காலையில் துயில் எழுந்து
காளைகளின் துணையுடனே
துணையுடனே
கழனியை வந்தடைவோம் செல்லையா!
செல்லையா!
கதிரதும் வெளஞ்சிருக்கும் செல்லையா!
கதிரதை அறுத்திடுவோம்!
களத்துமேட்டில் அடித்திடுவோம்!
கண்ணிலே களங்கமில்லே! செல்லையா!
காலமகள் துணையிருப்பாள்! செல்லையா!
உழுது பயிர் வளர்ப்போம்!
உலகுயிர்க்கே படி அளப்போம்!
உண்மை வழி நடந்திடுவோம்! செல்லையா!
உள்ளமதில் கவலை இல்லே! செல்லையா!
எருதுகள் துணையுடனே
ஏற்றமதில் நீர் இறைப்போம்!
இரவும் பகலதுவும் செல்லையா!
எந்நாளும் உழைத்திருப்போம்! செல்லையா!
மண் பிசைந்து உழுதிடவே!
மணி மணியாய் நெல் விளையும்!
மண்ணுயிர்கள் மகிழ்ந்திடவே! செல்லையா!
மனமதும் நெகிழ்ந்திடுமே! செல்லையா!
பொன்நெல் விளைந்திடவே!
பூமகளும் துணை இருப்பாள்!
பொங்கிவரும் மழையதுவும்! செல்லையா!
போக்கிவிடும் துயரமதை! செல்லையா!
மண்ணிலே பொன் விளைத்தோம்!
மாநிலத்தைக் காத்திருந்தோம்!
மாறிவரும் காலமிதில் செல்லையா!
மறுகிடும் நிலையேனோ சொல்லையா!
(தாழையாம் பூமுடிச்சி-பாடல் மெட்டு)

Leave a Reply