அனைத்துயிரும் உலகில் அகமகிழ்ந்தே வாழ அமுதென உணவினை அளித்திடும் தாவரமே! தினைத்துணையும் மனதில் கபடமில்லா உயிரே! தேசமிதில் வாழ வழங்கிடும் நல்வரமே! உயிர்வளி தான் வழங்கி உயிர்நீர் அது வழங்கி உணவதுவும் வழங்கும் உயர்குணம் உடைஉயிரே! உலகுயிர் தனைக்காக்க உதவிகள் புரிவதற்கே உலகினில் உய்த்திடும் உயர்தினை தாவரமே! அவனியின் ஆதாரம்! அடைந்திடும் சேதாரம்! ஆயினும் அழியாமல் எடுத்திடும் அவதாரம்! உயிர்களின் துயர்போக்கி உலகின் இடர்நீக்கி உவந்திட உயிர்களதே உதவிடும் உன்னதமே! தாவென்று கேட்காமல் தந்திடுமே வரமே! நோயெனில்…
கொடுவெயில் தனைத்தணிக்கும் குளிர்தரு தருக்களையே குவலயத்தில் காத்தல் கடமை அன்றோ! நடும்மரம் காக்காமல் நாட்களைப் போக்கிடுதல் நானிலத்தில் அதுவே மடமை அன்றோ! காய்கனி பலன்தந்து உயிர்களைக் காத்திலங்கும் கருணை நிறைந்த மரம் தாயே அன்றோ! வேய்ங்குழல் இசையாக வேதங்கள் போற்றிநிற்கும் வியத்தகு மரம் நமது தந்தை அன்றோ! மண்வளம் தான்காத்து மருந்தாய் நோய்நீக்கும் மரங்கள் நமது உயிர் நண்பர் அன்றோ! மழையதை உருவாக்கி உயிர்நீர் தான்வழங்கும் மாண்பமை மரம் நமது அன்பர் அன்றோ! உயிர்வளி தான்வழங்கி விடக்காற்றை…
எல்லையில்லா துயரம் புவியில் வந்தது ஏன்! எண்ணிடுவாய் மனிதா இயல்பாய் இதயமதில்! எல்லா வளங்களையும் இயற்கைப் படைத்ததுவே! எல்லா உயிர்களுமே இனிதே மகிழ்ந்திடவே!-(எல்லை) வல்லார் ஒரு சிலரே வளங்களை மடைமாற்ற இல்லார் அழுகுரலே எங்கும் ஒலிக்கிறதே! அழுகுரல் தனைக்கேட்டு அதிர்ச்சியில் இயற்கையுமே அதிர்வலையால் உலகை ஆட்டிப் படைக்கிறதே!-(எல்லை) வாழ்வில் மகிழ்வதையே வழங்கிடும் வளங்களையே வகைதொகை இல்லாமல் அழித்திடவே மனிதர்! வஞ்சினம் தான் கொண்டு எழும்பிய இயற்கையதே வையத்து உயிர்களையே வதையதும் புரிகிறதே!-(எல்லை) இயற்கையின் கொடையதையே எண்ணிடும் மாமனிதர்!…
உடலில் வலுவிருக்கு உள்ளமதில் துணிவிருக்கு! உழவு செய்ய எருதிருக்கு பொன்னையா!-நம்ம உழைப்பை நம்பி உலகிருக்கு பொன்னையா! அய்யன் உழுது வந்த அஞ்சு குழி நிலம் இருக்கு! அமுதாய் நீரூறும் அழகான கிணறிருக்கு! கிணற்றைச் சுற்றிலுமே பசு மரங்கள் நெறஞ்சிருக்கு! கெண்டை கெளுத்தி அதும் தண்ணீரில் வளர்ந்திருக்கு! ஏத்தம் எறச்சிடவே எருதுகளின் துணையுடனே எங்கும் பயிர் விளையும் பொன்னையா!-நம்ம இடர்களதே தீர்ந்துவிடும் பொன்னையா! வரப்பையெல்லாம் ஒசத்திக்கட்டி வயல் உழுது பயிர் வளர்த்து வளமுடனே வாழ்ந்திருப்போம் பொன்னையா!-பிறர் வாழ்த்திடவே வகை…
உழவதுவே உலகமிதில் உயர் தொழிலாகும்!-இந்த உண்மையினை உணர்ந்திடவே வளம் நமதாகும்! விளைந்திடவே நெல்மணியும் வயலதன் மேலே!-எங்கும் விளங்கிடுமே இன்பமதே புவியில் எந்நாளும்! (உழவதுவே) மாரியதன் கொடையதுவால் மண் வளமாகும்!-உழும் ஏரதனின் வளமையதால் பயிர் உருவாகும்! மழை வெயிலில் உழைப்பதனால் மணியதுவாகும்!-தன் மானமிகு உழவரதால் நலமது மேவும்! (உழவதுவே) மண் அதிலே வியர்வை விழ பொன் அதுவாகும்!-இந்த மாநிலமே உயிர்த்திடவே உணவது ஈனும்! கண் எனவே உழுதுநிலத்தைக் காத்திட நாளும்-நல் கதி அருளும் மண் மாதா பூமியின் மேலே!…
கண்ணில் கருணை வரும்! கனிந்திடவே உளம் உருகும்! மண்ணில் பொன் விளையும்! மங்கலமே நிறைந்திலங்கும்! எங்கள் பூமியிது ஏர்த்தொழிலால் சீர்பெருகும்! இன்பம் பொங்கிடுமே நாளுமே!-அதை இதயம் தனில் உவந்து வணங்குவோம்! முல்லை மலர் மலரும்! முப்போகம் நெல் வளரும்! முகிலும் மழை சொரியும்! முகமதுவே நகை புரியும்! பொங்கும் பூமியிது பொன்விளைத்து நலம்பயக்கும்! பொழியும் நன்மை அதே நாளுமே!-அதைப் போற்றி மனம் உருகி வணங்குவோம்! தென்றல் தூது விடும்! தெம்மாங்கு இசை பயிலும்! தேகம் உடல் நனையும்!…
வாழை மரம் இருக்கு வாய்க்காலில் நீர் இருக்கு வயல் உழுது பயிர் நடுவோம் பொன்னம்மா!-அது வளர்ந்து நெல்லு மணி வழங்கும் பொன்னம்மா! பொன்னம்மா! நீஎன் கண் அம்மா! எருது மாடிருக்கு ஏர்க்கலப்பை வசம் இருக்கு ஏர் உழுது நெல் நடுவோம் பொன்னம்மா!-அது ஏற்றமுடன் விளைந்திடுமே பொன்னம்மா! பொன்னம்மா! நீஎன் கண் அம்மா! உடம்பில் தெம்பிருக்கு ஊக்கமதும் நெறஞ்சிருக்கு ஊரார் பசியாற பொன்னம்மா!-நாம் உணவதையே வழங்கிடுவோம் பொன்னம்மா! பொன்னம்மா! நீஎன் கண் அம்மா! தென்னை மரம் இருக்கு தேகமிதில்…
காலையில் கதிரவன் ஒளியினை நான் கண்டேன்! கடல் அலைமீது ஆதவன் எழக் கண்டேன்! கருணையின் வடிவாம் ஞாயிறை நான் கண்டேன்! களிப்பதும் மேவிட மகிழ்ந்திடும் உயிர் கண்டேன்! பனியதும் விலகிட பரவச நிலையினில் உளமது உவந்திடும் உயிர் கண்டேன்! நனிமிகு மாந்தர் கனிவுடன் தொழுதிட நலமதும் மேவிடும் நிலை கண்டேன்! புவியினில் பசுமை படர்ந்திட எங்கும் பொலிந்திடும் இதமிகு வளம் கண்டேன்! பொழிந்திட நலமே நிகழ்ந்திட நிதமே புதுமைகள் விளைந்திடும் நிலம் கண்டேன்! மாலையில் மயங்கிடும் சூரியன்…
மஞ்சள் வண்ண மழைத்துளியாய் மண்மீது பொழிந்திருக்கும் வேங்கைமர மலர்களதன் விஞ்சிநிற்கும் அழகு என்னே! மேகமது சூழ்ந்திடவே தேகமதும் குளிர்ந்துவிடும்! மேதினியும் செழிப்புறவே மேன்மையது நிறைந்துவிடும்! தென்றலது தவழ்ந்துவந்து தெம்மாங்கு இசைத்திடவே தேனிசை செவிகளிலே தீஞ்சுவையைச் சேர்த்துவிடும்! வான்மழையும் வருகைதர வையமிதில் வளம்பெருகும்! வாடிநிற்கும் உயிர்களதன் வாட்டமது மறைந்துவிடும்! பாடிவரும் பூங்குயிலும் பச்சைவண்ண மரங்களுமே இச்சைகொள்ளத் தூண்டுதம்மா! இயற்கையதன் மகிமை என்னே!
மனதினில் துயரதை மறைத்துவிடு! மண்ணில் இயற்கையை நினைத்துவிடு! தினம் ஒரு புதுமை நிகழ்த்திடும் இயற்கையில் திளைத்திடவே உளம் களித்துவிடு! கிழக்கே உதித்திடும் சூரியனே விலக்கிட இருளதும் போய்விடுமே! கிழமைகள் தோறும் நலமதுபுரிய விளைந்திடும் துன்பம் நீங்கிடுமே! மழையதும் மண்ணில் பொழிந்திடவே மாநிலம் எங்கும் தழைத்திடுமே! மனிதரும் உழைப்பால் உயர்ந்திட வாழ்வில் மனமதில் இன்பம் விளைத்திடுமே! வனமதில் தாவரம் செழித்திடவே வையம் எங்கும் வளம்பெறுமே! வாய்மையைக் காத்து வாழ்ந்திட உலகே வரும் பொருளதுவால் நலம்பெறுமே! (கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு-பாடல்…