மரங்களோ பல வகை!

ஒவ்வொன்றும் ஒரு வகை!

மனங்களோ பல வகை!

ஒவ்வொன்றும் ஒரு வகை!

மரங்களெல்லாம் ஒன்றிணைந்து

வனமும் ஆகலாம்!

மனங்களெல்லாம் ஒன்றிணைய

வையம் ஆகலாம்!

வனமதுவே வாழ்வதற்குத்

துணையும் செய்யலாம்!

வையமதே வளம்பெறவே

வாழ்த்துப்   பாடலாம்!

தரணியிலே எவ்வுயிரும்

தனித்து வாழ்தல் இல்லை!

தனிமையிலே யாரெவரும்

இனிமை காண்பதில்லை!

இணைந்திடவே உயிர்கள்!

இன்பமதே விளையும்!

இசைந்திடவே மனங்கள்!

இனிமையதே நிகழும்!

மரங்களோ பல வகை!

ஒவ்வொன்றும் ஒரு வகை!

மனங்களோ பல வகை!

ஒவ்வொன்றும் ஒரு வகை!

(பறவைகள் பலவிதம்-பாடல் மெட்டு)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *