வரைமுகடோ நெடிதுயர்ந்து வானகத்தைத் தழுவும்! வான்மகளோ நாணிடவே மேல்சேலை நழுவும்! மேகமெனும் வாகனத்தில் ஊர்வலமே நடக்கும்! மேனியதும் குளிர்ந்திடவே தேன்மழையே வடிக்கும்! மனம்குளிர வானகமே மாமழையே பொழியும்! மண்ணகமே மனம்மகிழ பொன்னதுவே விளையும்! வையகத்து உயிரனைத்தும் வானகத்தை வணங்கும்! வான்மழையின் பரிசமதால் பூமியதே சிணுங்கும்! தாவரமே வரமதுவாய் வரைகளிலே செழிக்கும்! தரணியிதே அதுவழங்கும் வளமதுவால் கொழிக்கும்! தன்னலமே பேணாத தகைமையதால் மிளிரும்! தான்வழங்கும் கொடையதுவால் மன்பதையில் ஒளிரும்! மலைகளதே மன்பதைக்கு அணிகலனாய் விளங்கும்! மழைவளமும் மண்வளமும் வாரியென்றும்…
வயலில் செந்நெல் முற்றி தலை சாய்த்து ஆடுதே! வாகையும் பூவரசும் கரையில் பூத்து ஆடுதே! வண்டு பூவில் தேனதனை ருசித்து சுவைக்குதே! வரப்பில் நண்டு வளையின் சேற்றை ஏற்றி அடைக்குதே! கிணற்று நீரும் கரையில் மோதி அலை அடிக்குதே! கெண்டை கெழுத்தி உவகையதால் துள்ளிக் குதிக்குதே! கிளிகளதும் சிறகடித்துப் பாடிப் பறக்குதே! கிழக்கு திசையினிலே சூரியனும் மெள்ள உதிக்குதே! உழவரது உள்ளமெலாம் துள்ளிக் களிக்குதே! ஓடையிலே ஓடும் நீரும் சல சலக்குதே! பனிமலரும் இதழ்விரித்து மணம் பரப்புதே!…
வானம் முரசறைந்து வரவேற்கும்! வண்டுகள் இசைபாடி சுகம்சேர்க்கும்! கானம் அதுஉள்ளம் தனைஈர்க்கும்! காலம் எந்நாளும் நமை ஏற்கும்! நதிகள் பெருக்கெடுத்து நலம்பயக்கும்! நானில உயிர்களதும் மனம்உவக்கும்! நாளும் நன்னெறியே எமைஇயக்கும்! நாடே நலமுறவே கைசிவக்கும்! வனங்கள் செழிப்புறவே வளம் நிறையும்! வறுமை துயரதுவும் தான் குறையும்! வையம்தனில் உயிர்கள் தினம் மகிழும்! வாய்மை நமதாக இடர் மறையும்! ஏர்முனை சீர்பெறவே இனிதாகும்! நேர்மை வழியதுவால் நலம் சேரும்! ஊரார் போற்றும் நிலை உருவாகும்! உலகே பின்தொடரும் நிலையாகும்!
பொங்கிவரும் கடல் அலையாய் பங்கயத்தின் இதழ் அழகாய் தெங்கதனின் இனிமையதாய் தென்றலதன் குளிர்மையதாய் எங்கும் நிறை இயற்கை உனைக் கண்டேன்! -என் இதயமதில் உனை நினைந்து நின்றேன்! நினைந்து நின்றேன்! வானுயர்ந்த வரைகளதாய் வண்டுலவும் சோலையதாய் வண்டமிழின் செழுமையதாய் வண்ணமலர் நறுமணமாய் வையமெங்கும் இயற்கை உனைக் கண்டேன்! -உன் வளமையதில் எனைமறந்து நின்றேன்! மறந்து நின்றேன்! மாங்குயிலின் தேனிசையாய் மங்கையவர் தளிர்நடையாய் மேகமதன் மழையதுவாய் மென்காற்று தரும்சுகமாய் மேதினியில் இயற்கை உனைக் கண்டேன்! -உன் மேன்மையதில் உளம்…
இயற்கை அன்னையின் எழில் கோலம்! -அதன் இயல்பால் இயங்கிடுமே ஞாலம்! செயற்கையதால் வரும் அலங்கோலம்! -அதை சிந்தையில் கொள்வதுவே ஞானம்! பூமியில் வாழ்வது பெரும் பேறே! -இதைப் புரிந்திட நேர்ந்திடும் மிகுசீரே! சாமியை வேண்டிட நலமாகும்! -வரும் சஞ்சலம் தீர்ந்திட மகிழ்வாகும்! இயற்கையைப் பேணிட இனிதாகும்! -அதில் இன்பம் அதுவே உருவாகும்! இம்மை வாழ்வினில் வளம்மேவ! -எங்கும் இயைதல் நேர்ந்திட இருள் போகும்! இயற்கையின் மகிமை அறியாமல்! -வரும் இன்னல் எதுவும் புரியாமல்! இழிமன மாந்தரின் செயலதுவால்-இங்கு…
மாங்குயில் கூவும் குரலோசை! மன ஆறுதல் வழங்கும் குயிலோசை! பாங்குடன் வாழும் மனிதர் நெஞ்சில் பாசத்தைப் பொழியும் குயிலோசை! -இது படைத்தவன் நடத்தும் இசையாகம்! -நல்ல பண்புடையார்க்கே இது யோகம்! காதலர் நெஞ்சில் கண்ணியம் வளர்க்கும் கானமழையே குயிலோசை! -உள்ளம் கனிந்திடவே எங்கும் தண்ணளி வழங்கும் கருணைமழையே குயிலோசை! -இது கடவுள் நடத்தும் இசையாகம்! -நெஞ்சில் கனிவுடையார்க்கே இது யோகம்! இனியவை எங்கும் நிகழ்ந்திட வேண்டி இசைத்திடும் இசையே குயிலோசை! இன்னல் களைந்து இன்பம் சேர்த்திடும் இன்னிசை…
கண்கோடி வேண்டுமடி கானமயிலே! -அழகு கானகத்தை ரசித்திடவே கானமயிலே! கனிகள் நிறைமரங்கள்! களித்திடும் உயிரினங்கள்! கண்டவர் கண்மயங்கும் கானமயிலே! தென்றல் தவழ்ந்திருக்கும் தேனாறு பாய்ந்திருக்கும் தென்பொதிகை சந்தனமே கானமயிலே! -அரிய திரவியமே தந்திடுமே கானமயிலே! அருவி சலசலக்கும் ஆற்றோரம் செழித்திருக்கும் ஆனந்தத் தாண்டவமே கானமயிலே! -அங்கே அமுதே பொழிந்திருக்கும் கானமயிலே! பசுந்தளிர் செடி கொடிகள் பாடிடும் புள்ளினங்கள் பார்வையில் ஈர்த்திடுமே கானமயிலே! -எங்கும் பசுமையதே பாய்விரிக்கும் கானமயிலே! உலகினர் உய்த்திடவே உயிர்நீர் உவந்திடுமே! உணவும் உடைவழங்கும் கானமயிலே!…
விசும்பின் துளியது மண்ணிடை வீழ்ந்தால் வேண்டுவதெல்லாம் நலமாகும்! வினைப்பயன் அதுவே மறைந்திட ஆங்கே வெற்றியே நமது வரவாகும்! வெள்ளை உள்ளம்! பிள்ளை குணமே! விரும்பிடும் யாவையும் நமதாகும்! மாக்கடல் அதனின் மகிமையும் குன்றும் மழையதும் மண்ணில் தவறிடவே! மானம் தானம் தவமது யாவும் மறைந்திடும் ஆங்கே மழை இலையேல்! மக்கள் மாக்கள் மகிழ்ந்திட உலகில் மழையதுவே என்றும் பெருந்துணையாம்! வானது வழங்கும் வரம் அதுவாலே வையம் இங்கே தழைத்திடுதே! வரமதை வழங்கும் தகைமையினாலே மழையதுவே என்றும் அமிழ்தமதே!…
கானகமே! மரச்செறிவே! கானுறையும் விலங்குகளே! கலகலக்கும் பறவைகளே! கமகமக்கும் மலரினமே! கடுவினையால் கலங்கிநிற்கும் நிலையேனோ எந்தனுக்கே! கடிதுவந்தே காரணத்தை விளக்கிடுவீர் தோழர்களே! மரங்களதை முறித்தேனோ! மனமதுவால் சபித்தேனோ! மாசறியா விலங்குகளின் உயிரதையும் குடித்தேனோ! மகிழ்ந்திருக்கும் பறவைகளின் கூடுகளைக் கலைத்தேனோ! மணமணக்கும் மலர்களதன் மணமதையே முகர்ந்தேனோ! காலமெல்லாம் உங்களையே காப்பதிலே கழித்தேனே! கங்குல் பகல் பாராமல் கடுமையதாய் உழைத்தேனே! ஞாலமிதில் நான்நிதமும் நல்வினையில் திளைத்தேனே! நலிவதுவால் மனம்கலங்கும் நிலையெனக்கு ஏன்தானோ! பனிமலரே! பறவைகளே! பாதகமே ஏன்தானோ! கவிகொஞ்சும் கானகமே…
மலைமீது வளர்கின்ற பொழில்சோலை கண்டேன்! -அதன் மாறாத எழிற்கோலம் தனைக்கண்டு நின்றேன்! வனம் இல்லாமல் புவிமீது உயிர் ஒன்றும் இல்லை! -அதன் வளம் இன்றி யாரெவரும் உய்த்திடுதல் இல்லை! பனிமலராடும் ஓடையிலே உறுமீன்கள் ஆட-அதன் பாங்கான உருகண்டு பறவையதும் ஓட பசுந்தளிர்க் கொடியும் இளவெயிலில் தானாக வாட-நனி பகலவனும் வான்மீது தேரேறி வந்தான்! பசும் பட்டாடை அதுவாகக் குளிர்சோலை மாற -அதன் பகட்டான அழகாலே பல்லுயிரும் பேண பகையின்றி உறவாடும் உயிர்களதும் நாண-மிகு பாசம் நிறை உயிர்களுமே…