Category: Uncategorized


  • கானிலே வளர்ந்திருக்கும் கருணை நிறைமரங்கள்! கடவுள் நமக்களித்த கனிவு மிகுமரங்கள்! வானிலே மிதந்து வரும் மேகம் அதைஈர்த்து வளமது மிகுந்திடவே பொழிந்திடும் பொன்மழையே! மரங்கள் மண்மாதா மனம் கவர் செல்வமன்றோ! மண்ணில் அதுகாக்க நிகழ்ந்திடும் நன்மை அன்றோ! உயிர்வளி அதனோடு உணவதும் தான் வழங்கி உலகுயிர் காத்துநிற்கும் உயர்ந்தவர் தருக்களன்றோ! உருவம் பலவாகி உன்னத வடிவாகி உலகைப் புறந்திருக்கும் உத்தம உயிர் மரமே! மரம் செடி கொடி என்று மண்ணிலே பரந்தெங்கும் மாட்சிமை மிகுந்திலங்கும் மாதவம் நிறை…

  • மேகமே முழவதை முழங்க!-வண்ண மின்னலின் நர்த்தனம் விண்ணிலே விளங்க! தவளைகள் தாளம் இசைக்க!-இந்தத் தரணியிதும் தழைத்திட பெய்திடும் மழையே! உயிர்கட்கு உயிர்நீர் வழங்கி!-உலக உயிர்களின் வாழ்விலே அமிழ்தென விளங்கி! நதி ஆறு கடல் என்று பரவி!-இந்த நாட்டிலே நன்மையே புரிந்திடும் மழையே! நீரதனைப் பூசனை செய்து!-அதன் நிலையினைக் காத்திட நேர்ந்திடும் நலமே! நிறம் மணம் சுவை ஒன்றும் இன்றி!-இந்த நீநிலம் நிலைத்திடப் பெய்திடும் மழையே! மண்ணுயிர்கள் மனமதும் மகிழ!-உயர் விண்ணின்று பொழிந்தே விந்தைகள் புரியும்! மாரியாய் வாரி…

  • உழவனுக்கோ மிஞ்சவில்லை உழக்கதுவும் உழவதனால்! உழைப்பவனோ வாடுகின்றான் வறுமையதன் தோழமையால்! பாடுபடும் தொழிலாளி பதைக்கின்றான் பட்டினியால்! பாரினிலே இதை மாற்ற யாரொருவர் முனையவில்லை! காளையொடு உழைத்தேகி கழனியிலே நெல்விளைத்தும் கால்வயிறும் நிரம்பாமல் கலங்கிநிற்கும் விவசாயி! கடும் வெயிலில் உடல் உருகி கண்மயங்க உழைத்தபின்னும் கதியின்றித் தடுமாறிக் களைத்திருக்கும் உழைப்பாளி! கொழு நுனியால் வெறுநிலத்தைக் கூராய்ந்துப் பயிர்வளர்த்தும் கும்பியதும் கருகிடவே கூனி நிற்கும் விவசாயி! குறையேதும் அறியாமல் அறிந்தபின்னும் அயராமல் குவலயத்தில் நடைப்பிணமாய்க் கொக்கரிக்கும் அறிவிலிகள்! இந்த நிலை…

  • சுற்றும் பூமி சுற்றுவது அதனின் சூத்திரம் யார் அறிவார்! சூத்திரம் அதையே யாத்தவன் அவனின் சூட்சுமம் யார் அறிவார்! சூத்திரம் அதுவே பிறழாமல் சூட்சுமம் அதுவும் விலகாமல் சாத்திரப்படி அது நிகழ்ந்து வரும் நேர்த்தியை நாமே அறிவோமே! காலையில் எழுவதும் மாலையில் மறைவதும் கதிரவன் அவனின் செயலாமோ! வானில் உலவிடும் முழுமதி அதனின் ஒளியும் ஞாயிறு அதனாலே! ஞாயிறு போற்றிட ஞாலம் வளம்பெறும்! நாமே அதையே அறிவோமே! வாழ்ந்திடும் பூமியின் வளமதைக் குறைத்திடும் வக்கிரம் நாம்அதை அறியோமே!…