ஏருபூட்டி எருதகட்டி இதமாக மண்உழுது
சேறுஓட்ட இல்லையினா பொன்னம்மா!-நாம்
சோறுபொங்க தோதுஇல்லே பொன்னம்மா!
ஆழமாக நெலம்உழுது ஆடியிலே வெதவெதச்சி
ஆத்துநீரப் பாச்சிவந்தா சின்னம்மா!-அது
ஐப்பசில வெளைஞ்சி நிக்கும் சின்னம்மா!
வயலக்கட்டி வரப்பக்கட்டி வரப்பில்நண்டு வலயக்கட்டி
வாய்க்காலில் நீர்பாய்ச்ச பொன்னம்மா!-நெல்லு
வகையாக வெளஞ்சிருக்கும் பொன்னம்மா!
ஆத்தோரம் வளந்து நிக்கும் மரங்களது தழய வெட்டி
சேத்திலதும் சேர்த்திடவே சின்னம்மா!-அங்கே
நேர்த்தியாக நெல் விளையும் சின்னம்மா!
வெளஞ்சநெல்லு கதிரறுத்து களஞ்சியத்தில் சேத்துவைக்க
வெசனமில்லே சோறப்பத்தி பொன்னம்மா!-நம்ப
விவசாயம் சோறு போடும் பொன்னம்மா!

Leave a Reply