வான் பொழியும் மழையே! வளம் நிறைந்த மலையே!
கான் உறங்கும் தருவே! கடல் அலையும் அலையே!
உம்மை நம்பி இவ்வுலகம் உயிர்த்திடும் நிலைதானே!
உம்மைவிட்டால் எங்களுக்கு வேறுகதி யார்தானே!
இலை உறங்கும் பனியே! கிளை உறங்கும் கனியே!
மலர் சொரியும் தேனே! மதி பொழியும் ஒளியே!
உலகத்து உயிர்களையே காப்பதுமே நீர்தானே!
உம்மை விட்டால் எங்களுக்கு வேறு கதி யார்தானே!
தினம் உதிக்கும் கதிரே! தென்றல் தரும் சுகமே!
மணம் கமழும் மலரே! மதி மயக்கும் வெளியே!
நீங்கள் இந்த நிலத்திற்கு உயிர் தரும் நிலைதானே!
நெஞ்சமதில் பாசமுடன் நெருங்குதல் முறைதானே!
பயிர் வழங்கும் உணவே! பசுமை நிறை பொழிலே!
உயிர் வழங்கும் வளியே! உலகுயிரின் மொழியே!
பூமியிலே வாழும் எங்கள் போதகரும் நீர் தானே!
பூவனத்தின் நேசமுடன் பொத்தி எமைக் காப்பீரே!

Leave a Reply