கவிஞர் சோலை எழிலன்

கவிஞர் சோலை எழிலன்

  • எனது அறிமுகம்
  • கவிதைகள்
  • ஆசிரிய நூல்கள்
  • தொடர்பு
  • பொன்னெழிலில் எனை மறந்து நின்றேன்!

    January 8, 2026
    கவிதைகள்

    புன்னை மரம் பூச்சொரிய பூங்குருவி இசைபயில பொன்னொளிரும் ஆதவனைக் கண்டேன்!-அந்தப் பொன்னெழிலில் எனை மறந்து நின்றேன்! மறந்து நின்றேன்! தேக்கு மரம் தலை அசைய தென்றலது தோள் தழுவ தேன்மழையில் உடல் நனைந்து நின்றேன்!-என் தேகமெல்லாம் புது சுகத்தைக் கண்டேன்! சுகத்தைக் கண்டேன்! வேங்கை மலர் இதழ் விரிய வெய்யோனின் கதிர் ஒளிர வெண்மேகம் குடைபிடிக்கக் கண்டேன்!-கொடும் வெயிலினின்றும் நான் ஒதுங்கி நின்றேன்! ஒதுங்கி நின்றேன்! அருவிகள் பொழிந்திருக்க ஆகாயம் கருத்திருக்க ஆனந்தம் நான் மிகவும் கொண்டேன்!-மேவும்…

  • ஆரணங்கு என் இதயம் கொய்தாள்!

    January 8, 2026
    கவிதைகள்

    தேன்மலர்கள் இதழ் விரிய! தென்றலது மணம் சொரிய! தேவதை என் எதிரில் வந்து நின்றாள்!-நறுந் தேன்மொழியால் எனைக் கவர்ந்து சென்றாள்! கவர்ந்து சென்றாள்! வஞ்சிஇடைக் கொடிஅசைய! வனிதை நடைதளர! அஞ்சி அஞ்சி அருகில் வந்து நின்றாள்!-அந்த ஆரணங்கு என் இதயம் கொய்தாள்! இதயம் கொய்தாள்! கண்ணசைவு கவிதை சொல்ல! காலடியில் நடந்து மெல்ல! கஞ்சமகள் எனை நெருங்கி வந்தாள்!-நற் காரிகை என் அருகில் வந்து நின்றாள்! வந்து நின்றாள்! பூவையவள் கண் மலர! பூம்பொழிலில் பூ அலர!…

  • இயற்கை அன்னை மடியினிலே!

    January 8, 2026
    கவிதைகள்

    *இயற்கை அன்னை மடியினிலே எல்லோரும் குழந்தைகளாம்! இயற்கை வளம் யாவையுமே எல்லோர்க்கும் உரிமையதாம்! காற்றும் நீரும் உணவென்று காலம் முழுதும் காத்து நிற்கும் கருணை மிக்க இயற்கையதே! கடமையிலே பிறழாதே! மரமென்றும் செடியென்றும் வனமென்றும் தாவரமாய் வளர்ந்து நின்று வையகத்தே வாழ்த்திடுமே உயிர்களையே! பொதுவான வளங்களிலே தனி உடமைக்கிடமேது! பொல்லாத மானிடர்தாம் பொல்லாங்கு செய்தனரே! ஆதவனும் வெயிலதையே அனைவருக்கும் பொது என்றான்! ஆடிவரும் தென்றலுமே அவனியெங்கும் நிறைந்திடுமே! நிலவதுவும் ஒளியினையே நீனிலத்தில் வீசிடுமே! மின்னிடும் தாரகைகள் மேதியினில்…

  • மன்பதைக்கு ஆதாரம் இயற்கை அல்லவோ!

    January 8, 2026
    கவிதைகள்

    மண்மீது மரம் நமக்கு வரமே அன்றோ!-அதை மனம் மாறி அழித்திடுதல் கொடுமை அன்றோ! கண் போலக் காப்பதுவே மரம் அல்லவோ!-அதைக் கணப்பொழுதில் குலைத்திடுதல் சாபமல்லவோ! (மண்மீது) காடுகளின் சேவையதும் மாறுவதுண்டோ!-அதன் கனிவான செயல் எதுவும் மீறுவதுண்டோ! மன்பதைக்கு ஆதாரம் இயற்கை அல்லவோ!-அதை மதிக்காமல் சிதைப்பதுமே பாவமல்லவோ! (மண்மீது) உயிர்க்காற்றை வழங்குவதில் பஞ்சமில்லையே! உயிர் நீரைத் தருவதிலும் வஞ்சமில்லையே! உவந்தளிக்கும் சேவைகளோ கொஞ்சமில்லையே! உளம் மாறி உருக்குலைக்க அஞ்சவில்லையே! (மண்மீது) கண் போல உயிர்களையே காத்திருந்தேன்!-பல கரம் கொண்டு…

  • மலையும் வனமும் சுனையும் நதியும் தோன்றிய தெதற்காக!

    January 7, 2026
    கவிதைகள்

    மலையும் வனமும் சுனையும் நதியும் தோன்றியதெதற்காக! மண்ணில் வாழும் உயிர்கள் அவற்றின் மாட்சிமை அதற்காக! வானம் மேகம் ஆதவன் திங்கள் வையத்தில் எதற்காக! வாழும் உயிர்கள் வளம் பல பெற்று வாழ்ந்திட அதற்காக! நீர் வேண்டும்போது சுனை ஒன்று உண்டு! நிம்மதி வேண்ட மனம் ஒன்று உண்டு! உவப்பது வேண்ட உறவொன்று உண்டு! உள்ளம் அதிலே கருணை பொங்கிட உலகம் இதுவே நலமாகும்! உண்மை நெறியில் வாழ்ந்திட இங்கே உயர்வது வாழ்வில் நிலையாகும்! நெற்றி வியர்வை நிலத்தில்…

  • மரங்களோ பல வகை!

    January 7, 2026
    கவிதைகள்

    மரங்களோ பல வகை! ஒவ்வொன்றும் ஒரு வகை! மனங்களோ பல வகை! ஒவ்வொன்றும் ஒரு வகை! மரங்களெல்லாம் ஒன்றிணைந்து வனமும் ஆகலாம்! மனங்களெல்லாம் ஒன்றிணைய வையம் ஆகலாம்! வனமதுவே வாழ்வதற்குத் துணையும் செய்யலாம்! வையமதே வளம்பெறவே வாழ்த்துப்   பாடலாம்! தரணியிலே எவ்வுயிரும் தனித்து வாழ்தல் இல்லை! தனிமையிலே யாரெவரும் இனிமை காண்பதில்லை! இணைந்திடவே உயிர்கள்! இன்பமதே விளையும்! இசைந்திடவே மனங்கள்! இனிமையதே நிகழும்! மரங்களோ பல வகை! ஒவ்வொன்றும் ஒரு வகை! மனங்களோ பல வகை! ஒவ்வொன்றும்…

  • மண்ணுயிர் மகிழ்ந்தன மழையாலே!

    January 7, 2026
    கவிதைகள்

    மண்ணுயிர் மகிழ்ந்தன மழையாலே! மணமது கமழ்ந்தது மலராலே! பொன்னுலகலர்ந்தது பொலிவாலே!-அங்கு பொங்கிடும் கதிரவன் ஒளியாலே!-(மண்ணுயிர்) காலையில் நான் ஒரு கனவு கண்டேன்!-அதைக் கண்களில் நிறுத்திடக் கனிவு கொண்டேன்! வாழையும் தென்னையும் வளர்ந்திருக்கும்!-அங்கே வயல்வெளியில் நெல் விளைந்திருக்கும்! சோலையில் மலர்கள் மலர்ந்திருக்க!-அதை சொர்க்கம் என்றே நான் நினைத்திருந்தேன்!-(மண்ணுயிர்) மூங்கில் குழலாய் இசைத்திருக்க!-அங்கே மொய்த்திடும் வண்டுகள் இசை கூட்ட! வேங்கை மரங்கள் மலர் சொரிய!-அந்த விந்தையில் எனை நான் மறந்துவிட்டேன்!-(மண்ணுயிர்)) ஏரி குளங்கள் நிறைந்திருக்க!-வயல் ஏர் உழும் உழவர் உழுதிருக்க!…

  • நன்மையதே நாட்டில் மேவிடுமே!

    January 7, 2026
    கவிதைகள்

    வண்ணம் நிறை மரம் வனப்பு மிஞ்சிடும்    மின்னிடும் சித்திரச் சோலையடி! தென்னாட்டில் எல்லோரும் தொழுது நிற்போம் நாளுமதே! மணக்கும் சந்தனம் மஞ்சள் கடம்புடன் மஞ்சனத்தியுமே கொஞ்சிக் குலவிட! மாநிலத்தோர் போற்றி நிற்கும் மாட்சிமை மிக்க சோலையடி! அகில் அயினி அழிஞ்சி என்று அரச மரமும் ஆத்துப் பூவரசும் அறிஞரெல்லாம் வாழ்த்தி நிற்கும் அழகு கொஞ்சும் சோலையடி! மண்ணை உழுது பொன் விளைக்கும் மானம் மிகு உழவரெல்லாம் மாமரமும் மகிழமதால் மனம் உவக்கும் சோலையடி! தென்றல் தவழும் தீங்கனி…

  • தவழும் தென்றல் காற்று!

    January 7, 2026
    கவிதைகள்

    தவழும் தென்றல் காற்று!-அது தருமே ராகம் கோடி! ராகம் சங்கீதம் இசையாக-பூங் கவிதை உண்டாகுமே-பைந் தமிழைக் கொண்டாடுமே! அசையும் கொடியும் ஆடும் மரமும் அலையும் கடலும் வளையும் மூங்கில் எல்லாம் இன்பப் பண்பாடுதே!-புது இன்பம் அங்கே உண்டாகுதே! ஆற்றுநீரின் சலசலப்பை ஆழ்ந்து நோக்க இசைநயமே! ஆர்ப்பரிக்கும் அருவி நீரைக் கூர்ந்து நோக்க எழில் இசையே! சேற்றில் திரியும் பறவை குரலே சேர்த்து நிற்கும் ஏழிசையே! செம்மண் மீது மழை பொழிய சிந்தும் அங்கே இசை மழையே! இயக்கம்…

  • இதயமதில் ஒரு ராகம்!

    January 7, 2026
    கவிதைகள்

    இதயமதில் ஒரு ராகம்! இசைத்திடுதே சுக ராகம்! இதயமதில் ஒரு ராகம்! இசைத்திடுதே சுக ராகம்! எங்கும் இயற்கை வளமது செழித்திட! இன்பமதிலே மக்கள் திளைத்திட! பொங்கும் மகிழ்வில் பூமியும் தழைத்திட! புன்னகையதுவே மலர்ந்திடுமே! மண்ணை மழையதும் உவந்தே அணைத்திட! மாட்சிமையதுவால் மக்களை இணைத்திட! மனமதில் மழையின் அருமை நினைத்திட! மங்கலமதுவும் பொங்கிடுமே! வாழை தென்னை கமுகென வளர்ந்திட! வையம் இனிதாய் பசுமையில் செழித்திட!  மேழிச்செல்வம் மேன்மை அடைந்திட! மேதினியில் நலம் நிறைந்திடுமே! இதயமதில் ஒரு ராகம்!…

Previous Page
1 … 4 5 6 7 8 … 12
Next Page
கவிஞர் சோலை எழிலன்

கவிஞர் சோலை எழிலன்

  • Instagram
  • Facebook
  • X

Powered by
...
►
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
►
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
►
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
►
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
►
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by