கோடி விழி போதாது தங்க மயிலே! குமரி இயற்கையை ரசித்திடவே தங்க மயிலே! தேடி வரும் தென்றலுடன் தெம்மாங்கு இசையதுவும் பாடி வரும் புள்ளினமே தங்க மயிலே!-நல் பண்பாடிக் களித்திருக்கும் தங்க மயிலே! கோடி விழி போதாது தங்க மயிலே! குமரி இயற்கையை ரசித்திடவே தங்க மயிலே! பசுமை நிறை மலைகள் தங்க மயிலே! பாங்குடன் செழித்திருக்கும் தங்க மயிலே! பாரினில் வளம் கொழிக்க தங்க மயிலே! மாரியை வழங்கி நிற்கும் தங்க மயிலே! கோடி விழி…
குமரி மலைக் காடுகளின் செழுமையதைக் கண்டேன்! கொஞ்சி விளையாடும் வண்ணப் பறவைகளைக் கண்டேன்! விஞ்சி நிற்கும் அழகினிலே மெய்மறந்து நின்றேன்! விண்மதியின் ஒளியினிலே வியப்படைந்து நின்றேன்! (குமரி) வானுயர்ந்த மரங்களதன் வளமதையே கண்டேன்! வண்டுகளோ இசைபாடி வட்டமிடக் கண்டேன்! மேனியெலாம் பசுமையதே பொலிந்திடவே கண்டேன்! மேதினியில் இயற்கையதன் மேன்மையினைக் கண்டேன்! (குமரி) அருவியெலாம் ஆர்ப்பரிக்கும் அழகினையே கண்டேன்! அமுதூறும் ஊற்றுடனே ஆறுகளைக் கண்டேன்! அன்னை அவள் இயற்கை அதன் ஆறுதலைக் கண்டேன்! அரவணைத்துத் தவம்புரியும் ஆளுமையைக் கண்டேன்!…
மணிநீரும் மண்மீது உயிராகிட-மா மழை பொழிய வனம் அதனின் துணை நாடினோம்! கனிகொஞ்சும் பசுஞ்சோலை தனைக் காத்திட-அதன் கருணையதால் உயிர்களுக்கு உணவாகுமே! மருந்தாகி வளியாகி மண் காத்திடும்-இந்த மாநிலத்தின் உயிர்களதைத்தான் காத்திடும்! மலர் போன்ற மனம் கொண்ட மரம் காத்திட-நல் மகிமையதால் மன்பதையில் வளம் பேணிடும்! பெய்கின்ற மழைநீரைத் தான் பேணியே-இந்தப் பேருலகைப் புறந்தருளும் வனமே அன்றோ! பெருமைகள் பல சேர்க்கும் வகையால்-நனி பெரிதினிது பயத்திருக்கும் குணமே அன்றோ!
ஏரியிலே நீரைக் கண்டேன்! ஏற்றமதும் உறங்கக் கண்டேன்! ஏர் உழும் உழவர் முகத்தில் இன்பமது தவழக் கண்டேன்! நாகணவாய்க் குரலைக் கேட்டேன்! நாரைகளின் இரைச்சல் கேட்டேன்! நயமுடனே உழவர் பாடும் நற்றமிழ் இசையைக் கேட்டேன்! ஓடையிலே நீரைப் பார்த்தேன்! ஓடும் நீரில் உருவம் பார்த்தேன்! ஓடை நீர் பாய்வதனாலே உவந்து நிற்கும் பயிரைப் பார்த்தேன்! இயற்கை மீது நேசம் கொண்டேன்! இதயமதில் இன்பம் கொண்டேன்! எழுஞாயிறு தரும் சுகத்தில் எனை இழந்தே மயக்கம் கொண்டேன்!
வான் பொழியும் மழையே! வளம் நிறைந்த மலையே! கான் உறங்கும் தருவே! கடல் அலையும் அலையே! உம்மை நம்பி இவ்வுலகம் உயிர்த்திடும் நிலைதானே! உம்மைவிட்டால் எங்களுக்கு வேறுகதி யார்தானே! இலை உறங்கும் பனியே! கிளை உறங்கும் கனியே! மலர் சொரியும் தேனே! மதி பொழியும் ஒளியே! உலகத்து உயிர்களையே காப்பதுமே நீர்தானே! உம்மை விட்டால் எங்களுக்கு வேறு கதி யார்தானே! தினம் உதிக்கும் கதிரே! தென்றல் தரும் சுகமே! மணம் கமழும் மலரே! மதி மயக்கும் வெளியே!…
இயற்கையின் இசையினுக்கு இசைந்திட நலம் மேவும்! இகபர சுகம் மேவும்! இனியவையே மேவும்! வீசிடும் காற்றே நல் வேய்ங்குழல் இசையாகும்! விரலதும் மீட்டிட வீணையும் இசைபாடும்! மனமது மகிழ்வெய்த உளமதில் இசை ஊறும்! மங்களம் நிறைந்திடவே பொங்கிடும் இசைநாதம்! கனவது நனவாக களித்திடுமே இசையே! காதலும் கைகூட கண்களும் கவிபாடும்! மழையது மண்வீழ இசையதும் உருவாகும்! மலர் அணை வண்டினமே ரீங்கார இசைமீட்டும்! மாமழை அதுவாலே ஊற்றதும் இசைகூட்டும்! மாங்குயில் ஓசையுமே மனமதை இசைவாக்கும்! தெள்ளு தமிழ்…
மண்ணுயிர் காக்கும் மழையதன் அருமை மாந்தரும் அறியவில்லை!-நம் கண்ணெனப் போற்றும் நீரதன் பெருமை கற்றவர் தெரியவில்லை! மழையதும் வீழ்ந்து பூமியின் மேலே நிறைந்தே இருந்தாலும்-அது பொழிகின்ற இடமே புரிந்திடும் நலமே பூமியில் உயிர்களுக்கே! உயிர்நீர் அதுவாய் உயிர்களைக் காத்து உதவிகள் புரிந்தாலும்-அதன் உன்னதம் அறியா மானிடர் அவரே உண்மை உணரவில்லை! அமிழ்தென விளங்கி அவனியைக் காத்து அணியெனத் திகழ்ந்தாலும்-நீர் அரிதென ஆக அதன் அரும் பெருமை அகிலம் உணர்ந்திடுமே! (நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்-பாடல் மெட்டு)
மண்ணில் வாழும் மரங்கள் போல மாட்சி வேண்டுமே! மணம் பரப்பும் மலர்கள் போல மகிமை வேண்டுமே! எண்ணம் போல உயர்ந்த வாழ்வு அமைய வேண்டுமே! இன்பம் என்றே சங்கநாதம் முழங்க வேண்டுமே! கானம் பாடும் பறவைக்கென்றும் வேலி இல்லையே! கற்ற கல்வி பயன்படாமல் போவதில்லையே! மானம் காக்கும் மாந்தர் புகழ் மாய்வதில்லையே! மாண்புடைய மனிதர் செயல் ஓய்வதில்லையே! நல்லவர்கள் சோதனையால் நலிவதில்லையே! நயன் உடையார் வேதனையால் தளர்வதில்லையே! அல்லவையே செய்திடுவார் மகிழ்வதில்லையே! ஆணவமே கொண்டிடவே அமைதியில்லையே! உயிர்களெல்லாம்…
மழைத்துளியே மண்ணில் பொழிந்திடவே அதனால் விளைத்திடுமே வளமே! விளங்கிடுமே நலமே! தழைத்திட செடிகொடிகள் தரணியிலே செழித்தே தந்திடும் நற்கதியே! தாங்கிடுமே நமையே! உயிர் நீர் அதுவாகி உயிர்களைக் காத்திடவே உலகம் மகிழ்ந்திடுமே! உன்னதம் நிகழ்ந்திடுமே! அமிழ்தினும் மேலான அருமருந்தாம் நீராய் அவனியைக் காத்திடவே அற்புதம் நேர்ந்திடுமே! தண்ணீர் அதன் அருமை தான்அதும் தெரியாமல் தருக்கிடும் தறுதலைகள் தரணியில் வாழ்கின்றார்! கண்ணீர் அதுதானே கடைசியில் துணை வருமே! கவனம் தடுமாறிக் கலக்கிடவே நீரை!
மண்ணிலே மழைபொழிய மங்களம் நிறைந்திடுமே! மக்களும் உழவுசெய்ய செந்நெல்லும் விளைந்திடுமே! கண்ணிலே கருணைவரக் களித்திடும் உயிர்களுமே! காலமகள் துணையாலே செழித்திடும் பயிர்களுமே! பொன்விளைய பூமியிலே பொலிந்திடும் எழிற்கோலம்! பூமகளின் ஆதரவால் புலர்ந்திடும் எதிர்காலம்! தானம் தவமதுவால் தரணியும் விளங்கிடுமே! தாளாத ஊக்கமதால் தகைமை இலங்கிடுமே! ஒப்புரவு ஓங்கிடவே உன்னதம் நிகழ்ந்திடுமே! உண்மையதன் வழிநடக்க உலகம் மகிழ்ந்திடுமே! முப்பொழுதும் நலம்நினைய தப்பிதமும் மறைந்திடுமே! முகமலர் அலர்ந்திடவே நகையதும் நிறைந்திடுமே! சாதியம் ஒழிந்திடவே சமத்துவம் தழைத்திடுமே! சன்மார்க்க நெறியதுவும் தரணியில்…