தேன்மலர்கள் இதழ் விரிய! தென்றலது மணம் சொரிய!

தேவதை என் எதிரில் வந்து நின்றாள்!-நறுந்

தேன்மொழியால் எனைக் கவர்ந்து சென்றாள்!

கவர்ந்து சென்றாள்!

வஞ்சிஇடைக் கொடிஅசைய! வனிதை நடைதளர!

அஞ்சி அஞ்சி அருகில் வந்து நின்றாள்!-அந்த

ஆரணங்கு என் இதயம் கொய்தாள்!

இதயம் கொய்தாள்!

கண்ணசைவு கவிதை சொல்ல! காலடியில் நடந்து மெல்ல!

கஞ்சமகள் எனை நெருங்கி வந்தாள்!-நற்

காரிகை என் அருகில் வந்து நின்றாள்!

வந்து நின்றாள்!

பூவையவள் கண் மலர! பூம்பொழிலில் பூ அலர!

பொன்மகளே தலை குனிந்து வந்தாள்!-தென்

பொதிகை வளர் தென்றலென நின்றாள்!

வந்து நின்றாள்!

(தண்ணிலவு தேனிறைக்க-பாடல் மெட்டு)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *