நிலம் உழுது பயிர் வளர்க்க நிம்மதி ஆச்சு!
நெஞ்சில் நேயமுடன் உழைத்திடவே துயரதும் போச்சு!
வளம் நிறைய வையமிதில் நலமதும் ஆச்சு!
வாழ்க்கை வாழ்வதற்கே என்பதுவே உலகினர் பேச்சு!
பூமியிதே செழிப்பதுவும் இயற்கையினாலே!
புதுமையதும் நிகழ்வதுவும் மனிதரினாலே!
உலகமிதும் உயர்வதுவும் உழைப்பதனாலே!
உயிர்கள் மகிழ்வுடனே உய்ப்பதுவும் உழவதனாலே!
உழவதுவே உலகமிதில் உயர்தொழிலாமே!
உண்மையோடு செய்திடவே வளர்எழிலாமே!
பலகுடையும் பகிர்ந்திடுமே உழவதன் மாட்சி!
பாரினிலே நிகழ்வதுவே உழவரின் ஆட்சி!
உழுபவரைத் தொழுதிடவே உய்த்திடும் வாழ்வே!
உதவிகளே புரிந்திடவே விலகிடும் தாழ்வே!
உணவதனை வழங்குவதால் உழவே தலையே!
உலகைத் தாங்குவதால் உழவுக்கெதும் ஈடேஇலையே!
(ஏர் முனைக்கு நேர் இங்கே-பாடல் மெட்டு)

Leave a Reply