*இயற்கை அன்னை மடியினிலே

எல்லோரும் குழந்தைகளாம்!

இயற்கை வளம் யாவையுமே

எல்லோர்க்கும் உரிமையதாம்!

காற்றும் நீரும் உணவென்று

காலம் முழுதும் காத்து நிற்கும்

கருணை மிக்க இயற்கையதே!

கடமையிலே பிறழாதே!

மரமென்றும் செடியென்றும்

வனமென்றும் தாவரமாய்

வளர்ந்து நின்று வையகத்தே

வாழ்த்திடுமே உயிர்களையே!

பொதுவான வளங்களிலே

தனி உடமைக்கிடமேது!

பொல்லாத மானிடர்தாம்

பொல்லாங்கு செய்தனரே!

ஆதவனும் வெயிலதையே

அனைவருக்கும் பொது என்றான்!

ஆடிவரும் தென்றலுமே

அவனியெங்கும் நிறைந்திடுமே!

நிலவதுவும் ஒளியினையே

நீனிலத்தில் வீசிடுமே!

மின்னிடும் தாரகைகள்

மேதியினில் வலம் வருமே!

இயற்கை அன்னை மடியினிலே

எல்லோரும் குழந்தைகளாம்!

இயற்கை வளம் யாவையுமே

எல்லோர்க்கும் உரிமையதாம்! (இயற்கை அன்னை தந்ததெல்லாம்-பாடல் மெட்டு)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *