கவிஞர் சோலை எழிலன்

கவிஞர் சோலை எழிலன்

  • எனது அறிமுகம்
  • கவிதைகள்
  • ஆசிரிய நூல்கள்
  • தொடர்பு
  • வெற்றியை நீயுமே பாடு!

    January 7, 2026
    கவிதைகள்

    வண்ணத்துப் பூச்சிக்கும் வாலாட்டிக் குருவிக்கும் சொத்து சுகம் என்பதேது!-அதன் சுறுசுறுப்பை நீயும் பாரு! கானப்புறாவுக்கும் காட்டுக்குயிலுக்கும் கல்விச்சாலை என்பதேது!-அந்த கானம் சொல்லித் தந்ததாரு! காக்கைக்குருவியும் காடை கௌதாரியும் கட்டி வாழுகின்ற கூடு!-அதில் காணும் திறமையை நாடு! பூவண்ணச் சிட்டுக்கள் பொன்வண்டு மொட்டுக்கள் பூமிக்குச் சேர்த்திடும் வண்ணம்!-அதைப் போற்றிடவே மனம் எண்ணும்! ஆடும் மயிலுக்கும் அன்றில் பறவைக்கும் நட்டுவாங்கம் சொன்னதாரு!-அதன் நாட்டியமோ வெகு ஜோரு! மின்மினிப் பூச்சியும் மீன்கொத்திப் பறவையும் மேவிடும் பூமிக்கோர் அழகு!-அதன் மேன்மையை நீயுமே பழகு!…

  • உழவு!

    January 7, 2026
    கவிதைகள்

    ஏரின் முனையைப் பேனாவாக்கி ஈரமண்ணைக் காகிதமாக்கி உழவர் எழுதும் அழகிய மொழியே! வறுமை ஓடும் பின்புற வழியே! உழுது மண்ணைப் பண்படுத்த உறையும் புழுவும் பூச்சிகளும் பறவைக்கங்கே உணவாகும்! பாடும் ராகம் நமதாகும்! விதையை மண்ணில் விதைத்த பின்னே விதைக்குத் தண்ணீர் உணவூட்ட இலைகள் அசைந்து செடி வளரும்! இனிய சூழல் உருவாகும்! பூத்து சிரிக்கும் நெல்மணிகள்! புலரும் ஆங்கே நல் அரிசி! மனிதர்க்கிங்கே உணவாகும்! மலரும் ஆங்கே புது உறவு! நெல்லின் உமியே உணவாக! நிதமும்…

  • ஓ இயற்கை அன்னையே!

    January 7, 2026
    கவிதைகள்

    அனைத்து உயிர்களின் வாழ்விற்கும் அடித்தளமாய் விளங்குவது நீயே! அவர்தம் உயிர்க் காற்றாய், உணவாய், உடையாய், உறைவிடமாய் உலகியல் வாழ்வில் உயர்வுக்கு ஆதாரமாய்! உயிர்கள்தம் தேவைக்கு உயரிய துணையாய்! எல்லாமாகி எங்கும் நிறைந்த இயற்கையே உந்தன் ஈடில்லா கருணை எத்துணை! எத்துணை! எல்லைகளற்றது! உயிருக்கு உயிராய்! உயிருக்கும் மேலாய்! உயிர்கள் உய்ய உதவியே என்றும் உயர்ந்தே விளங்கும் உயரிய இயற்கை! உயிர்கள் உய்த்திட உன் துணை வேண்டும்! உன்னைப் போற்றிடில் உயர்வதுவாகும்! உன் நிலை தாழ்ந்திடில் உயிர்வதையே யாம்!…

  • எனக்கு ஒரு வரம் வேண்டும்!

    January 7, 2026
    கவிதைகள்

    எனக்கு ஒரு வரம் வேண்டும்! உன்னைச் சிதைக்க நினைக்கும் பித்தர்கள் உன் காலடியில் வந்து விழும் படியாய் அவர்தம் சிந்தையை மாற்றிடும் ஓர் அற்புத வரம் வேண்டும்! பிரபஞ்சத் தோற்றம் முதல் பிறர் வாழத் துணை நிற்கும் பெருமை மிகு குணமே பெண் உந்தன் பெற்றிமையாம்! உந்தன் பண்புகளை ஊரே அறிந்திருந்தும் உன்மத்தம் கொண்டோர்தாம் உனை அழிக்கப் பார்க்கின்றார்! கல்லாதார் செய்தவறை கற்றவர்கள் மறந்திடலாம்! பொல்லாதார் செய்தவறை பூமியினர் மறந்திடலாம்! இல்லாதார் செய்தவறை இம்மையிலே மறந்திடலாம்! கற்றவரே…

  • நிலமகளை யாசிப்போம்!

    January 7, 2026
    கவிதைகள்

    மழையதுவாய் மண் வீழ்ந்து வனமதிலே ஓய்வெடுத்து ஊற்றாய்ப் பெருக்கெடுத்து ஓடையாய் உருமாறி சலசலப்பாய்க் கானகத்தே சந்தக் கவிபாடி! மண்ணகத்தே உயிர்கட்கு மாமருந்தாய் விளங்கிநிற்கும் தண்ணீராய் ஓர் வடிவம்! தரணியதன் உயிர்நாடி! ஆறாய் நதியாய் அணைகளிலே கட்டுண்டு எரியென்றும் குளமென்றும் ஈரநிலம் கடந்து கடலதிலே சங்கமிக்கும் கருணை பொழி நீராய் உலகத்து முதல் உயிர்க்கு உயிர் கொடுத்த தண்ணீரே! உலகத்து உயிர்கட்கு உயிர்நீரே தண்ணீராம்! பூமியிலே மூன்று பங்கு நீராய் நிறைந்திடினும் புவியினர்க்கு உயிர் நீரோ போதாதே எந்நாளும்!…

  • மடி மீது தலை வைத்து!

    January 7, 2026
    கவிதைகள்

    ஓ இயற்கை அன்னையே! உன்னுடைய படைப்புக்களிலேயே உன்னதமான கானகத்தின் ஊடே நான் நடந்து செல்கையில் அங்கே ஓங்கி வளர்ந்த வேங்கை மரங்கள் என் மீது மஞ்சள் மலர் தூவி எனக்கு வரவேற்பிதழ் வாசித்தன! நீ நளினமாக நடந்து செல்கையில் தோன்றும் தென்றல் மூங்கிலிடை மோதி இசைமழை பொழிந்தது! மலர்நாடும் வண்டுகளின் ரீங்காரமும் மனம் கவர் புள்ளினங்களின் குரலோசையும் வாழ்த்துப்பாடின! வண்ண வண்ண மலர்களும் பல்லுருவில் மரங்களும் சல சலக்கும் சிற்றோடை சதிராடும் மந்திகளும் காண்போரைக் கண் மயக்கும்…

  • என்வாழ்வே உன்கருணை!

    January 7, 2026
    கவிதைகள்

    ஓ இயற்கை அன்னையே! உன்னைக் காண்பதற்காய் மலை முகடுகளிலும் மரங்கள் நிறை வனங்களிலும் புல் மொட்டை வெளிகளிலும் அலைந்து திரிந்திருந்தேன்! அப்புறம்தான் தெரிந்துகொண்டேன்! நீ இந்தப் பிரபஞ்சமெங்கும் வியாபித்திருக்கும் விஸ்வரூபினி என்று! வான் வெளியாய் மலைத் தொடராய் வளர்ந்து நிற்கும் காடுகளாய் வண்டினமாய்ப் புள்ளினமாய் வனம் திரியும் விலங்குகளாய் வண்ண மலர்ச் செறிவாய் வானவில்லின் பொன்நிறமாய் கத்தும் கடலலையாய்க் களித்து நிற்கும் மனிதர்களாய் காயாய்க் கனியாய் கனியிடைத் தீஞ்சுவையாய் மண்ணிலே நெல் மணியாய் மண்ணிடைவாழ் நுண்ணுயிராய் எங்கும்…

  • தெய்வம் தந்த வரமல்லவோ!

    January 7, 2026
    கவிதைகள்

    தமிழ்க் காவியம் செய்யும் வல்லமை தெய்வம் தந்த வரமல்லவோ! மனமேடையில் கவி நாடகம் நாளும் உந்தன் பேர்சொல்லவோ! தென்றல் காற்றிலே மலர்மெல்லிதழ் தேனின் சுவை தமிழல்லவோ! சிந்தும் புன்னகை கண்டு யாருமே சிந்தை மகிழ் சுகமல்லவோ! மழை மேகமே பொழி நீருமே மண்ணுக்கது இதமல்லவோ! மஞ்சள் வானிலே ஒளிர் ஆதவன் மண்ணுயிர்க்குத் துணையல்லவோ! வண்ண ஓவியம் கண்டு உள்ளமே அன்பில் கொஞ்சும்சுகம் நூறல்லவோ! எண்ணம் ஆயிரம் நெஞ்சில் ஓடுமே என்றும் இன்பம் தருமல்லவோ! வாழ்விலே உயர் சாதனை…

  • பறவைகளைப் பாருங்கள்!

    January 7, 2026
    கவிதைகள்

    பறவைகளைப் பாருங்கள்! பாடம் என்ன கேளுங்கள்! வரவின்றி செலவுகள் செய்யும் லாவகத்தைக் காணுங்கள்! விடியலிலே விழித்திடுமே! ஓய்வின்றி உழைத்திடுமே! இரைதேடிப் பறந்திடுமே! இசைபாடிக் களித்திடுமே! மனிதரவர் துயரமதை மாற்றிடுமே பறவைகளே! இனியகீதம் தான்பாடி! இன்பமதைச் சேர்த்திடுமே! கூடுகட்டும் நுட்பமதோ! கோடிபெறும் மனிதருக்கே! ஏடுகளில் நாம்அறியா இரகசியங்கள் எத்தனையோ! பூச்சிகளைத் தான்உண்டு காத்திடுமே தாவரமே! பூக்களிலே மகரந்தம் சேர்ப்பதுவும் ஓர்வரமே! விதைகளதும் பரவிடவே வேண்டியதைச் செய்திடுமே! வியனுலகம் பயனுறவே வித்தகமே புரிந்திடுமே! பலஇனத்துப் பறவைகளும் பழகிடுமே உறவுகளாய்! பகைமைஏதும்…

  • காலம் நமைப் பாடுமே!

    January 7, 2026
    கவிதைகள்

    வாழ்வின் வளமான எதிர்காலமே! வாழ்த்தி நமைப் பாடுமே! வையம் எந்நாளும் இதை நாடுமே! வண்ணம் நிறைவாகுமே! எங்கும் எழிலார்ந்த இசைக்கோலமே! இன்பத் தமிழ் பாடுமே! என்றும் இனிதான சுவை கூடுமே! எண்ணம் இசைவாகுமே! முல்லை மலர் கோர்த்த முத்தாரமே! மூங்கில் இசை பாடுமே! முகிழும் எழிலார்ந்த கவிராகமே! முகத்தில் உறவாடுமே! தெள்ளு தமிழ்வந்து பண்பாடுமே! தேனின் சுவையாகுமே! தென்றல் அதுவாகத் தாலாட்டுமே! தேகசுகம் கூட்டுமே! கண்ணில் ஒளிவீசும் கலைஞானமே! கன்னல் தமிழ் பேசுமே! காணும் முகம் யாவும்…

Previous Page
1 … 7 8 9 10 11 12
Next Page
கவிஞர் சோலை எழிலன்

கவிஞர் சோலை எழிலன்

  • Instagram
  • Facebook
  • X

Powered by
...
►
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
►
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
►
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
►
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
►
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by