கவிஞர் சோலை எழிலன்

கவிஞர் சோலை எழிலன்

  • எனது அறிமுகம்
  • படைப்புகள்
  • தொடர்பு
  • ஆசிரிய நூல்கள்
  • கவிதைகள்
  • ஐம்பெரும் சக்தி!

    October 5, 2025
    கவிதைகள்

    மண்: மண்ணில் தோன்றிடும் யாதொரு உயிரும் மற்றொரு நாளில் மறைந்திடுமேயாம்! விண்ணில் வலம் வரும் ஞாயிறும் திங்களும் விதியதன் வழியே உலவிடுமேயாம்! நீர்: விசும்பின் மழைத்துளி வீழ்ந்திட மண்ணில் வியத்தகு விந்தை நிகழ்ந்திடும் ஆங்கே! பசும்புல் முதலாய்த் தாவரம் யாவும் பயத்திடும் நன்மை மண்ணுயிர்க்கெல்லாம்! காற்று: பூமியின் மேலே விரவிடும் காற்றே! புவி உயிர்க்கெல்லாம் உயிர்நாடி! போதரவாக நாம் அதைப் பேண புரிந்திடும் நன்மை பலகோடி! தீ: உயிர்களில் நிறைந்தே விளங்கிடும் தீயே! உயிர்களுக்கெல்லலாம் ஆதாரம்! உலகினில்…

  • புலர்ந்திடும் புதுயுகம்!

    October 5, 2025
    கவிதைகள்

    பொன்னேர் கொண்டு பூமியை உழுதிட! பொழிந்திடும் பொன்னும் மணியதுவும்! தன்னிகரில்லாத் தகைமையினாலே தாயாய் நம்மைக் காத்திடுவாள்! வினை எதுமின்றி விதியதன் வழியே தினமும் பூமி சுழன்றிடுமே! நினைவது நன்றாய் நிகழ்ந்திட நன்மை! அனைவரும் நலமாய் வாழ்ந்திடுவோம்! உயிர்கள் பூமியில் உய்த்தே மகிழ்ந்திட! உதவிடுவாள் பெரும் வளமதையே! உணர்வாய் உயிராய்ப் பூமியியைப் பேணிட உவந்திடுவாள் நம் அன்னையதாய்! மண்ணுயிர் எல்லாம் மாட்சிமையுறவே மனமது குளிர்வாள் மண்மாதா! தன்னலம் கொண்டு தருக்கிடும் கொடியோர்! தன்மையைக் கண்டு நகைத்திடுவாள்! புவியதன் தோற்றம்…

  • ஒன்று நமது பூமி!

    October 5, 2025
    கவிதைகள்

    ஒன்று நமது பூமியே! ஒன்று நமது வாழ்க்கையே! ஒற்றுமையாய் வாழ்ந்திடில் உயர்வை நாமும் எய்தலாம்! நன்று நன்று நன்றென! நல்லவையே செய்திட! நானிலத்தின் மீதிலே! நாளும் நேரும் நன்மையே! இன்றிருப்பார் நாளையே! இல்லையென்ற போதிலே! இனியவையே நேர்ந்திட! இம்மை என்றும் இன்பமே! வென்றிடுவோம் சாதனை! வீணர்தம்மை வீழ்த்தியே! சென்று சேரும் இடமெலாம்! செய்திடுவோம் சாதனை! தேடல் என்றும் தொடர்ந்திட! நாடி ஓடும் தீமையே! நாடும் நாமும் நலம்பெற! நாற்றிசையும் பரவுவோம்! என்றுமில்லை சோகமே! எதிலுமில்லை தோல்வியே! ஏற்றிடுவோம்…

  • காட்டிடம்மா ஒரு வழியை!

    October 5, 2025
    கவிதைகள்

    உழுதுநெல் பயிரிட்டு உலகுக்கே உணவூட்டும் உழைக்கும் வர்க்கமிங்கே உணவின்றி வாடுதம்மா! வற்றாத காவிரியும் வற்றிடவே வான்மழையும் முற்றாகப் பொய்த்திடவே முகம்சுருங்கிப் போனாரே! தெரியாமல் வேறுதொழில் திகைப்போடு நோக்குதம்மா! திசையறியாப் புள்ளினமாய்த் திண்டாடி நோகுதம்மா! உறைதற்குக் குடிசையுமே உடையாக இரண்டு முழம்! உணவுக்கு ஏதுமின்றி உழல்கின்றார் வறுமையிலே! முன்னோரின் சொத்தாய் முழுமதியும் தென்றலன்றி மண்ணோடு உழன்றிட்ட மானிடர்க்கு ஏதுமில்லை! தன்கையைத் தான் ஊன்றித் தரணியிலே உயர்ந்திடவே ததிங்கினத்தோம் போட்டும் தாளாத துயரமதே! பொன்னேர் பூட்டி பூமியினைத் தான் உழுதும்…

  • வைரிசெட்டிப்பாளையம்!

    October 5, 2025
    கவிதைகள்

    வைரிசெட்டிப்பாளையம் மண்ணுல நாம் பொறந்ததால வம்புதும்பு பண்ணமாட்டோம்!-நாங்க வளமாக எந்நாளும் வாழ்ந்து காட்டுவோம்! வந்தாரை வரவேற்று வகையான வழிவகுத்து வளமாக வாழ்ந்திடவே வாழ்த்துக் கூறுவோம்! மாருதில போனாலும் மாடு ஓட்டுவோம்!-நாங்க மாஸ்டர் டிகிரி வாங்கினாலும் ஏரு பூட்டுவோம்! அமெரிக்காவில் படிச்சாலும் ஐ.ஏ.எஸ்சே ஆனாலும் அரிவாளை கையிலெடுத்து நெல்லு அறுப்போம்!-நாங்க அநியாயமா எதுவும் செய்யமாட்டோம்! கொல்லிமலை அடிவாரம் குட்டையிலே எலந்தப் பழம் கூடையிலே பொருக்கி வந்து கூடி ருசிப்போம்!-நாங்க கோடையிலே படிச்சாலும் கோட்டு சூட்டு போட்டாலும் கொல்லங்குடி பாட்டையுமே…

  • மழையின் மகிமை!

    October 5, 2025
    கவிதைகள்

    மழைத்துளி மண்ணிலே வீழ்ந்திட-அதன் மாட்சிமை எங்கும் பசுமையே! கலை நோக்குட னே அதைப் பார்த்திட-நனி காவியமே கண்ணில் தோன்றிடும்! பூத்து சிரிக்கும் மலர்களும்-அடை காத்திடும் வண்ணப் பறவையும் சேர்த்திடுமே ஒரு இன்பமே!-அதன் நேர்த்தியை என்னென்று சொல்லிட! பூமியெங்கும் பச்சைப் பட்டுடை!-ஒரு புத்தொளி வீசிப் புலர்ந்திடும்! ஆறு குளங்கள் நிறைந்திட -அது ஆர்த்திடும் எங்கும் வளமையே! கோலமிகு வண்ணப் பூச்சிகள்!-எக் காளமிட்டே கலி கூறிடும்! காலமது துணை வந்திட-இந்த ஞாலமெங்கும் என்றும் நன்மையே! நீண்டு உயர்ந்த மரங்களும்-அவை நிறைந்திருக்கும்…

  • தொழுதிடுவோம் மண்மகளை!

    October 5, 2025
    கவிதைகள்

    மேகம் பொழியும் மழைத்துளி போலெங்கள் மேனி வியர்வை பொழிந்திந்த மண்ணில்-முப் போகம் விளைந்திட அல்லும் பகலுமே கால் கைகள் தேய உழைத்திடுவோம்! வயல் சேற்றினிலே உளைந்தாற்றியதால் உள்ளங்காலெங்கும் சேற்றுப்புண் ஆகிடுமே! ஓடி உழைத்திட நாள் முழுதும் வீடு வந்ததுமே கண்கள் சொக்கிடுமே! மண்ணிலே நீர் பாய்ச்சி உழுதபின்னே-அதை மட்டம் செய்யப் பரம்படித்திடுவோம்! மண்ணை வெட்டி வரப்பெடுத்த பின்னே-அதன் மடையைத் திறக்க நீர்ப்பாய்ந்திடுமே! நெற்பயிரை மண்ணில் நட்டு நீர் பாய்ச்சிட நெஞ்சில் நிறைந்திடும் நிம்மதியே! நட்டபயிரை நாம் கண்ணெனக்…

  • வெற்றியை நீயுமே பாடு!

    October 5, 2025
    கவிதைகள்

    வண்ணத்துப் பூச்சிக்கும் வாலாட்டிக் குருவிக்கும் சொத்து சுகம் என்பதேது!-அதன் சுறுசுறுப்பை நீயும் பாரு! கானப்புறாவுக்கும் காட்டுக்குயிலுக்கும் கல்விச்சாலை என்பதேது!-அந்த கானம் சொல்லித் தந்ததாரு! காக்கைக்குருவியும் காடை கௌதாரியும் கட்டி வாழுகின்ற கூடு!-அதில் காணும் திறமையை நாடு! பூவண்ணச் சிட்டுக்கள் பொன்வண்டு மொட்டுக்கள் பூமிக்குச் சேர்த்திடும் வண்ணம்!-அதைப் போற்றிடவே மனம் எண்ணும்! ஆடும் மயிலுக்கும் அன்றில் பறவைக்கும் நட்டுவாங்கம் சொன்னதாரு!-அதன் நாட்டியமோ வெகு ஜோரு! மின்மினிப் பூச்சியும் மீன்கொத்திப் பறவையும் மேவிடும் பூமிக்கோர் அழகு!-அதன் மேன்மையை நீயுமே பழகு!…

  • இறவாதவன்!

    October 5, 2025
    கவிதைகள்

    சோலை மலரொன்று எனைக்கண்டு சிரிக்கும்! சோகம் பரவாத மனம் ஒன்று நினைக்கும்! வாழும் நாள் என்னை வரவேற்கத் துடிக்கும்! வைகைக் கரையோரம் தரு ஒன்று முளைக்கும்! (சோலை) மாலை எந்நாளும் மயங்காது இங்கே! மானும் இருள் கண்டு கலங்காது இங்கே! நாளும் நல்லோர்கள் தான் இங்கு வருவர்! நாளை நமதென்று நன்றே செய்திடுவர்! (சோலை) பாடும் பூபாளம் பாரெங்கும் ஒலிக்கும்! ஓடும் நதியெங்கும் என் கானம் இசைக்கும்! காடும் மலை மண்ணும் வான் உள்ள வரைக்கும் ஞாலம்…

  • உழவு!

    October 5, 2025
    கவிதைகள்

    ஏரின் முனையைப் பேனாவாக்கி ஈரமண்ணைக் காகிதமாக்கி உழவர் எழுதும் அழகிய மொழியே! வறுமை ஓடும் பின்புற வழியே! உழுது மண்ணைப் பண்படுத்த உறையும் புழுவும் பூச்சிகளும் பறவைக்கங்கே உணவாகும்! பாடும் ராகம் நமதாகும்! விதையை மண்ணில் விதைத்த பின்னே விதைக்குத் தண்ணீர் உணவூட்ட இலைகள் அசைந்து செடி வளரும்! இனிய சூழல் உருவாகும்! பூத்து சிரிக்கும் நெல்மணிகள்! புலரும் ஆங்கே நல் அரிசி! மனிதர்க்கிங்கே உணவாகும்! மலரும் ஆங்கே புது உறவு! நெல்லின் உமியே உணவாக! நிதமும்…

கவிஞர் சோலை எழிலன்

கவிஞர் சோலை எழிலன்

  • Instagram
  • Facebook
  • X

Powered by
...
►
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
►
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
►
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
►
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
►
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by