மலைமீது வளர்கின்ற பொழில்சோலை கண்டேன்! -அதன்

மாறாத எழிற்கோலம் தனைக்கண்டு நின்றேன்!

வனம் இல்லாமல் புவிமீது உயிர் ஒன்றும் இல்லை! -அதன்

வளம் இன்றி யாரெவரும் உய்த்திடுதல் இல்லை!

பனிமலராடும் ஓடையிலே உறுமீன்கள் ஆட-அதன்

பாங்கான உருகண்டு பறவையதும் ஓட

பசுந்தளிர்க் கொடியும் இளவெயிலில் தானாக வாட-நனி

பகலவனும் வான்மீது தேரேறி வந்தான்!

பசும் பட்டாடை அதுவாகக் குளிர்சோலை மாற -அதன்

பகட்டான அழகாலே பல்லுயிரும் பேண

பகையின்றி உறவாடும் உயிர்களதும் நாண-மிகு

பாசம் நிறை உயிர்களுமே பண்பாடும் நாளும்!

(நான் மலரோடு தனியாக-பாடல் மெட்டு)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *