அணிலதுவும் மாம்பழத்தை ருசித்திடக் கண்டேனே!
அழகான பூஞ்சிட்டு தேன்குடித்திடக் கண்டேனே!
பூவிரித்த பாளையதும் பொலிந்திடக் கண்டேனே!
பு ன்னைமரத் தோப்பினிலே பூங்குயில் கண்டேனே!
நாகணவாய் நாட்டியமே ஆடிடக் கண்டேனே!
நண்டதுவும் வளையில்சேற்றை அடைத்திடக் கண்டேனே!
தேன் சிட்டு சிறகடித்துப் பறந்திடக் கண்டேனே!
தெம்மாங்குப் பாட்டினிலே இசைநயம் கண்டேனே!
மைனாக்கள் மையலுடன் மயங்கிடக் கண்டேனே!
மஞ்சள் சிட்டு கொஞ்சலுடன் குலவிடக் கண்டேனே!
மரக்கிளையில் தையல் சிட்டுப் பறவையைக் கண்டேனே!
மனம் வருடும் இயற்கையதில் மயக்கம் கொண்டேனே!
அணிலதுவும் மாம்பழத்தை ருசித்திடக் கண்டேனே!
அழகான பூஞ்சிட்டு தேன்குடித்திடக் கண்டேனே!
பூவிரித்த பாளையதும் பொலிந்திடக் கண்டேனே!
பு ன்னைமரத் தோப்பினிலே பூங்குயில் கண்டேனே!
(சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து-பாடல் மெட்டு)

Leave a Reply