வைரிசெட்டிப்பாளையம் மண்ணுல நாம் பொறந்ததால
வம்புதும்பு பண்ணமாட்டோம்!-நாங்க
வளமாக எந்நாளும் வாழ்ந்து காட்டுவோம்!
வந்தாரை வரவேற்று வகையான வழிவகுத்து
வளமாக வாழ்ந்திடவே வாழ்த்துக் கூறுவோம்!
மாருதில போனாலும் மாடு ஓட்டுவோம்!-நாங்க
மாஸ்டர் டிகிரி வாங்கினாலும் ஏரு பூட்டுவோம்!
அமெரிக்காவில் படிச்சாலும் ஐ.ஏ.எஸ்சே ஆனாலும்
அரிவாளை கையிலெடுத்து நெல்லு அறுப்போம்!-நாங்க
அநியாயமா எதுவும் செய்யமாட்டோம்!
கொல்லிமலை அடிவாரம் குட்டையிலே எலந்தப் பழம்
கூடையிலே பொருக்கி வந்து கூடி ருசிப்போம்!-நாங்க
கோடையிலே படிச்சாலும் கோட்டு சூட்டு போட்டாலும்
கொல்லங்குடி பாட்டையுமே கேட்டு ரசிப்போம்!-நம்ம
கல்லுவெட்டி சாமியையே வேண்டி இருப்போம்!
எங்க ஊரு ஏரியிலே எதிர்நீச்சல் போட்டதாலே
வங்கக்கடல் நீரிலேயும் நீச்சலடிப்போம்!-அங்கே
பொங்கிவரும் அலைகளையும் எதிர்த்து நீந்துவோம்!
தங்கச் சம்பா நெல்விளையும் எங்க வயலிலே-மாட்டுப்
பொங்கலிட்டே மகிழ்ந்திருப்போம் எந்த நாளுமே!

Leave a Reply