சேற்றினில் உழன்று ஆற்றினில் தவழ்ந்து

செந்நெல் வயலில் ஆடி நின்றோம்!

சிந்தையில் சீலம் செயலதில் வீரம்

சிறப்புடனே நாம் வாழ்ந்திருந்தோம்!

பரியினை சுமந்தும் படிப்பதில் சிறந்து

பல்கலை வித்தகம் புரிந்திருந்தோம்!

பரணியில் அமர்ந்தும் பயிர்களைக் காத்தும்

பல்லுயிர் தமையே பேணி வந்தோம்!

மாடுகள் அதுவே மனம்நிறை துணையாய்

மண்ணை உழுது பயிர் வளர்த்தோம்!

மண்மகள் கருணை பொழிந்ததனாலே

மாட்சிமையுடனே மகழ்ந்திருந்தோம்!

தந்தையின் வழியில் தகைசால் குணத்தால்

தலையது நிமிர்ந்து நடந்திருந்தோம்!

தமிழதன் அருளால் தக்கவர் துணையொடு

தகுதியில் உயர்ந்து திளைத்திருந்தோம்!

நன்செய் புன்செய் நவமணி விளைந்திட

நால்வகை குணமே மிகுந்திருந்தோம்!

நலமது நினைந்து நன்மைகள் புரிந்து

நயமுடனே நாம் திகழ்ந்திருந்தோம்!

(அச்சம் என்பது மடமையடா-பாடல் மெட்டு)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *