உயர்வான மரங்களையே உருவாக்கும் விதைகளையே ஊன்றிடவே மண்ணுக்குள் தோன்றிடுமே அதிசயமே! விதையதுவும் செடியாகி செடியதுவும் மரமாகி வியத்திடும் நன்மைகளைப் பயத்திடுமே நமக்கே! பூமலர்ந்து காயாகி காய்பழுத்துக் கனியாகி பூமியில் உயிர்களெல்லாம் புசித்திட உணவாகும்! முதிர்இலைச் சருகுகளும் முறிந்திடும் கிளைகளுமே மண்மீது வீழ்ந்திடவே மண்ணுயிர்க்கு உணவாகும்! வெய்யோனின் ஒளிக்கதிரை விரிதழையால் தான்தழுவி வியனுலகின் உயிர்களையே வேலியாய்க் காத்திடுமே! நஞ்சையே உணவாக்கி நாம்வாழ வளிஅருளி…
உலகுயிரெல்லாம் உயிர்த்திட அவர்க்கே உணவினைத் தந்திடும் தாவரமே! உணவதுமின்றி உயிர்வளியுடனே உய்த்திட உதவிடும் தாவரமே! பறவைகள் பூச்சிகள் பாம்புகள் விலங்குகள் பாரினில் வாழ்ந்திடும் பலப்பல நுண்ணுயிர் தேறிய மனிதரும் திகழ்ந்திட நலமாய் தேவைகள் அதுவே சேவை என்றாகிட உலகுயிர் முதலாய்த் தோன்றிய நீரும் உயிர்கள் உறைந்திட உவந்த நல்நிலமும் உலகினுக் களித்து உயிர்களைக் காத்திடும் உயரிய உயிரே தவரமாம்! தாவென்று எவரும் வேண்டுதலின்றி தந்திடும் வரமே தவரமாம்! தரணியில் வாழும் உயிர்கள் யாவையும் தனதாய்க் காத்திடும் தாவரமாம்!…
நீரின்றி அமையாது உலகென்றார் நெறிமுறையார்! நீரதுவே முதலுயிரின் இடமென்பார் அறிவியலார்! நீரதனின் அருமையினை அறிந்திலரே உலகியலார்! நீரதுவே உலகுயிரின் உயிர்த்துளியாம் அறிந்திடுவீர்! பூமியிதின் பெரும்பகுதி நீரதுவே ஆனாலும்! பூதலத்தார் இழிசெயலால் பொல்லாங்கு நேர்கிறதே! சாமியதைத் தான்வேண்டித் தவிக்கின்றார் நீருக்காய்! தந்துதவும் வான்மழையைப் பழிக்கின்றார் மாந்தருமே! உலகில் உய்த்திருக்கும் உயிர்கட்கு அமிழ்தமென! உயர்ந்தோர் தொழ விளங்கும் உயிர் நீர் மழையேயாம்! விசும்பின் துளியாக வியனுலகைக் காத்து இங்கே பசுமை நிறைத்திடுமே மாரியதன் கொடையதுவால்! மன்பதையில் மாட்சிமிகு காவியங்கள் தோன்றிடவே!…
மண்ணுக்கு அழகு செய்யும் மரங்களே நண்பராக கண்ணின் கருவிழிபோல் காத்திடுவோம் எந்நாளும்! விண்முட்ட உயர்ந்திலங்கி விரிகடலாய்ப் பரந்து எங்கும் வியனுலகைக் காத்து நிற்கும் விந்தை மிகு வனங்களன்றோ! தன்னலத்தைப் பேணாது தாரணியின் உயிர்காக்கும் தன்மையினால் உயர்திணையாம் தருக்களே பூமியிலே! உண்ணும் உணவாகி உயிர் காக்கும் நீராகி உடையும் தானாகி உறைவிடமும் அருளி நிற்கும்! மண்ணகத்து உயிரனைத்தும் மாதாவாய்ப் போற்றி நிற்கும் மரங்கள் நிறைந்திலங்கும் வனங்களவை வாழ்விடத்தே! எண்ணமதை இனிதாக்கி இதயத்தில் வலுவூட்டி திண்ணமுறச் செய்துநிற்கும் திரவியமாம் நல்…
ஆற்றிலே வெள்ளம் கண்டு ஆனந்தம் கொண்டிருப்பார்! ஆதவன் துணையால் மண்ணில் அதிசயம் விளைத்திருப்பார்! அவனியின்உயிர்கட்கெல்லாம் அறுசுவை உணவைத்தந்தே ஆண்டவன் வடிவாய் மண்ணை அகழ்பவர் உழவர்தாமே! ஏர்முனை நிலமே ஏந்த ஏற்றமும் நீரைச் சேந்த! மாடுகள் வயலில் உழவே மண்மாதா பொன்கொழிப்பாள்! வகையாக நெல் விளைப்பார்! வாஞ்சை மிகு உழவர்தாமே! வையத்து உயிர்கள் தம்மை வாடாமல் காத்திருப்பார்! நாற்றிலே பருவம் கண்டு சேற்றிலே அதனை நட்டு ஆற்றிலே ஓடும் நீரால் அமுதான நெல் விளைப்பார்! தேடாத செல்வம் எல்லாம்…
பொன்னேர் கொண்டு பூமியை உழுதிட! பொழிந்திடும் பொன்னும் மணியதுவும்! தன்னிகரில்லாத் தகைமையினாலே தாயாய் நம்மைக் காத்திடுவாள்! வினை எதுமின்றி விதியதன் வழியே தினமும் பூமி சுழன்றிடுமே! நினைவது நன்றாய் நிகழ்ந்திட நன்மை! அனைவரும் நலமாய் வாழ்ந்திடுவோம்! உயிர்கள் பூமியில் உய்த்தே மகிழ்ந்திட! உதவிடுவாள் பெரும் வளமதையே! உணர்வாய் உயிராய்ப் பூமியியைப் பேணிட உவந்திடுவாள் நம் அன்னையதாய்! மண்ணுயிர் எல்லாம் மாட்சிமையுறவே மனமது குளிர்வாள் மண்மாதா! தன்னலம் கொண்டு தருக்கிடும் கொடியோர்! தன்மையைக் கண்டு நகைத்திடுவாள்! புவியதன் தோற்றம்…
உழுதுநெல் பயிரிட்டு உலகுக்கே உணவூட்டும் உழைக்கும் வர்க்கமிங்கே உணவின்றி வாடுதம்மா! வற்றாத காவிரியும் வற்றிடவே வான்மழையும் முற்றாகப் பொய்த்திடவே முகம்சுருங்கிப் போனாரே! தெரியாமல் வேறுதொழில் திகைப்போடு நோக்குதம்மா! திசையறியாப் புள்ளினமாய்த் திண்டாடி நோகுதம்மா! உறைதற்குக் குடிசையுமே உடையாக இரண்டு முழம்! உணவுக்கு ஏதுமின்றி உழல்கின்றார் வறுமையிலே! முன்னோரின் சொத்தாய் முழுமதியும் தென்றலன்றி மண்ணோடு உழன்றிட்ட மானிடர்க்கு ஏதுமில்லை! தன்கையைத் தான் ஊன்றித் தரணியிலே உயர்ந்திடவே ததிங்கினத்தோம் போட்டும் தாளாத துயரமதே! பொன்னேர் பூட்டி பூமியினைத் தான் உழுதும்…
வைரிசெட்டிப்பாளையம் மண்ணுல நாம் பொறந்ததால வம்புதும்பு பண்ணமாட்டோம்!-நாங்க வளமாக எந்நாளும் வாழ்ந்து காட்டுவோம்! வந்தாரை வரவேற்று வகையான வழிவகுத்து வளமாக வாழ்ந்திடவே வாழ்த்துக் கூறுவோம்! மாருதில போனாலும் மாடு ஓட்டுவோம்!-நாங்க மாஸ்டர் டிகிரி வாங்கினாலும் ஏரு பூட்டுவோம்! அமெரிக்காவில் படிச்சாலும் ஐ.ஏ.எஸ்சே ஆனாலும் அரிவாளைக் கையிலெடுத்து நெல்லு அறுப்போம்!-நாங்க அநியாயமா எதுவும் செய்யமாட்டோம்! கொல்லிமலை அடிவாரம் குட்டையிலே எலந்தப் பழம் கூடையிலே பொருக்கி வந்து கூடி ருசிப்போம்!-நாங்க கோடையிலே படிச்சாலும் கோட்டு சூட்டு போட்டாலும் கொல்லங்குடி பாட்டையுமே…
மழைத்துளி மண்ணிலே வீழ்ந்திட-அதன் மாட்சிமை எங்கும் பசுமையே! கலை நோக்குட னே அதைப் பார்த்திட-நனி காவியமே கண்ணில் தோன்றிடும்! பூத்து சிரிக்கும் மலர்களும்-அடை காத்திடும் வண்ணப் பறவையும் சேர்த்திடுமே ஒரு இன்பமே!-அதன் நேர்த்தியை என்னென்று சொல்லிட! பூமியெங்கும் பச்சைப் பட்டுடை!-ஒரு புத்தொளி வீசிப் புலர்ந்திடும்! ஆறு குளங்கள் நிறைந்திட -அது ஆர்த்திடும் எங்கும் வளமையே! கோலமிகு வண்ணப் பூச்சிகள்!-எக் காளமிட்டே கலி கூறிடும்! காலமது துணை வந்திட-இந்த ஞாலமெங்கும் என்றும் நன்மையே! நீண்டு உயர்ந்த மரங்களும்-அவை நிறைந்திருக்கும்…
மேகம் பொழியும் மழைத்துளி போலெங்கள் மேனி வியர்வை பொழிந்திந்த மண்ணில்-முப் போகம் விளைந்திட அல்லும் பகலுமே கால் கைகள் தேய உழைத்திடுவோம்! வயல் சேற்றினிலே உளைந் தாற்றியதால் உள்ளங் காலெங்கும் சேற்றுப்புண் ஆகிடுமே! ஓடி உழைத்திட நாள் முழுதும் வீடு வந்ததுமே கண்கள் சொக்கிடுமே! மண்ணிலே நீர் பாய்ச்சி உழுதபின்னே-அதை மட்டம் செய்யப் பரம் படித்திடுவோம்! மண்ணை வெட்டி வரப்பெடுத்த பின்னே-அதன் மடையைத் திறக்க நீர்ப் பாய்ந்திடுமே! நெற்பயிரை மண்ணில் நட்டு நீர் பாய்ச்சிட நெஞ்சில் நிறைந்திடும்…