பொன்னி நதி கரைபுரள புதுமலர் மணம் கமழ

பொங்கிடவே நுரை ததும்பி வந்தாள்!-இந்தப்

பூவுலகில் நலம் நிறைத்து நின்றாள்!

நிறைத்து நின்றாள்!

தருக்கள் தலை அசைக்க தவளைகள் இசை முழக்க

தளிர்க் கரத்தால் கரை தழுவி வந்தாள்!-இந்தத்

தரணியிலே வளம் பெருக வந்தாள்!

பெருக வந்தாள்!

மக்களவர் மனம் மகிழ மங்கையர்கள் முகம் மலர

மங்கலமாய் நீர் சுமந்து வந்தாள்!-இந்த

மாநிலமே மாட்சி பெற வந்தாள்!

பெற வந்தாள்!

மலையது உளம் குளிர கடலதும் உடல் நனைய

மகிமையுடன் நடை பயின்று வந்தாள்!-இங்கே

மண்ணுயிர்கள் தழைத்திடவே வந்தாள்!

தழைத்திட வந்தாள்!

(தண்ணிலவு தேனிறைக்க-பாடல் மெட்டு)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *