முல்லை மலர் மணம் கமழ மூடுபனி அது விலக
மூங்கிலதும் இசைமழையைப் பொழியுது!-அது
மோகனமாய்ப் பூமியெங்கும் பரவுது!
எங்கும் பரவுது!
கிழக்கு வெளுத்திடவே கீழ்வானம் சிவந்திடவே
கிளிகள் இணையுடனே திரியுது!-அதன்
கீச்சொலியோ செவிகளிலே நிறையுது!
வந்து நிறையுது!
பூங்குருவி மலர் அணைய பொன்வண்டு துணை இணைய
பொற்கதிரால் மேதினியே ஒளிருது!-அது
புரிந்து நிற்கும் மாயமதால் மிளிருது!
எங்கும் மிளிருது!
கோவில் மணி ஓசையதால் குறைகள் அது விலக
கொவ்வை இதழ் மங்கையரே குழுமினர்!-அழகு
கோலமதால் கோவிலையே நிறுவினர்!
அங்கே நிறுவினர்!
(தண்ணிலவு தேனிறைக்க-பாடல் மெட்டு)

Leave a Reply