தமிழ்க் காவியம் செய்யும் வல்லமை
தெய்வம் தந்த வரமல்லவோ!
மனமேடையில் கவி நாடகம்
நாளும் உந்தன் பேர்சொல்லவோ!
தென்றல் காற்றிலே மலர்மெல்லிதழ்
தேனின் சுவை தமிழல்லவோ!
சிந்தும் புன்னகை கண்டு யாருமே
சிந்தை மகிழ் சுகமல்லவோ!
மழை மேகமே பொழி நீருமே
மண்ணுக்கது இதமல்லவோ!
மஞ்சள் வானிலே ஒளிர் ஆதவன்
மண்ணுயிர்க்குத் துணையல்லவோ!
வண்ண ஓவியம் கண்டு உள்ளமே
அன்பில் கொஞ்சும்சுகம் நூறல்லவோ!
எண்ணம் ஆயிரம் நெஞ்சில் ஓடுமே
என்றும் இன்பம் தருமல்லவோ!
வாழ்விலே உயர் சாதனை
வாய்ப்பதொரு நலமல்லவோ!
நாளுமே மிகு நன்மையே
நாடுவதும் முறையல்லவோ!

Leave a Reply