பூமழை தூவ தருக்களுமே இந்த

பூமியும் மணக்கிறதே!

பூரண நிலவோ தண்ணொளியால் இந்த

பூமியை நனைக்கிறதே!

மாயங்கள் செய்யும் தாரகைகளுமே

விழியதை இமைக்கிறதே!

மண்ணில் வளரும் பயிர்களுமே இங்கு

விதைகளை சுமக்கிறதே!

காவிரி நதியில் நீந்திடும் மீன்கள்

துள்ளிக் குதிக்கிறதே!

கரையினில் தவமே புரிந்திடும் கொக்கு

உள்ளம் களிக்கிறதே!

இசைமழை பொழிய கோவில் மணியால்

இனிமை சேர்கிறதே!

இயங்கிடும் உழைக்கும் மனிதர்களாலே

வளமை நேர்கிறதே!

மலர்ந்திடும் மலர்கள் மகிழ்ந்திடவே நறு

மணமதை வீசிடுதே!

மரக்கிளைதனிலே முயங்கிடும் கிளிகள்

தனிக்கதைப் பேசிடுதே!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *