கவிஞர் சோலை எழிலன்

கவிஞர் சோலை எழிலன்

  • எனது அறிமுகம்
  • கவிதைகள்
  • ஆசிரிய நூல்கள்
  • தொடர்பு
  • மண்ணிலே பொன்னதை விளைத்திடும் மழையே!

    January 11, 2026
    Uncategorized

    மேகமே முழவதை முழங்க!-வண்ண மின்னலின் நர்த்தனம் விண்ணிலே விளங்க! தவளைகள் தாளம் இசைக்க!-இந்தத் தரணியிதும் தழைத்திட பெய்திடும் மழையே! உயிர்கட்கு உயிர்நீர் வழங்கி!-உலக உயிர்களின் வாழ்விலே அமிழ்தென விளங்கி! நதி ஆறு கடல் என்று பரவி!-இந்த நாட்டிலே நன்மையே புரிந்திடும் மழையே! நீரதனைப் பூசனை செய்து!-அதன் நிலையினைக் காத்திட நேர்ந்திடும் நலமே! நிறம் மணம் சுவை ஒன்றும் இன்றி!-இந்த நீநிலம் நிலைத்திடப் பெய்திடும் மழையே! மண்ணுயிர்கள் மனமதும் மகிழ!-உயர் விண்ணின்று பொழிந்தே விந்தைகள் புரியும்! மாரியாய் வாரி…

  • மண்ணிலே மழைபொழிய மங்களம் நிறைந்திடுமே!

    January 11, 2026
    கவிதைகள்

    மண்ணிலே மழைபொழிய மங்களம் நிறைந்திடுமே! மக்களும் உழவுசெய்ய செந்நெல்லும் விளைந்திடுமே! கண்ணிலே கருணைவரக் களித்திடும் உயிர்களுமே! காலமகள் துணையாலே செழித்திடும் பயிர்களுமே! பொன்விளைய பூமியிலே பொலிந்திடும் எழிற்கோலம்! பூமகளின் ஆதரவால் புலர்ந்திடும் எதிர்காலம்! தானம் தவமதுவால் தரணியும் விளங்கிடுமே! தாளாத ஊக்கமதால் தகைமை இலங்கிடுமே! ஒப்புரவு ஓங்கிடவே உன்னதம் நிகழ்ந்திடுமே! உண்மையதன் வழிநடக்க உலகம் மகிழ்ந்திடுமே! முப்பொழுதும் நலம்நினைய தப்பிதமும் மறைந்திடுமே! முகமலர் அலர்ந்திடவே நகையதும் நிறைந்திடுமே! சாதியம் ஒழிந்திடவே சமத்துவம் தழைத்திடுமே! சன்மார்க்க நெறியதுவும் தரணியில்…

  • அனைத்துயிரும் வணங்கும் அற்புதம் தாவரமே!

    January 11, 2026
    கவிதைகள்

    அனைத்துயிரும் உலகில் அகமகிழ்ந்தே வாழ அமுதென உணவினை அளித்திடும் தாவரமே! தினைத்துணையும் மனதில் கபடமில்லா உயிரே! தேசமிதில் வாழ வழங்கிடும் நல்வரமே! உயிர்வளி தான் வழங்கி உயிர்நீர் அது வழங்கி உணவதுவும் வழங்கும் உயர்குணம் உடைஉயிரே! உலகுயிர் தனைக்காக்க உதவிகள் புரிவதற்கே உலகினில் உய்த்திடும் உயர்தினை தாவரமே! அவனியின் ஆதாரம்! அடைந்திடும் சேதாரம்! ஆயினும் அழியாமல் எடுத்திடும் அவதாரம்! உயிர்களின் துயர்போக்கி உலகின் இடர்நீக்கி உவந்திட உயிர்களதே உதவிடும் உன்னதமே! தாவென்று கேட்காமல் தந்திடுமே வரமே! நோயெனில்…

  • மரங்கள் நமது உயிர் நண்பர் அன்றோ!

    January 11, 2026
    கவிதைகள்

    கொடுவெயில் தனைத்தணிக்கும் குளிர்தரு தருக்களையே குவலயத்தில் காத்தல் கடமை அன்றோ! நடும்மரம் காக்காமல் நாட்களைப் போக்கிடுதல் நானிலத்தில் அதுவே மடமை அன்றோ! காய்கனி பலன்தந்து உயிர்களைக் காத்திலங்கும் கருணை நிறைந்த மரம் தாயே அன்றோ! வேய்ங்குழல் இசையாக வேதங்கள் போற்றிநிற்கும் வியத்தகு மரம் நமது தந்தை அன்றோ! மண்வளம் தான்காத்து மருந்தாய் நோய்நீக்கும் மரங்கள் நமது உயிர் நண்பர் அன்றோ! மழையதை உருவாக்கி உயிர்நீர் தான்வழங்கும் மாண்பமை மரம் நமது அன்பர் அன்றோ! உயிர்வளி தான்வழங்கி விடக்காற்றை…

  • தயை புரிவாள் அன்னை இயற்கையும் புவிமீதே!

    January 11, 2026
    கவிதைகள்

    எல்லையில்லா துயரம் புவியில் வந்தது ஏன்! எண்ணிடுவாய் மனிதா இயல்பாய் இதயமதில்! எல்லா வளங்களையும் இயற்கைப் படைத்ததுவே! எல்லா உயிர்களுமே இனிதே மகிழ்ந்திடவே!-(எல்லை) வல்லார் ஒரு சிலரே வளங்களை மடைமாற்ற இல்லார் அழுகுரலே எங்கும் ஒலிக்கிறதே! அழுகுரல் தனைக்கேட்டு அதிர்ச்சியில் இயற்கையுமே அதிர்வலையால் உலகை ஆட்டிப் படைக்கிறதே!-(எல்லை) வாழ்வில் மகிழ்வதையே வழங்கிடும் வளங்களையே வகைதொகை இல்லாமல் அழித்திடவே மனிதர்! வஞ்சினம் தான் கொண்டு எழும்பிய இயற்கையதே வையத்து உயிர்களையே வதையதும் புரிகிறதே!-(எல்லை) இயற்கையின் கொடையதையே எண்ணிடும் மாமனிதர்!…

  • உழைப்பை நம்பி உலகிருக்கு பொன்னையா!

    January 11, 2026
    கவிதைகள்

    உடலில் வலுவிருக்கு உள்ளமதில் துணிவிருக்கு! உழவு செய்ய எருதிருக்கு பொன்னையா!-நம்ம உழைப்பை நம்பி உலகிருக்கு பொன்னையா! அய்யன் உழுது வந்த அஞ்சு குழி நிலம் இருக்கு! அமுதாய் நீரூறும் அழகான கிணறிருக்கு! கிணற்றைச் சுற்றிலுமே பசு மரங்கள் நெறஞ்சிருக்கு! கெண்டை கெளுத்தி அதும் தண்ணீரில் வளர்ந்திருக்கு! ஏத்தம் எறச்சிடவே எருதுகளின் துணையுடனே எங்கும் பயிர் விளையும் பொன்னையா!-நம்ம இடர்களதே தீர்ந்துவிடும் பொன்னையா! வரப்பையெல்லாம் ஒசத்திக்கட்டி வயல் உழுது பயிர் வளர்த்து வளமுடனே வாழ்ந்திருப்போம் பொன்னையா!-பிறர் வாழ்த்திடவே வகை…

  • உழவதுவே உலகமிதில் உயர் தொழிலாகும்!

    January 11, 2026
    கவிதைகள்

    உழவதுவே உலகமிதில் உயர் தொழிலாகும்!-இந்த உண்மையினை உணர்ந்திடவே வளம் நமதாகும்! விளைந்திடவே நெல்மணியும் வயலதன் மேலே!-எங்கும் விளங்கிடுமே இன்பமதே புவியில் எந்நாளும்! (உழவதுவே) மாரியதன் கொடையதுவால் மண் வளமாகும்!-உழும் ஏரதனின் வளமையதால் பயிர் உருவாகும்! மழை வெயிலில் உழைப்பதனால் மணியதுவாகும்!-தன் மானமிகு உழவரதால் நலமது மேவும்! (உழவதுவே) மண் அதிலே வியர்வை விழ பொன் அதுவாகும்!-இந்த மாநிலமே உயிர்த்திடவே உணவது ஈனும்! கண் எனவே உழுதுநிலத்தைக் காத்திட நாளும்-நல் கதி அருளும் மண் மாதா பூமியின் மேலே!…

  • எங்கள் பூமியிது ஏர்த்தொழிலால் சீர்பெருகும்!

    January 11, 2026
    கவிதைகள்

    கண்ணில் கருணை வரும்! கனிந்திடவே உளம் உருகும்! மண்ணில் பொன் விளையும்! மங்கலமே நிறைந்திலங்கும்! எங்கள் பூமியிது ஏர்த்தொழிலால் சீர்பெருகும்! இன்பம் பொங்கிடுமே நாளுமே!-அதை இதயம் தனில் உவந்து வணங்குவோம்! முல்லை மலர் மலரும்! முப்போகம் நெல் வளரும்! முகிலும் மழை சொரியும்! முகமதுவே நகை புரியும்! பொங்கும் பூமியிது பொன்விளைத்து நலம்பயக்கும்! பொழியும் நன்மை அதே நாளுமே!-அதைப் போற்றி மனம் உருகி வணங்குவோம்! தென்றல் தூது விடும்! தெம்மாங்கு இசை பயிலும்! தேகம் உடல் நனையும்!…

  • தேசமிதைக் காத்திடுவோம் பொன்னம்மா!

    January 11, 2026
    கவிதைகள்

    வாழை மரம் இருக்கு வாய்க்காலில் நீர் இருக்கு வயல் உழுது பயிர் நடுவோம் பொன்னம்மா!-அது வளர்ந்து நெல்லு மணி வழங்கும் பொன்னம்மா! பொன்னம்மா! நீஎன் கண் அம்மா! எருது மாடிருக்கு ஏர்க்கலப்பை வசம் இருக்கு ஏர் உழுது நெல் நடுவோம் பொன்னம்மா!-அது ஏற்றமுடன் விளைந்திடுமே பொன்னம்மா! பொன்னம்மா! நீஎன் கண் அம்மா! உடம்பில் தெம்பிருக்கு ஊக்கமதும் நெறஞ்சிருக்கு ஊரார் பசியாற பொன்னம்மா!-நாம் உணவதையே வழங்கிடுவோம் பொன்னம்மா! பொன்னம்மா! நீஎன் கண் அம்மா! தென்னை மரம் இருக்கு தேகமிதில்…

  • காலையில் கதிரவன் ஒளியினை நான் கண்டேன்!

    January 11, 2026
    கவிதைகள்

    காலையில் கதிரவன் ஒளியினை நான் கண்டேன்! கடல் அலைமீது ஆதவன் எழக் கண்டேன்! கருணையின் வடிவாம் ஞாயிறை நான் கண்டேன்! களிப்பதும் மேவிட மகிழ்ந்திடும் உயிர் கண்டேன்! பனியதும் விலகிட பரவச நிலையினில் உளமது உவந்திடும் உயிர் கண்டேன்! நனிமிகு மாந்தர் கனிவுடன் தொழுதிட நலமதும் மேவிடும் நிலை கண்டேன்! புவியினில் பசுமை படர்ந்திட எங்கும் பொலிந்திடும் இதமிகு வளம் கண்டேன்! பொழிந்திட நலமே நிகழ்ந்திட நிதமே புதுமைகள் விளைந்திடும் நிலம் கண்டேன்! மாலையில் மயங்கிடும் சூரியன்…

Previous Page
1 2 3 4 … 12
Next Page
கவிஞர் சோலை எழிலன்

கவிஞர் சோலை எழிலன்

  • Instagram
  • Facebook
  • X

Powered by
...
►
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
►
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
►
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
►
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
►
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by