கானகமே! மரச்செறிவே! கானுறையும் விலங்குகளே! கலகலக்கும் பறவைகளே! கமகமக்கும் மலரினமே! கடுவினையால் கலங்கிநிற்கும் நிலையேனோ எந்தனுக்கே! கடிதுவந்தே காரணத்தை விளக்கிடுவீர் தோழர்களே! மரங்களதை முறித்தேனோ! மனமதுவால் சபித்தேனோ! மாசறியா விலங்குகளின் உயிரதையும் குடித்தேனோ! மகிழ்ந்திருக்கும் பறவைகளின் கூடுகளைக் கலைத்தேனோ! மணமணக்கும் மலர்களதன் மணமதையே முகர்ந்தேனோ! காலமெல்லாம் உங்களையே காப்பதிலே கழித்தேனே! கங்குல் பகல் பாராமல் கடுமையதாய் உழைத்தேனே! ஞாலமிதில் நான்நிதமும் நல்வினையில் திளைத்தேனே! நலிவதுவால் மனம்கலங்கும் நிலையெனக்கு ஏன்தானோ! பனிமலரே! பறவைகளே! பாதகமே ஏன்தானோ! கவிகொஞ்சும் கானகமே…
மலைமீது வளர்கின்ற பொழில்சோலை கண்டேன்! -அதன் மாறாத எழிற்கோலம் தனைக்கண்டு நின்றேன்! வனம் இல்லாமல் புவிமீது உயிர் ஒன்றும் இல்லை! -அதன் வளம் இன்றி யாரெவரும் உய்த்திடுதல் இல்லை! பனிமலராடும் ஓடையிலே உறுமீன்கள் ஆட-அதன் பாங்கான உருகண்டு பறவையதும் ஓட பசுந்தளிர்க் கொடியும் இளவெயிலில் தானாக வாட-நனி பகலவனும் வான்மீது தேரேறி வந்தான்! பசும் பட்டாடை அதுவாகக் குளிர்சோலை மாற -அதன் பகட்டான அழகாலே பல்லுயிரும் பேண பகையின்றி உறவாடும் உயிர்களதும் நாண-மிகு பாசம் நிறை உயிர்களுமே…
அழகான எழில் சூழ்ந்த மலைச்சாரலில்-உந்தன் அருள் பொங்கும் முகம்தன்னை நான் காண்கிறேன்! அமுதன்ன உயிர்நீரைத் தான்தந்திடும்-உந்தன் அன்பிற்கு ஈடிங்கு இணையே இல்லை! மழைமேகம் உன்மீது நடமாடிடும் -அந்த மகத்தான தருணத்தில் நிலை மாறினேன்! மாறாத உன் அழகில் தான் மயங்கியே-உந்தன் மடிமீது தலைவைக்க உளம் நாடினேன்! மலையென்றும் வனமென்றும் உன்மேனியில் -ஒரு மாக்கோலம் உருவாக எழில் சூழ்ந்திடும்! மழைபெய்து உன்மேனி நீர்சூழ்ந்திட -மண்ணில் மனம்கவரும் உயிரினங்கள் தான் தோன்றிடும்! கடல் வானும் கனிவாக உன்தோற்றமே -ஒரு கருத்தான…
கண்ணின் கருவிழி காத்திடும் இமையாய் காத்திட இயற்கை நமதாகும்! மண்ணில் வளமாய் வளர்ந்திடும் மரங்கள் மனிதர்க்கு என்றும் உறவாகும்! எண்ணம் உயர்வாய் இனியவை செய்திட எல்லா உயிர்களும் உனை நாடும்! பண்ணிட நற்செயல் பகலவன் போலே பைந்தமிழ் அதுவே உனைப்பாடும்! விண்ணில் வலம் வரும் வெய்யோன் கதிரே வியனுலகிதற்கே உயிராகும்! வெண்ணிலவதனின் தண்ணொளியதுவால் மண்ணில் உறவுகள் உருவாகும்! இன்னல் களையும் இதந்தரு இதயம் எல்லா உயிர்க்கும் வரமாகும்! இப்புவிமீதில் உழைத்திடும் கரங்கள் எளியோர்தமக்கே உரமாகும்!
பூமழை தூவ தருக்களுமே இந்த பூமியும் மணக்கிறதே! பூரண நிலவோ தண்ணொளியால் இந்த பூமியை நனைக்கிறதே! மாயங்கள் செய்யும் தாரகைகளுமே விழியதை இமைக்கிறதே! மண்ணில் வளரும் பயிர்களுமே இங்கு விதைகளை சுமக்கிறதே! காவிரி நதியில் நீந்திடும் மீன்கள் துள்ளிக் குதிக்கிறதே! கரையினில் தவமே புரிந்திடும் கொக்கு உள்ளம் களிக்கிறதே! இசைமழை பொழிய கோவில் மணியால் இனிமை சேர்கிறதே! இயங்கிடும் உழைக்கும் மனிதர்களாலே வளமை நேர்கிறதே! மலர்ந்திடும் மலர்கள் மகிழ்ந்திடவே நறு மணமதை வீசிடுதே! மரக்கிளைதனிலே முயங்கிடும் கிளிகள்…
சேற்றினில் உழன்று ஆற்றினில் தவழ்ந்து செந்நெல் வயலில் ஆடி நின்றோம்! சிந்தையில் சீலம் செயலதில் வீரம் சிறப்புடனே நாம் வாழ்ந்திருந்தோம்! பரியினை சுமந்தும் படிப்பதில் சிறந்து பல்கலை வித்தகம் புரிந்திருந்தோம்! பரணியில் அமர்ந்தும் பயிர்களைக் காத்தும் பல்லுயிர் தமையே பேணி வந்தோம்! மாடுகள் அதுவே மனம்நிறை துணையாய் மண்ணை உழுது பயிர் வளர்த்தோம்! மண்மகள் கருணை பொழிந்ததனாலே மாட்சிமையுடனே மகழ்ந்திருந்தோம்! தந்தையின் வழியில் தகைசால் குணத்தால் தலையது நிமிர்ந்து நடந்திருந்தோம்! தமிழதன் அருளால் தக்கவர் துணையொடு தகுதியில்…
வான்மேகம் கருணையினால் சீர்மேவும்! வாராத இன்பம் இங்கு தோதாகும்! கோடானு கோடிசுகம் தானாகத் தேடிவரும்! நாள்தோறும் நன்மை எய்தலாம்! கண்ணிலே அன்பும் உண்டு! கனிவும் உண்டு! காதல் உண்டு! மண்ணிலே வாழும் உயிர் தன்னைக் காக்கும் தியாகம் உண்டு! உள்ளத்தில் நேசம் உண்டு! ஒன்றாகும் பாசம் உண்டு! ஊராரும் போற்றும் வண்ணம் சீராட்டும் நெஞ்சம் உண்டு! நேராத நிம்மதியும் நேராதோ! ஏரோட்டும் எங்கள் வாழ்வு தேறாதோ! கருவுற்ற பெண்ணைப் போலே கண் மயங்கும் நெல்லம்மா! கழனியெல்லாம் எழில்…
நிலம் உழுது பயிர் வளர்க்க நிம்மதி ஆச்சு! நெஞ்சில் நேயமுடன் உழைத்திடவே துயரதும் போச்சு! வளம் நிறைய வையமிதில் நலமதும் ஆச்சு! வாழ்க்கை வாழ்வதற்கே என்பதுவே உலகினர் பேச்சு! பூமியிதே செழிப்பதுவும் இயற்கையினாலே! புதுமையதும் நிகழ்வதுவும் மனிதரினாலே! உலகமிதும் உயர்வதுவும் உழைப்பதனாலே! உயிர்கள் மகிழ்வுடனே உய்ப்பதுவும் உழவதனாலே! உழவதுவே உலகமிதில் உயர்தொழிலாமே! உண்மையோடு செய்திடவே வளர்எழிலாமே! பலகுடையும் பகிர்ந்திடுமே உழவதன் மாட்சி! பாரினிலே நிகழ்வதுவே உழவரின் ஆட்சி! உழுபவரைத் தொழுதிடவே உய்த்திடும் வாழ்வே! உதவிகளே புரிந்திடவே விலகிடும்…
காலையில் துயில் எழுந்து காளைகளின் துணையுடனே துணையுடனே கழனியை வந்தடைவோம் செல்லையா! செல்லையா! கதிரதும் வெளஞ்சிருக்கும் செல்லையா! கதிரதை அறுத்திடுவோம்! களத்துமேட்டில் அடித்திடுவோம்! கண்ணிலே களங்கமில்லே! செல்லையா! காலமகள் துணையிருப்பாள்! செல்லையா! உழுது பயிர் வளர்ப்போம்! உலகுயிர்க்கே படி அளப்போம்! உண்மை வழி நடந்திடுவோம்! செல்லையா! உள்ளமதில் கவலை இல்லே! செல்லையா! எருதுகள் துணையுடனே ஏற்றமதில் நீர் இறைப்போம்! இரவும் பகலதுவும் செல்லையா! எந்நாளும் உழைத்திருப்போம்! செல்லையா! மண் பிசைந்து உழுதிடவே! மணி மணியாய் நெல் விளையும்!…
உழவனுக்கோ மிஞ்சவில்லை உழக்கதுவும் உழவதனால்! உழைப்பவனோ வாடுகின்றான் வறுமையதன் தோழமையால்! பாடுபடும் தொழிலாளி பதைக்கின்றான் பட்டினியால்! பாரினிலே இதை மாற்ற யாரொருவர் முனையவில்லை! காளையொடு உழைத்தேகி கழனியிலே நெல்விளைத்தும் கால்வயிறும் நிரம்பாமல் கலங்கிநிற்கும் விவசாயி! கடும் வெயிலில் உடல் உருகி கண்மயங்க உழைத்தபின்னும் கதியின்றித் தடுமாறிக் களைத்திருக்கும் உழைப்பாளி! கொழு நுனியால் வெறுநிலத்தைக் கூராய்ந்துப் பயிர்வளர்த்தும் கும்பியதும் கருகிடவே கூனி நிற்கும் விவசாயி! குறையேதும் அறியாமல் அறிந்தபின்னும் அயராமல் குவலயத்தில் நடைப்பிணமாய்க் கொக்கரிக்கும் அறிவிலிகள்! இந்த நிலை…