உலகுயிரெல்லாம் உயிர்த்திட அவர்க்கே

உணவினைத் தந்திடும் தாவரமே!

உணவதுமின்றி உயிர்வளியுடனே

உய்த்திட உதவிடும் தாவரமே!

பறவைகள் பூச்சிகள் பாம்புகள் விலங்குகள்

பாரினில் வாழ்ந்திடும் பலப்பல நுண்ணுயிர்

தேறிய மனிதரும் திகழ்ந்திட நலமாய்

தேவைகள் அதுவே சேவை என்றாகிட

உலகுயிர் முதலாய்த் தோன்றிய நீரும்

உயிர்கள் உறைந்திட உவந்த நல்நிலமும்

உலகினுக் களித்து உயிர்களைக் காத்திடும்

உயரிய உயிரே தவரமாம்!

தாவென்று எவரும் வேண்டுதலின்றி

தந்திடும் வரமே தவரமாம்!

தரணியில் வாழும் உயிர்கள் யாவையும்

தனதாய்க் காத்திடும் தாவரமாம்!

தாவரம் அதுவே தரணியின் வரமாம்!

தாவரம் காத்திட வாழ்வது நலமாம்!

தன்னையே தந்து தாரணி காக்கும்

தாவரம் அதையே போற்றிடுவோமே!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *