வாழை மரம் இருக்கு வாய்க்காலில் நீர் இருக்கு
வயல் உழுது பயிர் நடுவோம் பொன்னம்மா!-அது
வளர்ந்து நெல்லு மணி வழங்கும் பொன்னம்மா!
பொன்னம்மா! நீஎன் கண் அம்மா!
எருது மாடிருக்கு ஏர்க்கலப்பை வசம் இருக்கு
ஏர் உழுது நெல் நடுவோம் பொன்னம்மா!-அது
ஏற்றமுடன் விளைந்திடுமே பொன்னம்மா!
பொன்னம்மா! நீஎன் கண் அம்மா!
உடம்பில் தெம்பிருக்கு ஊக்கமதும் நெறஞ்சிருக்கு
ஊரார் பசியாற பொன்னம்மா!-நாம்
உணவதையே வழங்கிடுவோம் பொன்னம்மா!
பொன்னம்மா! நீஎன் கண் அம்மா!
தென்னை மரம் இருக்கு தேகமிதில் பலமிருக்கு
தேசமிதைக் காத்திடுவோம் பொன்னம்மா!-பிறர்
தேவையதை நிறைத்திடுவோம் பொன்னம்மா!
பொன்னம்மா! நீ என் கண் அம்மா!

Leave a Reply