காலை இளந்தென்றல் சொல்லும் சேதி என்னவோ!
நான்கு திசையிலும் நாங்கள் பிரிந்ததென்ன!
நாளை வரும் நல்ல நாள் என்று நானுமே
வாடி இருப்பதென்ன!-(காலை)
காலம் அது செய்த சோகமோ! இது துரோகமோ!
கண்கள் பனிக்கின்ற நேரமோ! இது மாறுமோ!
தேகம் அது செய்த வேள்வியோ! இது கேள்வியோ!
மேகம் மழை தரக் கூடுமோ! இது நாடுமோ!-(காலை)
பிரிவால் வாடிடும் பேதையர் எம் நெஞ்சைத் தேற்றிட!
அறிவாலே அதும் ஆகுமோ! அல்லல் துயரதும் தீருமோ!
பெற்று வளர்த்திட்ட பாசம் அது நெஞ்சில் மோதுதே!
பேணித் தழுவிட ஆசையினால் உளம் ஏங்குதே!-(காலை)
வாழும் பொழுதினில் வாதையினால் உளம் வாடவோ!
வாழ்க்கையிலே வந்து சேர்ந்திட நன்மையே கூடுமோ!
காலம் இதுவுமே நாள்படவே முறை மாறுமோ!
கருணையினால் நிலை மாறிடவே நலம் சேருமோ!-(காலை)
(வாழை மரம் கட்டி வாழ நினைத்ததென்ன-பாடல் மெட்டு)

Leave a Reply