மலையும் வனமும் சுனையும் நதியும் தோன்றியதெதற்காக!

மண்ணில் வாழும் உயிர்கள் அவற்றின் மாட்சிமை அதற்காக!

வானம் மேகம் ஆதவன் திங்கள் வையத்தில் எதற்காக!

வாழும் உயிர்கள் வளம் பல பெற்று வாழ்ந்திட அதற்காக!

நீர் வேண்டும்போது சுனை ஒன்று உண்டு!

நிம்மதி வேண்ட மனம் ஒன்று உண்டு!

உவப்பது வேண்ட உறவொன்று உண்டு!

உள்ளம் அதிலே கருணை பொங்கிட

உலகம் இதுவே நலமாகும்!

உண்மை நெறியில் வாழ்ந்திட இங்கே

உயர்வது வாழ்வில் நிலையாகும்!

நெற்றி வியர்வை நிலத்தில் விழவே உழைப்பது எதற்காக!

நேர்மை நிறைந்த நெஞ்சத்துடனே நிமிர்ந்த நல் நடை போட!

இரவும் பகலும் உறக்கம் இன்றி இயங்குவதெதற்காக!

இம்மை வாழ்வில் எல்லா உயிரும் இன்புற அதற்காக!

மனம் கொண்ட பேர்க்கு

வளம் இங்கு இல்லை!

வளம் கொண்ட பேர்க்கு

மனம் ஒன்று இல்லை!

உளம் கொண்ட நல்லோர்

உதவிட ஆங்கே!

நிலவிடும் அமைதி!

நிகழ்ந்திடும் மகிழ்வே!

மலையும் வனமும் சுனையும் நதியும் தோன்றியதெதற்காக!

மண்ணில் வாழும் உயிர்கள் அவற்றின் மாட்சிமை அதற்காக!

வானம் மேகம் ஆதவன் திங்கள் வையத்தில் எதற்காக!

வாழும் உயிர்கள் வளம் பல பெற்று வாழ்ந்திட அதற்காக!

(புத்தன் இயேசு காந்தி பிறந்தது-பாடல் மெட்டு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *