மண்ணில் வாழும் மரங்கள் போல மாட்சி வேண்டுமே!

மணம் பரப்பும் மலர்கள் போல மகிமை வேண்டுமே!

எண்ணம் போல உயர்ந்த வாழ்வு அமைய வேண்டுமே!

இன்பம் என்றே சங்கநாதம் முழங்க வேண்டுமே!

கானம் பாடும் பறவைக்கென்றும் வேலி இல்லையே!

கற்ற கல்வி பயன்படாமல் போவதில்லையே!

மானம் காக்கும் மாந்தர் புகழ் மாய்வதில்லையே!

மாண்புடைய மனிதர் செயல் ஓய்வதில்லையே!

நல்லவர்கள் சோதனையால் நலிவதில்லையே!

நயன் உடையார் வேதனையால் தளர்வதில்லையே!

அல்லவையே செய்திடுவார் மகிழ்வதில்லையே!

ஆணவமே கொண்டிடவே அமைதியில்லையே!

உயிர்களெல்லாம் உய்த்திடவே உதவிடுவோமே!

உண்மை அதன் வழிநடந்து உயர்ந்திடுவோமே!

நன்மை நாளும் புரிந்து வாழ்வில் நலம் பெறுவோமே!

நாட்டில் இன்பம் மலர்ந்திடவே திறம் புரிவோமே!

(அதோ அந்த பறவை போல-பாடல் மெட்டு)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *