் பூமியன்னை! வாழும் அனைத்துயிரும் வளமுடனே வாழ்ந்திடவே வற்றாத நற்பயனை வழங்கி மகிழ்ந்திடுவாள்! காலம் மாறிடினும் கவலைகள் தீர்ந்திடவே களி பேருவகையுடன் கருணை புரிந்திடுவாள்! இன்னாத செய்தழியும் இழிமன மாந்தருக்கும் இனியவையே பயக்கும் எங்கள் அன்னை பூமியிதே! பூமியிதைப் போற்றிடவே புலர்ந்திடும் பொற்காலம்! சாமியிதைக் கைதொழவே சஞ்சலங்கள் தீர்ந்திடுமே!