மணிநீரும் மண்மீது உயிராகிட-மா
மழை பொழிய வனம் அதனின் துணை நாடினோம்!
கனிகொஞ்சும் பசுஞ்சோலை தனைக் காத்திட-அதன்
கருணையதால் உயிர்களுக்கு உணவாகுமே!
மருந்தாகி வளியாகி மண் காத்திடும்-இந்த
மாநிலத்தின் உயிர்களதைத்தான் காத்திடும்!
மலர் போன்ற மனம் கொண்ட மரம் காத்திட-நல்
மகிமையதால் மன்பதையில் வளம் பேணிடும்!
பெய்கின்ற மழைநீரைத் தான் பேணியே-இந்தப்
பேருலகைப் புறந்தருளும் வனமே அன்றோ!
பெருமைகள் பல சேர்க்கும் வகையால்-நனி
பெரிதினிது பயத்திருக்கும் குணமே அன்றோ!

Leave a Reply