தங்கம் உண்டு வைரம் உண்டு பூமியிலே!
பொங்கும் வளம் எங்கும் அதன் மேனியிலே!
கங்கையதும் காவிரியும் பாய்ந்திடுமே!
கானகத்தில் வெண்ணிலவு காய்ந்திடுமே!
வெய்யிலென்றும் மழையென்றும் அச்சமில்லையே!-எங்கும்
வெற்றியன்றி வேறெதுவும் மிச்சமில்லையே!
கைகளது துணை வரக் கவலையில்லை!
கையறு நிலைக்கு என்றும் வேலையில்லை!
கரும்பென்றும் வாழையென்றும் விளைந்திடுமே!
கண்ணில் கருணை மழையென்றும் பொழிந்திடுமே!
அரும்பிடும் மலர் மணம் கமழ்ந்திடுமே!
அவனியில் நலமதும் திகழ்ந்திடுமே!
விரும்பிடும் அனைத்துமே கிடைத்திடுமே!
வேண்டிட இயற்கைப் படைத்திடுமே!
உழைத்திட உயர்வதும் அடைந்திடவே
உளம் உவப்பதனால் தினம் மகிழ்ந்திடுமே!
தங்கம் உண்டு வைரம் உண்டு பூமியிலே!
பொங்கும் வளம் எங்கும் அதன் மேனியிலே!
கங்கையதும் காவிரியும் பாய்ந்திடுமே!
கானகத்தில் வெண்ணிலவு காய்ந்திடுமே!
(நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு-பாடல் மெட்டு)

Leave a Reply