அம்மாடி! மண்ணுக்குத் தாயின் மனசு! மங்கலம் பொங்கும் மனசு! மன்பதை காக்கும் வயசு! மக்களை ஈர்க்கும் அரசு! எண்ணிலா சுகங்களை வழங்கும்!-அதற்கு ஈடு இணை இல்லை உலகில்! கண்ணிலே மணியெனக் காக்கும்! கற்றவர் மனதை ஊக்கும்! பொன்னை அளிக்கும் தங்கச் சுரங்கம்! பூமியில் வேறு இல்லை அரங்கம்! மண்ணை மதித்து மக்கள் போற்ற மாட்சிமை தந்திலங்கும் மாதா! உணவு வழங்கி உயிர் காத்து உவந்து உயிர்களைத் தாங்கி நிற்கும் உன்னதம் நிறைந்த மண் அதனின் உத்தம குணத்தை…
புன்னை மரங்களுண்டு! பூம்பொழிலின் சாரலுண்டு! பொன்னெழில் பூத்ததுவே ஓவியமாய்!-அது பொழிந்திடுமே அழகினையே காவியமாய்! கருங்குயில் இசைத்திருக்கும் காவிரித்த காவிரியின் கரைகளில் தவழ்ந்திடுமே இசையமுதே!-அது காதினிலே சேர்த்திடுமே தேன் அமுதே! மாங்குயில் குடியிருக்கும் மாமரம் நிறை சோலை மஞ்சள் வான் அழகில் மயங்கியே மனமே இன்பமதால் மாறிடுமே! பொன் வண்டு இசை பாடி பூக்களில் தேன் குடிக்க பூமரம் நிறை பொன்னிக் கரையிலே பொங்கிடுமே உயிர்நீரே நுரையிலே! புன்னை மரங்களுண்டு! பூம்பொழிலின் சாரலுண்டு! பொன்னெழில் பூத்ததுவே ஓவியமாய்!-அது பொழிந்திடுமே…
வான் மீது வளைய வரும் வான் நிலவே!-உன் வரவினுக்காய்க் காத்திருந்தேன் வா நிலவே! தேனமுதைப் பொழிந்திருக்கும் வான் நிலவே!-மென் தென்றல் உந்தன் தோழியுடன் வா நிலவே! புவியினுக்குப் பொலிவினையே கூட்டிடுவாய்!-நனி கவிதை இன்பம் உள்ளத்திலே ஊட்டிடுவாய்! பொங்கிவரும் அலைகளையே காட்டிடுவாய்!-எங்கும் மங்காத ஒளி தீபம் ஏற்றிடுவாய்! தங்கம் நிகர் வண்ணமுடை வெண்ணிலவே!-நின் தண் எழிலில் மயங்கி நின்றேன் வெண்ணிலவே! தரணியிலே உயிர்களெல்லாம் வெண்ணிலவே!-நின் தண்மதியால் தழைக்குதிங்கே வெண்ணிலவே! பொன் எழிலைப் பூமியிலே பொன் நிலவே!-நீ பூசிடுவாய் ஆசையுடன்…
அணிலதுவும் மாம்பழத்தை ருசித்திடக் கண்டேனே! அழகான பூஞ்சிட்டு தேன்குடித்திடக் கண்டேனே! பூவிரித்த பாளையதும் பொலிந்திடக் கண்டேனே! பு ன்னைமரத் தோப்பினிலே பூங்குயில் கண்டேனே! நாகணவாய் நாட்டியமே ஆடிடக் கண்டேனே! நண்டதுவும் வளையில்சேற்றை அடைத்திடக் கண்டேனே! தேன் சிட்டு சிறகடித்துப் பறந்திடக் கண்டேனே! தெம்மாங்குப் பாட்டினிலே இசைநயம் கண்டேனே! மைனாக்கள் மையலுடன் மயங்கிடக் கண்டேனே! மஞ்சள் சிட்டு கொஞ்சலுடன் குலவிடக் கண்டேனே! மரக்கிளையில் தையல் சிட்டுப் பறவையைக் கண்டேனே! மனம் வருடும் இயற்கையதில் மயக்கம் கொண்டேனே! அணிலதுவும் மாம்பழத்தை…
காலை இளந்தென்றல் சொல்லும் சேதி என்னவோ! நான்கு திசையிலும் நாங்கள் பிரிந்ததென்ன! நாளை வரும் நல்ல நாள் என்று நானுமே வாடி இருப்பதென்ன!-(காலை) காலம் அது செய்த சோகமோ! இது துரோகமோ! கண்கள் பனிக்கின்ற நேரமோ! இது மாறுமோ! தேகம் அது செய்த வேள்வியோ! இது கேள்வியோ! மேகம் மழை தரக் கூடுமோ! இது நாடுமோ!-(காலை) பிரிவால் வாடிடும் பேதையர் எம் நெஞ்சைத் தேற்றிட! அறிவாலே அதும் ஆகுமோ! அல்லல் துயரதும் தீருமோ! பெற்று வளர்த்திட்ட பாசம்…
பகல் பிறந்ததும் இரவு சென்றதா! இரவு வந்ததும் பகல் மறைந்ததா! ஒளி பிறந்ததும் உருவம் வந்ததா! உருவம் வந்ததும் ஒளி பிறந்ததா! விதை முளைத்ததால் விருட்சம் வந்ததா! விருட்சம் வந்ததும் விதை முளைத்ததா! கேள்வி வந்ததும் பதில் கிடைத்ததா! பதில் கிடைத்ததும் கேள்வி வந்ததா! கல்வி கற்றபின் ஞானம் வந்ததா! ஞானம் வந்ததும் கல்வி வந்ததா! பண்பு வந்ததும் பணிவு வந்ததா! பணிவு வந்ததும் பண்பு வந்ததா! நிலவு வந்ததும் ஒளி பிறந்ததா! ஒளி பிறந்ததும் நிலவு…
தங்கம் உண்டு வைரம் உண்டு பூமியிலே! பொங்கும் வளம் எங்கும் அதன் மேனியிலே! கங்கையதும் காவிரியும் பாய்ந்திடுமே! கானகத்தில் வெண்ணிலவு காய்ந்திடுமே! வெய்யிலென்றும் மழையென்றும் அச்சமில்லையே!-எங்கும் வெற்றியன்றி வேறெதுவும் மிச்சமில்லையே! கைகளது துணை வரக் கவலையில்லை! கையறு நிலைக்கு என்றும் வேலையில்லை! கரும்பென்றும் வாழையென்றும் விளைந்திடுமே! கண்ணில் கருணை மழையென்றும் பொழிந்திடுமே! அரும்பிடும் மலர் மணம் கமழ்ந்திடுமே! அவனியில் நலமதும் திகழ்ந்திடுமே! விரும்பிடும் அனைத்துமே கிடைத்திடுமே! வேண்டிட இயற்கைப் படைத்திடுமே! உழைத்திட உயர்வதும் அடைந்திடவே உளம் உவப்பதனால்…
கண்கோடி வேண்டுமடி செல்லக்கிளியே! காவிரியை ரசித்திடவே செல்லக்கிளியே! காவிரித்த இருகரையும் செல்லக்கிளியே! கரை புரண்டு ஓடுதடி செல்லக்கிளியே! மண்ணுயிரைப் புறந்தருளும் மன்னுபுகழ்க் காவிரியே! மங்காத வாழ்வருளும் மாண்புடைய தாயவளே! மேற்கு மலைத் தொடரின் மேனி எழில் மேட்டினிலே மேகம் மழை பொழிய மேதினியில் தவழ்ந்திடுவாள்! தான் நடந்த பாதையெல்லாம் தன்னருள் செய்திடுவாள்! வான்மழையை முகந்து வந்து வளமதைத் திறம் புரிவாள்! பூதலத்து மக்களுக்குப் புதுவாழ்வு தர வேண்டி பொங்கி வந்து வளம் கொழிப்பாள்! பொன்மகளே காவேரி! கண்கோடி…
தென்றல் தவழ்ந்துவரும் தேனருவிக் கரையோரம்! தெம்மாங்கு பாடிவரும் தெற்குமலை அடிவாரம்! பொங்கிவரும் அருவியதும் புனைந்திடும் மணியாரம்! புல்லாங்குழல் இசையோ சேர்த்திடும் புதுராகம்! மழைமுகில் மரம்ஈர்க்க மழைஅதும் பொழிவாகும்! மழைநீர் வனம்தேக்க அருவிகள் உருவாகும்! மண்மீது நீர்பரவ மாநிலம் செழிப்பாகும்! மக்கள் மனம்குளிர மழையதும் உருவாகும்! காட்டில் மரம்செடிகள் கைகோர்த்து வாழுதம்மா! கருணை உள்ளமதை மண்ணுயிர் வாழ்த்துதம்மா! இயற்கை அன்னைஅவள் தாய்மையைப் போற்றிடுவோம்! எந்நாளும் இயற்கையதன் தலைமை ஏற்றிடுவோம்! பூமியில் மூன்றுபங்கு நீரால் நிறையுதம்மா! பொன்னேர் உழுதிடவே நெல்மணியும்…
வகைவகையாய் வளர்ந்திருக்க வளமுடனே மரமே! நகையதுவாய் விளங்கிநிற்கும் நாட்டினிற்கு வனமே! பெய்யும்மழையைப் பிடித்துவைத்துப் பெரும்பயனைத் தருமே! பேணிஅதைக் காத்துவிடில் பெருகிடும் நல்வளமே! மூன்றில்ஒரு பாகம்மண்ணில் முளைத்திட தாவரமே! மும்மாரி மண்மீது பொழிந்திட நல்வரமே! உயிர்களதன் உயிர்மூச்சாம் உயிர்வளியைத் தருமே! உயிர்கள்விடும் விடைக்காற்றை உயிர் மூச்சாய்ப் பெறுமே! மண்வளத்தைக் காப்பதனால் மன்பதையில் வளமே! மாறிடவே சூழலது மக்களுக்கு நலமே! வனம்உயிரைத் தான்சுமக்க வையமெங்கும் வளமே! வளம்பெருக மாட்சியுடன் வாழ்த்திடுமே ஜெகமே! பூவும்காயும் கனியும்தர பூமியிலே செழிப்பே! பூத்திடவே எங்கணுமே…