மேகமே முழவதை முழங்க!-வண்ண

மின்னலின் நர்த்தனம் விண்ணிலே விளங்க!

தவளைகள் தாளம் இசைக்க!-இந்தத்

தரணியிதும் தழைத்திட பெய்திடும் மழையே!

உயிர்கட்கு உயிர்நீர் வழங்கி!-உலக

உயிர்களின் வாழ்விலே அமிழ்தென விளங்கி!

நதி ஆறு கடல் என்று பரவி!-இந்த

நாட்டிலே நன்மையே புரிந்திடும் மழையே!

நீரதனைப் பூசனை செய்து!-அதன்

நிலையினைக் காத்திட நேர்ந்திடும் நலமே!

நிறம் மணம் சுவை ஒன்றும் இன்றி!-இந்த

நீநிலம் நிலைத்திடப் பெய்திடும் மழையே!

மண்ணுயிர்கள் மனமதும் மகிழ!-உயர்

விண்ணின்று பொழிந்தே விந்தைகள் புரியும்!

மாரியாய் வாரி வழங்கி!-இந்த

மண்ணிலே பொன்னதை விளைத்திடும் மழையே!

(கல்லிலே கலை வண்ணம் கண்டான்-பாடல் மெட்டு)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *