அம்மாடி!

மண்ணுக்குத் தாயின் மனசு!

மங்கலம் பொங்கும் மனசு!

மன்பதை காக்கும் வயசு!

மக்களை ஈர்க்கும் அரசு!

எண்ணிலா சுகங்களை வழங்கும்!-அதற்கு

ஈடு இணை இல்லை உலகில்!

கண்ணிலே மணியெனக் காக்கும்!

கற்றவர் மனதை ஊக்கும்!

பொன்னை அளிக்கும் தங்கச் சுரங்கம்!

பூமியில் வேறு இல்லை அரங்கம்!

மண்ணை மதித்து மக்கள் போற்ற

மாட்சிமை தந்திலங்கும் மாதா!

உணவு வழங்கி உயிர் காத்து

உவந்து உயிர்களைத் தாங்கி நிற்கும்

உன்னதம் நிறைந்த மண் அதனின்

உத்தம குணத்தை ஊரறியும்!

கடலும் மலையும்வான் நிலவும்

கதிரவன் ஒளியும் வனங்களுமாய்

காலம் முழுதும் காத்து நிற்கும்

கடமை மிகுந்த மண் மாதா!

அம்மாடி!

மண்ணுக்குத் தாயின் மனசு!

மங்கலம் பொங்கும் மனசு!

மன்பதை காக்கும் வயசு!

மன்னரை ஈர்க்கும் அரசு!

(அம்மாடி! பொன்னுக்குத் தங்க மனசு-பாடல் மெட்டு)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *