வானம் முரசறைந்து வரவேற்கும்!
வண்டுகள் இசைபாடி சுகம்சேர்க்கும்!
கானம் அதுஉள்ளம் தனைஈர்க்கும்!
காலம் எந்நாளும் நமை ஏற்கும்!
நதிகள் பெருக்கெடுத்து நலம்பயக்கும்!
நானில உயிர்களதும் மனம்உவக்கும்!
நாளும் நன்னெறியே எமைஇயக்கும்!
நாடே நலமுறவே கைசிவக்கும்!
வனங்கள் செழிப்புறவே வளம் நிறையும்!
வறுமை துயரதுவும் தான் குறையும்!
வையம்தனில் உயிர்கள் தினம் மகிழும்!
வாய்மை நமதாக இடர் மறையும்!
ஏர்முனை சீர்பெறவே இனிதாகும்!
நேர்மை வழியதுவால் நலம் சேரும்!
ஊரார் போற்றும் நிலை உருவாகும்!
உலகே பின்தொடரும் நிலையாகும்!

Leave a Reply