பொன்னேர் கொண்டு பூமியை உழுதிட!
பொழிந்திடும் பொன்னும் மணியதுவும்!
தன்னிகரில்லாத் தகைமையினாலே
தாயாய் நம்மைக் காத்திடுவாள்!
வினை எதுமின்றி விதியதன் வழியே
தினமும் பூமி சுழன்றிடுமே!
நினைவது நன்றாய் நிகழ்ந்திட நன்மை!
அனைவரும் நலமாய் வாழ்ந்திடுவோம்!
உயிர்கள் பூமியில் உய்த்தே மகிழ்ந்திட!
உதவிடுவாள் பெரும் வளமதையே!
உணர்வாய் உயிராய்ப் பூமியியைப் பேணிட
உவந்திடுவாள் நம் அன்னையதாய்!
மண்ணுயிர் எல்லாம் மாட்சிமையுறவே
மனமது குளிர்வாள் மண்மாதா!
தன்னலம் கொண்டு தருக்கிடும் கொடியோர்!
தன்மையைக் கண்டு நகைத்திடுவாள்!
புவியதன் தோற்றம் அறிந்தவர் யார்!
புவியதன் பொறுமை அறியார் யார்!
புவியதைத் தொழுது போற்றிட உலகில்!
புலர்ந்திடும் ஆங்கே புதுயுகமே!

Leave a Reply