எல்லையில்லா துயரம் புவியில் வந்தது ஏன்!

எண்ணிடுவாய் மனிதா இயல்பாய் இதயமதில்!

எல்லா வளங்களையும் இயற்கைப் படைத்ததுவே!

எல்லா உயிர்களுமே இனிதே மகிழ்ந்திடவே!-(எல்லை)

வல்லார் ஒரு சிலரே வளங்களை மடைமாற்ற

இல்லார் அழுகுரலே எங்கும் ஒலிக்கிறதே!

அழுகுரல் தனைக்கேட்டு அதிர்ச்சியில் இயற்கையுமே

அதிர்வலையால் உலகை ஆட்டிப் படைக்கிறதே!-(எல்லை)

வாழ்வில் மகிழ்வதையே வழங்கிடும் வளங்களையே

வகைதொகை இல்லாமல் அழித்திடவே மனிதர்!

வஞ்சினம் தான் கொண்டு எழும்பிய இயற்கையதே

வையத்து உயிர்களையே வதையதும் புரிகிறதே!-(எல்லை)

இயற்கையின் கொடையதையே எண்ணிடும் மாமனிதர்!

இன்பமதே ஓங்கி இயைந்திட நல் வழியே!

தழைத்திடுமே நலமே! தாரணி எங்கணுமே!

தயை புரிவாள் அன்னை இயற்கையும் புவிமீதே!-(எல்லை)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *