பகல் பிறந்ததும் இரவு சென்றதா!
இரவு வந்ததும் பகல் மறைந்ததா!
ஒளி பிறந்ததும் உருவம் வந்ததா!
உருவம் வந்ததும் ஒளி பிறந்ததா!
விதை முளைத்ததால் விருட்சம் வந்ததா!
விருட்சம் வந்ததும் விதை முளைத்ததா!
கேள்வி வந்ததும் பதில் கிடைத்ததா!
பதில் கிடைத்ததும் கேள்வி வந்ததா!
கல்வி கற்றபின் ஞானம் வந்ததா!
ஞானம் வந்ததும் கல்வி வந்ததா!
பண்பு வந்ததும் பணிவு வந்ததா!
பணிவு வந்ததும் பண்பு வந்ததா!
நிலவு வந்ததும் ஒளி பிறந்ததா!
ஒளி பிறந்ததும் நிலவு வந்ததா!
மலர் மலர்ந்ததும் மணம் கமழ்ந்ததா!
மணம் கமழ்ந்ததும் மலர் மலர்ந்ததா!
((கொடி அசைந்ததும் காற்று வந்ததா-பாடல் மெட்டு)

Leave a Reply