சேத்திலே ஏர் உழுது
செந்தண்ணி அதப் பாய்ச்சி
நாத்து நட்டு கள பறிச்சா சின்னையா!-அது
நல்ல படி வெளஞ்சிருக்கு பொன்னையா!
சின்னையா! பொன்னையா!
மரமேறித் தழைய வெட்டி
மண்ணதுக்கு உரம் சேர்த்து
எருது கொண்டு உழவுசெய்தோம் சின்னையா! நெல்லு
ஏகமாக வெளஞ்சிருக்கு பொன்னையா!
சின்னையா! பொன்னையா!
பரம்படிச்சி பாத்திகட்டி
பக்குவமா வெத வெதச்சி
பருவம்பார்த்துப் பயிர் வளர்த்தோம் சின்னையா!-நன்மை
பயத்திடவே கொழிச்சிருக்கு பொன்னையா!
சின்னையா! பொன்னையா!
வளந்த நெல்லுக் கதிர் அறுத்து
வாகாகத் தாள் அடிச்சி
குவிச்சிடவே நெல்லையதும் சின்னையா!-அது
கொடுத்திடுமே லாபமதே பொன்னையா!
சின்னையா! பொன்னையா!
(ஆத்திலே தண்ணி வர-பாடல் மெட்டு)

Leave a Reply