இதயமதில் ஒரு ராகம்!

இசைத்திடுதே சுக ராகம்!

இதயமதில் ஒரு ராகம்!

இசைத்திடுதே சுக ராகம்!

எங்கும் இயற்கை வளமது செழித்திட!

இன்பமதிலே மக்கள் திளைத்திட!

பொங்கும் மகிழ்வில் பூமியும் தழைத்திட!

புன்னகையதுவே மலர்ந்திடுமே!

மண்ணை மழையதும் உவந்தே அணைத்திட!

மாட்சிமையதுவால் மக்களை இணைத்திட!

மனமதில் மழையின் அருமை நினைத்திட!

மங்கலமதுவும் பொங்கிடுமே!

வாழை தென்னை கமுகென வளர்ந்திட!

வையம் இனிதாய் பசுமையில் செழித்திட! 

மேழிச்செல்வம் மேன்மை அடைந்திட!

மேதினியில் நலம் நிறைந்திடுமே!

இதயமதில் ஒரு ராகம்!

இசைத்திடுதே சுக ராகம்!

இதயமதில் ஒரு ராகம்!

இசைத்திடுதே சுக ராகம்!

(இயற்கை என்னும் இளைய கன்னி-பாடல் மெட்டு)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *