மனதினில் துயரதை மறைத்துவிடு!
மண்ணில் இயற்கையை நினைத்துவிடு!
தினம் ஒரு புதுமை நிகழ்த்திடும் இயற்கையில்
திளைத்திடவே உளம் களித்துவிடு!
கிழக்கே உதித்திடும் சூரியனே
விலக்கிட இருளதும் போய்விடுமே!
கிழமைகள் தோறும் நலமதுபுரிய
விளைந்திடும் துன்பம் நீங்கிடுமே!
மழையதும் மண்ணில் பொழிந்திடவே
மாநிலம் எங்கும் தழைத்திடுமே!
மனிதரும் உழைப்பால் உயர்ந்திட வாழ்வில்
மனமதில் இன்பம் விளைத்திடுமே!
வனமதில் தாவரம் செழித்திடவே
வையம் எங்கும் வளம்பெறுமே!
வாய்மையைக் காத்து வாழ்ந்திட உலகே
வரும் பொருளதுவால் நலம்பெறுமே!
(கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு-பாடல் மெட்டு)

Leave a Reply