மண்ணிலே பொன் விளைப்பான் விவசாயி! மண்ணிலே பொன் எடுப்பான் உழைப்பாளி! மண்ணிலே வீடமைப்பான் தொழிலாளி! மண்ணிலே வனம் வளர்ப்பான் படைப்பாளி! விவசாயி! உழைப்பாளி! தொழிலாளி! படைப்பாளி! மண் உழுது விதை விதைத்து நீர் பாய்ச்ச மண்மாதா பொன் கொழிப்பாள் மகிமையதால்! மாநிலத்து மக்களெல்லாம் பசியாற மனமுவந்தே உணவளிப்பாள் மகிழ்வுடனே! மண்ணை அகழ்ந்திடவே அனுதினமும் மனமிரங்கி அருளிடுவாள் பொன்னதுவே! உடல் வியர்வை சுவை அதனை உணர்ந்தவளாய் உளமுவந்து வழங்கிடுவாள் பொன் அதையே! மண்ணிலே சுவரெடுத்து வீடுகட்டி மாளிகை கோட்டை…
ஏருபூட்டி எருதகட்டி இதமாக மண்உழுது சேறுஓட்ட இல்லையினா பொன்னம்மா!-நாம் சோறுபொங்க தோதுஇல்லே பொன்னம்மா! ஆழமாக நெலம்உழுது ஆடியிலே வெதவெதச்சி ஆத்துநீரப் பாச்சிவந்தா சின்னம்மா!-அது ஐப்பசில வெளைஞ்சி நிக்கும் சின்னம்மா! வயலக்கட்டி வரப்பக்கட்டி வரப்பில்நண்டு வலயக்கட்டி வாய்க்காலில் நீர்பாய்ச்ச பொன்னம்மா!-நெல்லு வகையாக வெளஞ்சிருக்கும் பொன்னம்மா! ஆத்தோரம் வளந்து நிக்கும் மரங்களது தழய வெட்டி சேத்திலதும் சேர்த்திடவே சின்னம்மா!-அங்கே நேர்த்தியாக நெல் விளையும் சின்னம்மா! வெளஞ்சநெல்லு கதிரறுத்து களஞ்சியத்தில் சேத்துவைக்க வெசனமில்லே சோறப்பத்தி பொன்னம்மா!-நம்ப விவசாயம் சோறு போடும் பொன்னம்மா!
சேத்திலே ஏர் உழுது செந்தண்ணி அதப் பாய்ச்சி நாத்து நட்டு கள பறிச்சா சின்னையா!-அது நல்ல படி வெளஞ்சிருக்கு பொன்னையா! சின்னையா! பொன்னையா! மரமேறித் தழைய வெட்டி மண்ணதுக்கு உரம் சேர்த்து எருது கொண்டு உழவுசெய்தோம் சின்னையா! நெல்லு ஏகமாக வெளஞ்சிருக்கு பொன்னையா! சின்னையா! பொன்னையா! பரம்படிச்சி பாத்திகட்டி பக்குவமா வெத வெதச்சி பருவம்பார்த்துப் பயிர் வளர்த்தோம் சின்னையா!-நன்மை பயத்திடவே கொழிச்சிருக்கு பொன்னையா! சின்னையா! பொன்னையா! வளந்த நெல்லுக் கதிர் அறுத்து வாகாகத் தாள் அடிச்சி குவிச்சிடவே…
மண்ணிலே பொற்குவை கண்டான்!-உயர் மானமே பெரிதென வாழ்ந்திடும் உழவன்! கண்போல மண்ணையே காத்து!-அதன் கருணையால் பூமியில் மாயங்கள் செய்வான்! விண்ணையும் மண்ணையும் சேர்த்தே-தன் வித்தையால் விந்தைகள் புரிந்திடும் தோழன்! திண்மையால் தேசத்தைக் காத்து-என்றும் உண்மையின் வழியிலே உழைப்பதும் அவனே! பொழிகின்ற மழைநீரைச் சேர்த்து-முகப் பொலிவுடன் சேற்றிலே மாட்டோடு உழன்று செழுமை மிகு செந்நெல் விளைக்கும்-எங்கள் செம்மன மாந்தரைப்போல் வேறு இலரே! மனிதர்க்கு மட்டுமல்லாது-பிற மற்றைய உயிர்கட்கும் உணவினைத் தந்து கனிவோடு வாழ்ந்திடும் அன்பன்-அவர் கதையினைச் சொல்வதே யாம்…
தென்றலது உடல் தழுவ தேனிசை மழை பொழிய தென்பொதிகைச் சந்தனமாய்க் கமழ்ந்தாள்!-என் சிந்தனையைத்தான் கவர்ந்து நின்றாள்! கவர்ந்து நின்றாள்! மன்றமதில் முகம் ஒளிர மண்ணுலகில் இருள் விலக மங்கை அவள் ஊர்வலமாய் வந்தாள்!-என் மனமதிலே உளம் கனிந்து நின்றாள்! கனிந்து நின்றாள்! விண்ணுலகு விழி அகல வெண்ணிலவு நடை பயில பொன்மகளே பூமணக்க வந்தாள்!-இந்தப் பூமியதை அரவணைத்து நின்றாள்! அணைத்து நின்றாள்! நீலவான் உடை விலக நிலவதன் முகம் மலர நிலமைகளைக் கண்டு நாணி நின்றாள்!-பிறர் நெஞ்சமதில்…
நானிலமே உன் சேவைகளை நான் என்னென்று பாராட்டுவேன்!-இங்கு வாழும் உயிர் காத்திடவே நான் உன்னிடம் மன்றாடினேன்! மரம் செடி விலங்கெனவே மக்களும் பறவைகளும் மண்ணிலே தான் காக்கும் மாட்சிமை என் சொல்ல! மழையதும் தான் தந்து மலையிடைத் தேக்கி வைத்து அனைவர்க்கும் வழங்கி நிற்கும் அன்னை மனம் என்னென்பேன்! உயிர்க் காற்றைத் தான் அளித்து உயிர் நீரும் உணவதையும் உறைவிடமும் உடையதுவும் உவந்தளிக்கும் பாங்கென்பேன்! நானிலமே உன் சேவைகளை நான் என்னென்று பாராட்டுவேன்!-இங்கு வாழும் உயிர் காத்திடவே…
கானகம் வாழும் சிறுத்தையும் புலியும் தோழர்கள் எமக்கே யார் அறிவார்! காட்டினில் உறையும் மாந்தர் எமக்கே சோதனையே இந்த மானிடர்தான்! காலம் காலமாய் இயற்கையில் இயைந்தே களித்திருந்தோம் நாம் வனமதிலே! பாழாய்ப்போன மானிடராலே வீணானது எம் உறைவிடமே! தேயிலை காபி தென்னை வளர்த்திட தேகம் அதையே சிதைக்கின்றார்! சாலைகள் சுரங்கம் அணைகள் அமைத்திட சகட்டு மேனிக்கு அழிக்கின்றார்! மலையினில் வாழ்ந்தும் மாட்சிமையில்லா மானிடரவரால் இழிநிலையே! மாறிட அவர்தம் மனமதுவே மண்ணில் மாறிடுமோ எம் துயர்நிலையே! எவ்வுயிர் தம்மையும்…
பொன்னி நதி கரைபுரள புதுமலர் மணம் கமழ பொங்கிடவே நுரை ததும்பி வந்தாள்!-இந்தப் பூவுலகில் நலம் நிறைத்து நின்றாள்! நிறைத்து நின்றாள்! தருக்கள் தலை அசைக்க தவளைகள் இசை முழக்க தளிர்க் கரத்தால் கரை தழுவி வந்தாள்!-இந்தத் தரணியிலே வளம் பெருக வந்தாள்! பெருக வந்தாள்! மக்களவர் மனம் மகிழ மங்கையர்கள் முகம் மலர மங்கலமாய் நீர் சுமந்து வந்தாள்!-இந்த மாநிலமே மாட்சி பெற வந்தாள்! பெற வந்தாள்! மலையது உளம் குளிர கடலதும் உடல் நனைய…
தோகைமயில் நடனமிட தூதுவளைக் கொடி அசைய தென்றலெனும் பெண் அவளும் வந்தாள்!-நனி தேனிசையைத் தான் சுமந்து வந்தாள்! சுமந்து வந்தாள்! பூங்குயில் இசை பொழிய பூமரங்கள் தலை அசைய பொதிகை வளர் தென்றலுமே வந்தாள்!-நறும் பூமணத்தைத் தான் சுமந்து வந்தாள்! சுமந்து வந்தாள்! மாமழை தான் பொழிய மான்கூட்டம் அதைரசிக்க மங்கை அவள் தென்றலுமே வந்தாள்!-மந்த மாருதமாய் மலைவெளியில் நின்றாள்! வந்து நின்றாள்! அருவி சலசலக்க ஆற்றுவெள்ளம் கலகலக்க அமுதமெனத் தென்றலுமே வந்தாள்!-இயற்கை அன்னையினைக் கண்டு உவகை…
முல்லை மலர் மணம் கமழ மூடுபனி அது விலக மூங்கிலதும் இசைமழையைப் பொழியுது!-அது மோகனமாய்ப் பூமியெங்கும் பரவுது! எங்கும் பரவுது! கிழக்கு வெளுத்திடவே கீழ்வானம் சிவந்திடவே கிளிகள் இணையுடனே திரியுது!-அதன் கீச்சொலியோ செவிகளிலே நிறையுது! வந்து நிறையுது! பூங்குருவி மலர் அணைய பொன்வண்டு துணை இணைய பொற்கதிரால் மேதினியே ஒளிருது!-அது புரிந்து நிற்கும் மாயமதால் மிளிருது! எங்கும் மிளிருது! கோவில் மணி ஓசையதால் குறைகள் அது விலக கொவ்வை இதழ் மங்கையரே குழுமினர்!-அழகு கோலமதால் கோவிலையே நிறுவினர்!…