தென்றலது உடல் தழுவ தேனிசை மழை பொழிய
தென்பொதிகைச் சந்தனமாய்க் கமழ்ந்தாள்!-என்
சிந்தனையைத்தான் கவர்ந்து நின்றாள்!
கவர்ந்து நின்றாள்!
மன்றமதில் முகம் ஒளிர மண்ணுலகில் இருள் விலக
மங்கை அவள் ஊர்வலமாய் வந்தாள்!-என்
மனமதிலே உளம் கனிந்து நின்றாள்!
கனிந்து நின்றாள்!
விண்ணுலகு விழி அகல வெண்ணிலவு நடை பயில
பொன்மகளே பூமணக்க வந்தாள்!-இந்தப்
பூமியதை அரவணைத்து நின்றாள்!
அணைத்து நின்றாள்!
நீலவான் உடை விலக நிலவதன் முகம் மலர
நிலமைகளைக் கண்டு நாணி நின்றாள்!-பிறர்
நெஞ்சமதில் தான் நிறைந்து நின்றாள்!
நிறைந்து நின்றாள்!
(தண்ணிலவு தேனிறைக்க-பாடல் மெட்டு)

Leave a Reply